இலங்கையின் முன்னணியானதும், பிரபலமானதுமான போஷாக்கு மிக்க தானிய உணவான CBL சமபோஷவினால் வலுவூட்டப்பட்டு நான்காவது தடவையாகவும் மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் 2022 நடத்தப்படுகிறது. இதில் முதலாவது போட்டி வடமத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு அண்மையில் அநுராதபுரம் பொது மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை வீர வீராங்கனைகளைத் தேசிய மட்டத்துக்குக் கொண்டு செல்வதை நோக்காகக் கொண்டு மாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் இந்த விளையாட்டுப் போட்டி வடமத்திய மாகாணத்துக்கு மேலதிகமாக ஊவா, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஒக்டோபர் மாதத்தில் தனித்தனியாக நடத்தப்படுகிறது.
இதில் 70ற்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டதுடன், வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த 450 பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2200ற்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் பங்கேற்றியிருந்தனர்.
முதலாவதாக முடிவடைந்த வடமத்திய மாகாணப் பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் அநுராதபுர மத்திய மகா வித்தியாலயம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரண்டு பிரிவுகளிலும் சம்பியன் பட்டத்தைப் பெற்றுக்கொண்டது. பொலனறுவை ரோயல் மத்திய மகா வித்தியாலயம் ஆண்களுக்கான பிரிவில் இரண்டாவது இடத்தையும், பெண்களுக்கான இரண்டாவது இடத்தை தம்புத்தேகம மத்திய மகா வித்தியாலயமும் வெற்றிகொண்டன.
12 வயதுக்குக் கீழ்பட்ட பிரிவில் நீளம் பாய்தல் போட்டியில் ஆண்கள் பிரிவில் சிறந்த வீரருக்கான விருதை அநுராதபுரம் ஹ_ருலுமீகஹா பிட்டிய வித்தியாலயத்தைச் சேர்ந்த எ.எம்.எம்.லஹிரு பண்டார தட்டிச்சென்றார். இவர் 4.33 மீட்டர் தூரத்தைப் பதிவுசெய்திருந்தார். இந்தப் போட்டியில் பெண்கள் பிரிவில் தம்புத்தேகம மத்திய மகாவித்தியாலயத்தில் எம்.பி.பஹன்டித்த சிறந்த வீராங்கனைக்கான விருதைப் பெற்றுச் சென்றதுடன், இவர் 4.26 மீட்டர் நீளத்தைக் கடந்திருந்தார்.
14 வயதுக்குக் கீழ்ப்பட்ட பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் ஆண்களுக்கான போட்டிகளில் 11.80 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து திறமையை வெளிக்காட்டிய பொலுனறுவை விஜித மகா வித்தியாலயத்தின் மாணவன் யூ.ஜீ.பி.சங்கல்பன சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றுக்கொண்டார். 14 வயதுக்குட்பட்ட பிரிவில் நீளந்தாண்டுதல் போட்டிகளில் சிறந்த வீராங்கனைக்கான விருதை ஹிங்குராங்கொட பக்கமூன தேசிய பாடசாலையின் மாணவி டபிள்யூ.எம்.கே.ஜீ.எச்.மதுஷனி வெற்றிகொண்டதுடன், இவர் 4.52 மீட்டர் தூரத்தைப் பாய்ந்து தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.
16 வயதுக்கு உட்பட்ட வயதுப் பிரிவினருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ஆண்களுக்கான சிறந்த வீரருக்கான விருதை அநுராதபுரம் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த எம்.உதந்த ஜயசிங்ஹ பெற்றுக் கொண்டதுடன், சிறந்த வீராங்கனைக்கான விருதை அநுராதபுரம் சித்தார்த்த மகா வித்தியாலயத்தின் டபிள்யூ.எம்.வி.கணேஷிகா விக்ரமசிங்க பெற்றுக்கொண்டார். உதந்த 15.20 மீட்டத் தூரத்துக்கு ஈட்டியை எறிந்திருந்ததுடன், கணேஷிகா 4.72 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்திருந்தார்.
18 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கான நீளம் பாய்தல் போட்டியில் ஆண்கள் பிரிவில் சிற்நத வீரருக்கான விருது திம்புலாகல அசேலபுல மகா வித்தியாலயத்தின் டப்.எம்.ஷிவந்தவுக்குக் கிடைத்ததுடன், சிறந்த வீராங்கனைக்கா விருதை அநுராதபுரம் மகா வித்தியாலயத்தின் சமத்கா சத்சரனி வெற்றிகொண்டார். இவர்களின் நீளம் பாய்தல் புள்ளிகள் முறையே 6.27 மீட்டர் மற்றும் 4.89 மீட்டராப் பதிவாகியிருந்தன.
நீளம் பாய்தல் போட்டியில் 20 வயதுக்கு உட்பட்ட வயதுப் பிரிவின் கீழ் சிறந்த வீரருக்கான விருதை பொலன்னறுவை கலமுன மகா வித்தியாலயத்தின் கே.எம்.கே.சதுமின கருணாரத்ன வெற்றிகொண்டதுடன், இவர் 7.19 மீட்டர் நீளத்தைத் தாண்டியிருந்தார். நீளம் பாய்தல் போட்டியில் பெண்கள் பிரிவில் சிறந்த வீராங்கனைக்கான விருதை அநுராதபுரம் மத்திய வித்தியாலயத்தின் எஸ்.பி.ஏ.எல்.நிமேஷிகா சந்திரசேன வெற்றிகொண்டதுடன், இவர் 4.80 மீட்டர் தூரத்தைக் கடந்திருந்தார்.
CBL சமபோஷ என்பது CBL குழுமத்தின் முழுச் சொந்தமான துணை நிறுவனமான Plenty Foods (Pvt) Limited இன் முதன்மை தயாரிப்பு வர்த்தகநாமமாகும். இலங்கையின் உணவு உற்பத்தித் துறையில் முன்னணி உள்ளூர் நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் CBL குழுமம், நுகர்வோரின் தேவைக்கு ஏற்ற வகையில் விரிவான உற்பத்திகளைச் சந்தைக்கு வழங்கி வருவதுடன், சகல தயாரிப்பு செயற்பாடுகளின் உடாக விநியோகச் செயற்பாடுகளுடன் தொடர்புபடும் பங்குதாரர்களையும் வலுப்படுத்துவதற்குத் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் நிறுவனமாகும்.