பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (பீப்பள்ஸ் லீசிங்), இலங்கையின் பிரமாண்டமான மற்றும் வரலாற்று மத விழாக்களில் ஒன்றான கண்டி எசெல பெரஹெரவிற்கு அண்மையில் அனுசரணை வழங்குகிறது. “பல்லின் திருவிழா” என்று அழைக்கப்படும் எசல பெரஹெரா, புத்தபெருமானின் புனிதமான பல்லுக்குக்கு மரியாதை செலுத்துவதற்காக நடத்தப்படுகிறது.
பீப்பள்ஸ் லீசிங் என்பது இலங்கையில் நம்பகமான வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும். இது அரசுக்கு சொந்தமான மக்கள் வங்கியின் முதன்மை துணை நிறுவனமாகும், இது நாட்டின் மிகப்பெரிய அரசுக்கு சொந்தமான வங்கிகளில் ஒன்றாகும். பீப்பள்ஸ் லீசிங் 1996 ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்ததோடு, நிறுவனம் 2011ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இன்று, பீப்பள்ஸ் லீசிங், பங்களாதேஷில் வெளிநாட்டு முயற்சி உட்பட ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்பட்ட வங்கி அல்லாத நிதிய சக்தியாக வளர்ந்துள்ளது.