அன்று முதல் இன்று வரை – P&S உருவாக்கிய 123 வருட ருசியான நினைவுகள்

Share with your friend

இலங்கையின் மிகப் பிரபலமான உள்நாட்டு வர்த்தக நாமங்களில் ஒன்றாகத் திகழும் P&S (Perera & Sons), 2025 ஜூலை 17ஆம் திகதி தனது 123ஆவது வருட நிறைவை சிறப்பாகக் கொண்டாடுகிறது. 1902ஆம் ஆண்டு ஒரு சாதாரண பேக்கரியாக ஆரம்பித்த P&S, இன்று நாடெங்கிலும் 227 இற்கும் மேற்பட்ட கிளைகள் வழியாக மக்கள் வாழ்வின் ஓர் அங்கமாக விளங்கும் நாடளாவிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. தலைமுறைகளின் தொடர்ச்சியான நேசமும் நம்பிக்கையும் P&S மீது இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், தங்கள் பெற்றோர்களும் மூதாதையர்களும் நேசித்த அந்த இனிய ருசிகளை இன்றைய இளைய தலைமுறையும் தங்களுடையதாக்கிக் கொண்டுள்ளனர். இத்தனை வளர்ச்சிகளை பெற்றுள்ள போதிலும் P&S இன் உள்ளார்ந்த உயிரோட்டம் இன்று வரை மாறவில்லை. நேர்மையுடனும், நம்பிக்கையுடனும், சுவைமிக்க உணவுகளை வழங்குவதில் அது முன்னிலை வகிக்கின்றது.

இது குறித்து P&S நிறுவனத்தின் 4ஆவது தலைமுறையைச் சேர்ந்த முகாமையாளர் கிஹான் பெரேரா கருத்து வெளியிடுகையில், “இந்த வருட நிறைவு விழாவானது எமக்கு தனித்துவமானதாகும். இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எம்மை ஆதரித்த மக்களைப் பற்றியது. எங்களைத் தங்கள் வீடுகளுக்கு அழைத்து வந்த வாடிக்கையாளர்கள், எங்கள் பண்பாட்டு மதிப்புகளை உயிர்ப்பிக்க உறுதியுடன் உள்ள எமது ஊழியர்கள் மற்றும் நாம் இணைந்து வளர்ந்த சமூகங்களைப் பற்றியது. தற்போது, 5ஆவது தலைமுறையும் எங்கள் குடும்ப வியாபாரத்தில் இணைந்துள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். எமது பயணம் எப்போதும் புதிதுப் புதிதாக மாறிக்கொண்டே இருக்கின்ற போதிலும், P&S இன் உயிரோட்டம் எப்போதும் போன்று, எளிமை, உள்ளூர் சார்பு, உண்மை ஆகியவற்றுடன் பயணத்தை தொடர்கிறது. 123 வருடங்களைக் கடந்த பின்னரும், தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து, எதிர்பார்ப்பையும் பொருத்தத்தையும் P&S ஒன்றுடன் ஒன்று கலக்கச் செய்கிறது” என்றார்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, அமைதியாக அல்லது வழக்கமாக இடம்பெறும் அன்றாடக் தருணங்களில் P&S ஒரு அங்கமாக இருந்து வருகிறது. அது பாடசாலை இடைவேளையில் ஒரு சிறுவனின் கையிலுள்ள பன் ஆகவோ, குடும்ப சந்திப்புகளில் பகிரும் சிற்றுண்டியாகவோ, பிறந்த நாள் மேசையில் உள்ள அழகான ரிப்பன் கேக்காகவோ; வேலைப்பளு மிக்க வேலைநாட்களின் இடையில் அனுபவிக்கப்பட்ட நம்பிக்கையூட்டும் மதிய உணவாகவோ இருக்கலாம். இவை வெறும் உணவுகளல்ல. இவை P&S உருவாக்கிய இனிய நினைவுகள்.

இவ்வருட விழா, “பல தசாப்த ருசிகரமான நினைவுகள்” எனும் கருப்பொருளின் கீழ், P&S உடனான தங்களது விசேட தருணங்களை நினைவுகூரவும் பகிரவும் அனைவரையும் அழைக்கிறது. இந்த கருப்பொருளானது, சிறுவயதில் அனுபவித்த தங்களுக்கு பிடித்த ருசி மிக்க சிற்றுண்டி முதல் தற்போது தங்களுக்கு மிக அருகே அந்த ருசியான சிற்றுண்டி கிடைக்கின்றது எனும் நிம்மதியினை உணரும் தருணங்கள் வரை, P&S எவ்வாறு நம் அன்றாட வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் இடம்பிடித்திருக்கிறது என்பதை சற்று நினைவுபடுத்துமாறு அனைவரிடமும் கேட்கிறது. இன்று, P&S உடனான தங்கள் நினைவுகளை உருவாக்கவும், P&S உடன் தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தழுவி அதை தங்கள் சொந்தக் கதையின் ஒரு பகுதியாக மாற்றவும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

