அமானா தகாஃபுல் தனது 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் நிஜ-வாழ்க்கை ஹீரோக்களை கொண்டாடியது

Share with your friend

இலங்கையின் பெருமளவு விருதுகளை வென்ற காப்புறுதி சேவைகள் வழங்குனரான அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ், தனது வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு 2024 ஐ Monarch Imperial இல் நடாத்தியிருந்தது. அதன் போது, நாடு முழுவதையும் சேர்ந்த விற்பனை அணி அங்கத்தவர்களின் சிறந்த சாதனைகள் மற்றும் பங்களிப்புகள் கௌரவிக்கப்பட்டிருந்தன. சுப்பர் ஹீரோ எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆண்டின் நிகழ்வில், 2024 ஆம் ஆண்டு முழுவதிலும் சிறப்பாக செயலாற்றியிருந்த கம்பனியின் நிஜ-வாழ்க்கை ஹீரோக்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

ஐரோப்பிய சுற்றுலா வெற்றியாளர் (இடமிருந்து): அமானா தகாஃபுல் லைஃப் உதவி பொது முகாமையாளர் – விற்பனைகள், நிமல் பிரியந்த; சிரேஷ்ட பிராந்திய முகாமையாளர் பசால் பொன்சேகா; பிரதம நிறைவேற்று அதிகாரி கிஹான் ராஜபக்ச; மற்றும் தேசிய விற்பனை விநியோக தலைமை அதிகாரி ஆசிப் ரஹீம்.

இந் நிகழ்வில் சுல்ஃபிகார் கௌஸ் (தவிசாளர், அமானா தகாஃபுல் ஜெனரல்), ஹஸன் காசிம் (முகாமைத்துவ பணிப்பாளர்), கிஹான் ராஜபக்ச (பிரதம நிறைவேற்று அதிகாரி, அமானா தகாஃபுல் லைஃப்), சிவா கார்த்திகன் (பிரதம நிறைவேற்று அதிகாரி, அமானா தகாஃபுல் ஜெனரல்) மற்றும் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த விற்பனை அணியின் அங்கத்தவர்கள் இணைந்து இந் நிகழ்வை சிறப்பாகக் கொண்டாடியிருந்தனர்.

பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த செயற்பாட்டாளர்கள் இந்த நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டிருந்தனர். இவர்களில், சிறப்பாக செயலாற்றியிருந்த கிளைகள், முன்னணி பிராந்திய விற்பனைப் பிரதிநிதிகள், சிறந்த அணித் தலைவர்கள், நீண்ட காலமாக சேவையாற்றும் ஊழியர்கள் மற்றும் CEO வின் கழக மற்றும் MD யின் கழக அங்கத்தவர்கள் அடங்கியிருந்தனர். வெற்றியாளர்களுக்கு கேடயங்கள், பதக்கங்கள், பணப் பரிசுகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணத்திற்கான விமான டிக்கெட்டுகள் போன்றன வழங்கப்பட்டிருந்தன.

Champion of Champions வெற்றியாளராக தெரிவான Enterprise அணியின் உதவி விற்பனை முகாமையாளர் சரித் கோரல (நடுவில்), இடமிருந்து, அமானா தகாஃபுல் ஜெனரல் பிரதம நிறைவேற்று அதிகாரி சிவா கார்திகன்; முகாமைத்துவ பணிப்பாளர் ஹசன் காசிம்; தவிசாளர் சுல்ஃபிகார் கௌஸ்; பிரதம விற்பனை அதிகாரி சுரேஷ் பஸ்நாயக்க; விற்பனை – பொது முகாமையாளர் (Metropolitan) நௌஷாட் காசிம் மற்றும் கிளை விற்பனை விநியோக உதவி பொது முகாமையாளர் சாகிர் கனக

அமானா தகாஃபுல் வர்த்தக நாமத்தின் சர்வதேச நிலையை மேம்படுத்துவதில் பங்களிப்பு வழங்கிய MDRT தகைமை பெற்றவர்களும் ஆயுள் மற்றும் பொதுக் காப்புறுதி கம்பனிகளின் CEO விருதுகளை பெற்றுக் கொண்டவர்களும் சிறப்பு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். அமானா தகாஃபுல் காப்புறுதிக் கம்பனியின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் ஒவ்வொரு நபரும் எவ்வாறு தமது முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தனர் என்பதை உணர்த்தும் வகையில் விருதுகள் வழங்கும் விழா அமைந்திருந்தது.

Enterprise அணியின் உதவி விற்பனை முகாமையாளர் சரித் கோரல, 2024 ஆம் ஆண்டுக்கான Champion of Champions ஆக தெரிவு செய்யப்பட்டார். அமானா தகாஃபுல் பொதுக் காப்புறுதி கம்பனியின் சிறப்பாக செயலாற்றியிருந்த விற்பனை உத்தியோகத்தருக்கு வழங்கப்படும் அதியுயர் விருதாக இது அமைந்திருந்தது.

நிகழ்வின் போது அமானா தகாஃபுல் ஜெனரல் கம்பனியின் தவிசாளர் சுல்ஃபிகார் கௌஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த விருதுகள் என்பது, மீட்சி, குழுநிலை செயற்பாடு மற்றும் பகிரப்பட்ட நோக்கு ஆகியவற்றின் கொண்டாட்டமாக அமைந்துள்ளன. சிறப்பு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுக்கான ஆழமான அர்ப்பணிப்பின் சிறப்பின் பிரகாரம் எமது பயணம் அமைந்துள்ளது.  நாளாந்தம் எமது நோக்கத்தை வாழ்வுடன் இணைப்பதில் சிறப்பாக பங்காற்றும் நபர்களை நான் மனதார பாராட்டுகிறேன்.” என்றார்.இலங்கையர்களின் பரந்துபட்ட காப்புறுதித் தேவைகளை நிவர்த்தி செய்வதில் அமானா தகாஃபுல் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இந்த வைபவம் வெளிப்படுத்தியிருந்தது. மோட்டார், மருத்துவ, வீட்டு, பிரயாண, வியாபார மற்றும் சமுத்திர காப்புறுதி ஆகிய பொதுக் காப்புறுதி தீர்வுகளுடனும் ஆயுள் காப்புறுதித் தீர்வுகளுடனும் கம்பனி தொடர்ச்சியாக புத்தாக்கம் மற்றும் பரந்த உள்ளடக்கம் போன்றவற்றினூடாக தனது தீர்வுத் திட்டங்களில் பெறுமதியை சேர்த்த வண்ணமுள்ளது. தனது வர்த்தக நாமத்தின் உறுதி மொழியான “ஒவ்வொரு இலங்கையரையும் ஒன்றெனக் கருதும்” என்பதற்கமைய, அமானா தகாஃபுல், நாட்டின் நாலா பக்கத்திலும் வசிக்கும் மக்களின் பெறுமதிமிக்க சொத்துக்களைம் ஆயுளையும் பாதுகாப்பதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளது.


Share with your friend