இலங்கையின் முன்னணி டயர் உற்பத்தியாளரான Ferentino Tyres, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் கன்வென்ஷன் சென்டரில் நவம்பர் 5-8 வரை நடபெற்ற மதிப்புமிக்க SEMA (Specialty Equipment Market Association) கண்காட்சி 2024 இல் தனது முத்திரையை பதித்துள்ளது. தரம், செயல்திறன் மற்றும் உலகளாவிய தரங்களுக்கு அதன் அர்ப்பணிப்புக்காக அறியப்பட்ட ஃபெரெண்டினோ, 12” முதல் 19” வரையிலான அதன் சமீபத்திய டயர்களைக் காட்சிப்படுத்தியது. இது ஒப்பிடமுடியாத நம்பகத்தன்மைக்கான வர்த்தக நாம வாக்குறுதியை வலுப்படுத்துகிறது. பலவிதமான ஓட்டுநர் நிலைமைகளுக்கு துல்லியமாக வடிவமைக்கப்பட்ட இந்த புதிய உற்பத்தி வரிசை 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கை சந்தையில் கிடைக்கும்.
உலகெங்கிலும் உள்ள 7,000க்கும் மேற்பட்ட உறுப்பினர் நிறுவனங்களைச் ஒன்றணைக்கும் வாகனத்திற்குப் பிந்தையசேவைத் துறையில் SEMA ஷோ ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த பிரத்தியேக வர்த்தக நிகழ்ச்சி, பொது மக்களுக்கு திறக்கப்படவில்லை, ஃபெரெண்டினோ போன்ற வர்த்தக நாமங்கள் தொழில்துறை தலைவர்களுடன் இணைவதற்கும், சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கும் ஒரு தனித்துவமான தளத்தை வழங்குகிறது. இந்த ஆண்டு நிகழ்வில், ஃபெரெண்டினோவின் குழு அதன் சமீபத்திய டயர் கண்டுபிடிப்புகளின் அனுபவங்களை வழங்கும், இது மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பிற்கான வரத்தக நாமத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
மதிப்புமிக்க உலகளாவிய பாதுகாப்பு அமைப்புகளின் சமீபத்திய சான்றிதழ்களுடன், ஃபெரெண்டினோ டயர்கள் வெற்றிகரமாக அமெரிக்கா கனடா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய மூன்று பெரிய டயர் சந்தைகளில் விரிவடைந்துள்ளது. அமெரிக்க . போக்குவரத்துத் துறையின் ஒப்புதல்கள், உயர்மட்டப் பாதுகாப்பு மற்றும் தரங்களுக்கான ஃபெரெண்டினோவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது, இது மிகவும் போட்டி நிறைந்த இந்தப் பிராந்தியங்களில் அதன் இருப்பை உறுதிப்படுத்துகிறது.
அதன் வட அமெரிக்க சான்றிதழுடன், ஃபெரெண்டினோ டயர்ஸ் பிரேசிலின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெட்ராலஜி, ஸ்டாண்டர்டைசேஷன் மற்றும் இன்டஸ்ட்ரியல் குவாலிட்டி (INMETRO), அத்துடன் ஐரோப்பாவிற்கான பொருளாதார ஆணையம் (ECE) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் தரநிலைப்படுத்தல் அமைப்பு (GSO) ஆகியவற்றிலிருந்து மதிப்புமிக்க சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. ) இந்த சாதனைகள் ஃபெரெண்டினோவை உலகளாவிய போட்டியாளராக நிலைநிறுத்துகின்றன, அனைத்து கண்டங்களிலும் உள்ள சந்தைகளுக்கு சேவை செய்ய தயாராக உள்ளது.
டயர் பரிமாணம் மற்றும் அதிவேக சோதனைகள் போன்ற அத்தியாவசிய பாதுகாப்பு அளவுருக்களை உள்ளடக்கியது, ரோலிங் எதிர்ப்பு, சத்தம் மற்றும் ஈரலிப்பின்போதான பிடிமானம் போன்ற செயல்திறன் அளவீடுகளுடன், இந்த நற்சான்றிதழ்கள் தரத்தில் ஃபெரெண்டினோவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த மைல்கல் உற்பத்தி குறித்து கருத்து தெரிவித்த ஃபெரெண்டினோ டயர் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் லஹிரு லொகுவிதான, “உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் இந்த சான்றிதழ்கள் தரம் மற்றும் பாதுகாப்பிற்கான ஃபெரெண்டினோவின் அர்ப்பணிப்பை வலுவாக உறுதிப்படுத்துகின்றன. எமது புதிய வகை டயர்களின் அறிமுகமானது எமது வர்த்தக நாமத்தின் உலகளாவிய ஈர்ப்பை அதிகரிப்பது மட்டுமன்றி இந்த சவாலான பொருளாதாரக் காலங்களில் இலங்கைக்கு மிகவும் தேவையான அந்நிய செலாவணியைக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றுகின்றது.