டிஜிட்டல் தளங்களில் TikTok, Instagram போன்ற சமூக ஊடகங்கள் வழியாக இளைஞர்களுடன் தொடர்பை உருவாக்குவதில் P&S அண்மைக் காலமாக தீவிரமாக செயற்பட்டு வருகிறது. ‘Family First’ போன்ற வாடிக்கையாளர் விசுவாச ஊக்குவிப்புத் திட்டங்கள், வரையறுக்கப்பட்ட புதிய தயாரிப்புகள், பங்குபற்றலுடனான செயற்பாடுகள், சமையல் சம்பந்தமான கலாசார நிகழ்வுகள் ஆகியவற்றின் மூலம் இளைஞர்கள் P&S இன் கதையைத் தங்களுடையதாக உணர இது உதவுகின்றது.

சுவைக்கு அப்பால், P&S தனது சமூக பொறுப்பபு நடவடிக்கைகளையும் விரிவுபடுத்தியுள்ளது. ‘Manu Mehewara’ பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) முயற்சியின் கீழ், கல்வி, சுகாதாரம், சமூக நலன் மற்றும் நிலைபேறான சூழல் முயற்சிகளில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 

கிராமப்புற சமூகங்கள் மற்றும் பாடசாலைகளில் Reverse Osmosis (RO) நீர் சுத்திகரிப்பு திட்டங்கள் மற்றும் மழைநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரித்தல் தொகுதிகளை நிறுவுவதன் மூலம், P&S ஆயிரக் கணக்கான குடும்பங்கள் சுத்தமான நீரை பெற வழி வகை செய்துள்ளது.

P&S தொடர்ச்சியாக ஆழ்ந்த நோக்கங்களைக் கொண்ட சேவைகளை செய்து வருகிறது. இந்த முயற்சிகள் SDG 6 (சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம்), SDG 10 (ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்), SDG 12 (பொறுப்பு வாய்ந்த நுகர்வு மற்றும் உற்பத்தி) உள்ளிட்ட ஐ.நாவின் (SDG) நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுடன் ஐ.நா.வின் முக்கிய நிலைபேறான வளர்ச்சி இலக்குகளுடன் ஒத்துப்போகின்றன. ஆகியவற்றுடன் ஒத்திசைகின்றன.

மேலும், இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை (ICT) சிறுவர்களின் முகங்களில் புன்னகையை ஏற்படுத்துவதில் P&S மிகவும் பெருமை கொள்வதோடு, எதிர்வரும் ஆண்டுகளில் அதைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் உறுதி கொண்டுள்ளது.

P&S எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் நிலையில், மக்களை ஒன்றிணைக்கும் உணவுகளை உருவாக்கி தொடர்ச்சியாக வழங்குதல் மற்றும் கடந்த 123 ஆண்டுகளாக உருவான அக்கறை, நம்பிக்கை மற்றும் உள்ளூர் பெருமையை அதேபோல் மாறாமல் கடைப்பிடித்தல் ஆகிய தமது பணிநோக்குடன் இன்னும் எளிமையானதாகவும் வலிமையானதாகவும் தொடர்ச்சியாக அதன் அர்ப்பணிப்பை பேணி வருகிறது. ‘P&S: Elevating Sri Lanka’s Finest Flavours Worldwide’ எனும் தனது உலகளாவிய சேவை வாசகத்தின் அடிப்படையில் இலங்கை பாரம்பரியத்தை உலகிற்கு பெருமையுடன் கொண்டு செல்வதன் மூலம், தன்னுடைய பாரம்பரியத்தை பேணியவாறு வளர்ச்சியைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. இது, நாட்டிலும் நாட்டை கடந்தும் நிறுவனம் பேணி வந்த காலத்தால் அழியாத அதன் சிறந்த விசேடத்துவத்தை பிரதிபலிக்கிறது.

முதன் முறையாக பன் ஒன்றை கைப்பற்றிய சிறு கரங்கள் முதல், தனித்துவமான சுவையின் ஈர்ப்பில் குடும்பங்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பகிர்ந்து கொண்ட உணவுகள் வரையிலும் ‘பல தசாப்த ருசிகரமான நினைவுகளுடன்’ தங்களது வாழ்க்கையின் ஒரு பகுதியாக P&S இனை ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு இலங்கையருக்கும், 123ஆவது வருடத்தைக் கொண்டாடும் P&S தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.


Share with your friend