அன்பான கிரிகெட் அனுபவத்தை முதலில் வழங்க லசித் மாலிங்கவுடன் இணையும் Rakuten Viber

Share with your friend

உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் அற்புதமான அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் கிரிக்கெட் அனுபவத்தை வழங்குவதற்காக இலங்கை கிரிகெட் ஜாம்பவான் லசித் மாலிங்க உடன் Rakuten Viber கூட்டாண்மையை ஏற்படுத்தியிருப்தையிட்டு கிரிகெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடையலாம். அனைவராலும் அதிகம் விரும்பப்படும் பிரபல்யமான குறுஞ்செய்தித் தளம் முன்னணி வேகப்பந்து வீச்சாளருடன் இணைந்து கிரிகெட் அனுபவம் குறித்த தகவல்களை வழங்கவுள்ளது.

வழக்கத்திற்கு மாறான பந்துவீசும் ஆற்றல் மற்றும் கால்விரல்களை நசுக்கக் கூடிய வகையிலான யோக்கர் பந்து வீசும் திறன் காரணமாக ‘ஸ்லிங் மாலிங்க’ என அழைக்கப்படும் மாலிங்க, 2004ஆம் ஆண்டு தனது சர்வதேசப் போட்டிகளை ஆரம்பித்ததுடன், 338 விக்கெட்டுக்களைப் பெற்று இலங்கையின் ஒருநாள் சர்வதேசப் போட்டி வரலாற்றில் அதிகூடிய விக்கெட்டுக்களைப் பெற்ற மூன்றாவது நபராகவும் அவர் இடம்பிடித்தார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்ற பந்துவீச்சாளர்களில் சிறந்த பந்துவீச்சாளராக இவர் அறியப்பட்டதுடன், மும்பாய் இந்தியன் அணிக்காக 122 போட்டிகளில் விளையாடி 120 விக்கட்டுக்களைக் கைப்பற்றி இந்தியன் பிரீமியர் லீக் சுற்றுப்போட்டி வரலாற்றில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

Viber இன் கிரிக்கெட் ரசிகர்கள் மாலிங்க தொடர்பான அம்சங்களைக் கொண்ட ஸ்டிக்கர் பொதிகளை அனுப்புவதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்வதுடன், உத்தியோகபூர்வ சமூகக் குழுக்களில் இணைந்து அவருடைய நாளாந்த வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்து கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள முடியும். Viber இற்கும் மாலிங்கவுக்கும் இடையிலான இந்தக் கூட்டாண்மையானது Viber இன் பிந்திய தொழில்நுட்பமான AR இனால் பலப்படுத்தப்பட்ட மாலிங்க தொடர்பான லென்ஸ்களுக்கு இடமளிக்கிறது. உலகக் கிண்ணப் போட்டி காலத்தில் Viber Cricket Talks Community ஊடாக வேகப்பந்து ஜாம்பவான் மாலிங்கவுடன் ஈடுபாடுகளை ஏற்படுத்த முடியும். இதில் மாலிங்க தொடர்பான லென்சைப் பயன்படுத்தி அவருக்காக ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் பத்து அதிஷ்டசாலி ரசிகர்கள், புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருடன் வீடியோ அழைப்பில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

அவருடைய உத்தியோகபூர்வ Community இல் நாளாந்தம் தனித்துவமாக நடத்தப்படும் வினாடிவினாப் போட்டிகளில் கலந்துகொண்டு மாலிங்கவினால் கையெழுத்திடப்பட்ட ஜேர்சியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பையும் Viber ரசிகர்கள் பெற்றுக்கொள்வார்கள். 

“எனது ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்க, Viber உடன் கூட்டாண்மையை ஏற்படுத்துவதில் நான் மிகவும் ஆர்வமாகவுள்ளேன். எனது ரசிகர்கள் மற்றும்  என்மீது அன்புகொண்டுள்ள அனைவருடனும் தொடர்பில் இருப்பதற்கு இது ஒரு சிறந்த தளமாக அமையும். எனது Community இல் நான் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிரவுள்ளேன். மேலும் எனது ரசிகர்களுக்கு மேலும் பல வேடிக்கையான அம்சங்கள் உள்ளன. எனவே என்னைப் பின்தொடருங்கள்” என Viber உடனான தனது கூட்டாண்மை பற்றிக் கருத்துத் தெரிவித்த மாலிங்க குறிப்பிட்டார்.

“மாலிங்க தனது வாழ்க்கையில் ரசிகர்களுக்குக் அளித்த மகிழ்ச்சியைக் கொண்டாடவும், அதனைப் பகிர்ந்து கொள்வதற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என நாம் கருதினோம்” என இன் சிரேஷ்ட பணிப்பாளர் டேவிட் சே தெரிவித்தார். “பொழுதுபோக்கின் புதிய அம்சங்களை பயன்படுத்துனர்கள் கண்டறியும் வகையில், எங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் எப்போதும் பணியாற்றி வருகிறோம். மேலும் Viber இல் கிரிக்கெட் ரசிகர்கள் ஒட்டுமொத்த கிரிக்கெட் அனுபவத்தை அனுபவிக்க மாலிங்கவுடன் கூட்டு சேர்ந்ததில் நாங்கள் உண்மையில் பெருமையடைகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

சந்தாதாரர்களின் அனுபவத்தை உயர்த்தும் நோக்கில் குறிப்பாக கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு பல வருடங்களாக பணியாற்றி வருகிறது. AR லென்ஸ்களுடன் பலப்படுத்தப்பட்ட“Cricket Talks Community,” போன்ற அம்சங்களை ஆர்வத்துடன் மக்கள் ஏற்றுக்கொண்டனர். Viber தொடர்ந்தும் புத்தாக்கத்தை உருவாக்கி பரிமணித்து வருவதால் குறுஞ்செய்திகளை அனுப்பும் தளமாக இது வளர்ச்சிகண்டு வருகிறது.

கிரிக்கெட்டின் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்கும், பிரபலமான அனுபவம் மிக்க வேகப்பந்து வீச்சாளரின் வித்தையை மீண்டும் கண்டு மகிழ்வதற்கும் Viber இன் ஸ்லிங்-மாலிங்கவுடன் இணைந்துகொள்ளுங்கள்.

Rakuten Viber பற்றி : 

Rakuten Viber நாங்கள் மக்களை இணைக்கிறோம். அவர்கள் யார், அல்லது அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது முக்கியமல்ல. எங்கள் உலகளாவிய பயனர் தளம் ஒருவருக்கொருவர் அரட்டைகள், வீடியோ அழைப்புகள், குழு செய்தி அனுப்புதல் மற்றும் அவர்களுக்கு பிடித்த வர்த்தகநாமங்கள் மற்றும் பிரபலங்களுடன் புதுப்பிப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற பல அம்சங்களுக்கான அணுகலைக் கொண்டுள்ளது. எங்கள் பயனர்களின் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ள பாதுகாப்பான மற்றும் இலவச சூழல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். 

Rakuten Viber, Rakuten Inc இன் ஒரு பகுதியாகும். ஈ-வர்த்தகம் மற்றும் நிதிச் சேவையில் உலகின் முன்னணியாளராகும். இது FC Barcelona வின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு சனல் என்பதுடன் Golden State Warriors அதிகாரப்பூர்வ உடனடி செய்தி மற்றும் அழைப்பு பயன்பாட்டுப் பங்காளராகும்.

மேலதிக தகவல்களுக்கு lana@viber.comஊடாக எம்மைத் தொடர்புகொள்ளவும். 


Share with your friend