இலங்கையர்களுக்கு பாதுகாப்பை பெற்றுக் கொடுக்கும் புரட்சிகரமான நடவடிக்கையாக, டிஜிட்டல் மயமாக்கலில் முன்னிலையில் திகழும் யூனியன் அஷ்யூரன்ஸ், இலங்கையின் முன்னணி டிஜிட்டல் வங்கியியல் அனுபவமான நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் FriMi உடன் கைகோர்த்துள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் Clicklife ஒன்லைன் தீர்வை மக்கள் மத்தியில் இலகுவாகக் கொண்டு செல்லக்கூடிய வகையில் இந்தக் கைகோர்ப்பு அமைந்துள்ளது. சௌகரியம் மற்றும் அணுகல்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தி புதிய தலைமுறை காப்புறுதித் தீர்வுகளை வழங்கி, இலங்கையர்களின் கனவுகளுக்கு வலுச்சேர்ப்பதாக இந்த கைகோர்ப்பு அமைந்துள்ளது.
சில நிமிடங்களினுள் FriMi appஇனூடாக Clicklife Online தீர்வை கொள்வனவு செய்வதற்கான பங்காண்மையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. புரட்சிகரமான தீர்வாக அமைந்துள்ள Clicklife, 100% கடதாசி பாவனை அற்றதாகவும், காப்புறுதியைக் கொள்வனவு செய்வதற்கு இலகுவானதும், சாத்தியமானதுமான முறையாக அமைந்துள்ளது. நாளொன்றுக்கு ரூ. 23 க்கு ஆரம்பித்து, ரூ. 4 மில்லியன் வரையான பாதுகாப்பை வழங்குகின்றது.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பாங்கசூரன்ஸ் அதிகாரி விந்தியா கூரே கருத்துத் தெரிவிக்கையில், “டிஜிட்டல் கைகோர்ப்பாக FriMi உடன் இணைந்துள்ளதனூடாக, இலங்கையில் ஆயுள் காப்புறுதியின் சென்றடைவை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும். எமது வர்த்தக நாமப் பெறுமதிகளில் வாடிக்கையாளர்கள் மையப்படுத்திய செயற்பாடு என்பது எப்போதும் முன்னிலை பெறுவதுடன், இந்தத் திட்டத்தினூடாக, டிஜிட்டல் ஆற்றல்களினூடாக எம்மால் புதிய அனுபவத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
கூரே தொடர்ந்து குறிப்பிடுகையில், “இலங்கையில் ஆயுள் காப்புறுதியைப் பிரபல்யப்படுத்துவதற்கு இந்த பங்காண்மை முக்கிய பங்களிப்பை வழங்கும். Clicklife ஒன்லைன் திட்டத்தினூடாக வழங்கப்படும் இலகுவான அணுகலினூடாக, மக்கள் மத்தியில் பெருமளவான பிரிவுகளுக்கிடையே பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்தும். எமது டிஜிட்டல் மயமாக்கல் செயன்முறையில் புதிய மைல்கல்லாக இது அமைந்திருப்பதுடன், வாடிக்கையாளர்களுகு்கு தொழிற்துறையின் முன்னணி டிஜிட்டல் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்கு உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியுடன் தந்திரோபாய பாங்கசூரன்ஸ் பங்காண்மையை யூனியன் அஷ்யூரன்ஸ் ஏற்கனவே கொண்டுள்ளதுடன், FriMi உடனான இந்த புதிய திட்டத்தினூடாக அந்த பங்காண்மைக்கு மேலும் வலிமை சேர்க்கப்படும்.
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் டிஜிட்டல் வங்கியியல் மற்றும் கையகப்படுத்தல்கள் பிரிவின் சிரேஷ்ட உப தலைவர் ரந்தில் பொதேஜு குறிப்பிடுகையில், “யூனியன் அஷ்யூரன்சும், வங்கியும் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் புத்தாக்கங்களின் அனுகூலங்களைப் பெற்றுக் கொடுக்கும் பொதுவான நோக்கத்தைக் கொண்டுள்ளன. எமது கைகோர்ப்பினூடாக, இரு நிறுவனங்களினதும் வியாபார வளர்ச்சிக்கு வலிமை சேர்க்கப்படுவதுடன், டிஜிட்டல் பொருளாதாரத்தை செயற்படுத்தி, வாடிக்கையாளர்களின் வாழ்க்கைக்கு எளிமையையும், செளகரியத்தையும் பெற்றுக் கொடுப்பதாக அமைந்திருக்கும்.” என்றார்.
இந்த புதிய திட்டத்தினூடதாக, இந்த உறுதியற்ற மற்றும் சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் காப்புறுதியை அணுகுவதில் உதவிகளை வழங்குவதாக அமைந்துள்ளது. பாரம்பரிய நேரடி இடையீடுகள் பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், டிஜிட்டல் மயமாக்கத்தில் முன்னிலையில் திகழும் யூனியன் அஷ்யூரன்சுக்க, தடங்கல்களின்றி சேவைகளைப் பெற்றுக் கொடுக்க உதவியாக அமைந்துள்ளது. ஒப்பற்ற டிஜிட்டல் அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் காலத்தின் தேவையை நிவர்த்தி செய்வதாக அமைந்துள்ளது.கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 17.9 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 49.7 பில்லியனையும், 2022 மார்ச் மாதமளவில் முதலீட்டு இலாகாவாக ரூ. 58.5 பில்லியனைக் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், பல வருடங்களாக தொடர்ச்சியாக Great Place to Work© இனால் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாக தரப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளதுடன், இலங்கையில் மில்லியன் டொலர் வட்ட மேசையில் (MDRT) முதல்தரத்தில் திகழ்கின்றது.