அதிநவீன Gastroenterology & Endoscopy சேவையை அறிமுகப்படுத்தும் நைன்வெல்ஸ் மருத்துவமனை

Share with your friend

பெண்கள் மற்றும் சிறுவர்களின் சுகாதாரப் பராமரிப்பில் இலங்கையின் முன்னணி நிறுவனமாக புகழ்பெற்று விளங்கும் நைன்வெல்ஸ் மருத்துவமனை, அதிநவீன எண்டோஸ்கோபி வசதியுடனான சமிபாட்டுத்தொகுதி பிரச்சினைகள் தொடர்பான gastroenterology & endoscopy சேவையை அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறது. இந்த முக்கிய மைல்கல்லானது, தங்களது சேவைகளை முழுக் குடும்பத்திற்கும் ஏற்றவாறு விரிவுபடுத்தும் நைன்வெல்ஸ் மருத்துவமனையின் பயணத்தில் மற்றொரு படியைக் குறிக்கிறது. இதன் ஊடாக சமிபாட்டுத் தொகுதியில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மேம்பட்ட நோயறிதல் மற்றும் சிகிச்சைகளுக்கான தீர்வுகளை அது வழங்குகிறது.

இந்தப் பிரிவானது, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கொண்டமைந்துள்ளது. இதில் உலகத்தரம் வாய்ந்த சுகாதார பராமரிப்பை வழங்க உறுதிகொண்டுள்ள மிகவும் திறமையான gastroenterologists (சமிபாட்டுத் தொகுதி தொடர்பான நிபுணர்கள்), அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவினர் பணியாற்றுகின்றனர். எண்டோஸ்கோபிக் நடைமுறையானது, உடலில் குறைந்தபட்ச வழி ஒன்றின் ஊடாக மேற்கொள்ளும் சிகிச்சை செயற்பாடு என்பதோடு, இங்கு acid reflux, gastritis, polyps உள்ளிட்ட நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண் போன்ற சமிபாட்டுப் பிரச்சினைகள் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற நிலைகளைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இந்த சேவையின் அறிமுகம் தொடர்பில் கருத்து வெளியிட்ட நைன்வெல்ஸ் மருத்துவமனை நிர்வாகம், “பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆரோக்கியத்தில் நாம் வழங்கும் ஒப்பிட முடியாத பராமரிப்பு காரணமாக குடும்பங்களின் நம்பிக்கையைப் நாம் வென்றுள்ளதால், முழுக் குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் எமது சேவைகளை தற்போது விரிவுபடுத்துவதில் நாம் பெருமை கொள்கிறோம். எண்டோஸ்கோபி பிரிவானது, நோயாளியின் சுகவாழ்வை முன்னுரிமைப்படுத்தும் மேம்பட்ட நோயறிதல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்புடன், ஒரே கூரையின் கீழ் முழுமையான சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதற்கான எமது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.” என்றார்.

இப்புதிய பிரிவானது, மருத்துவமனையின் 3ஆவது மாடியில் உரிய வசதிகளுடன் மூலோபாய ரீதியாக அமைந்துள்ளதுடன், நோயாளியின் பாதுகாப்பு மற்றும் வசதியை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. புத்தம் புதிய நவீன உபகரணங்கள், அர்ப்பணிக்கப்பட்ட சிறந்த மீட்டெடுப்பு பகுதி வசதிகளுடன், முறையான சுகாதாரம் மற்றும் நோய்த் தொற்று கட்டுப்பாட்டு நெறிமுறைகளைக் கொண்ட இந்த பிரிவானது, சமிபாட்டுத் தொகுதியின் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதி தொடர்பான upper & lower gastrointestinal endoscopy (gastroscopy) colonoscopy, therapeutic interventions உள்ளிட்ட விரிவான சேவைகளை வழங்குகிறது.

நைன்வெல்ஸ் மருத்துவமனை அதன் சேவைகளை விரிவுபடுத்தும் அதே வேளையில், மிக உயர்ந்த தரங்களைப் பராமரித்தலுக்காக பெயர் பெற்றுள்ள இம்மருத்துவமனை பெண்கள் மற்றும் சிறுவர் பராமரிப்பு தொடர்பில் அது கொண்டுள்ள உறுதிப்பாட்டில் அசைக்க முடியாத இடத்தை பேணி வருகின்றது. Gastroenterology and Endoscopy பிரிவானது, நோயாளிகள் எதிர்பார்க்கும் அதே அர்ப்பணிப்பு மற்றும் விடயங்களுக்கான கவனம் செலுத்துவதை, மருத்துவமனை கொண்டுள்ள சிறந்த பாரம்பரியத்துடன் பிரதிபலிக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த பிரிவின் அறிமுகமானது, முழுக் குடும்பத்திற்கும் நம்பகமான சுகாதார சேவை வழங்குநராக இருக்க வேண்டும் எனும் நைன்வெல்ஸ் மருத்துவமனையின் பரந்த தொலைநோக்குப் பார்வையின் ஒரு அங்கமாகும். அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் நிபுணத்துவத்துடன் அதிநவீன தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலம், இலங்கை சமூகத்திற்கு அவசியமான சுகாதாரம் தொடர்பான விசேடத்துவத்தில் மருத்துவமனை புதிய அளவுகோல்களை தொடர்ச்சியாக அமைத்து வருகிறது.


Share with your friend