அரசாங்கத்தின் IFSL திட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்ட தொழிற்துறை வேலை வாய்ப்புகளுடன் பட்டப் படிப்புகளை வழங்கும் Saegis கம்பஸ்

Share with your friend

அதிகளவு போட்டிகரத்தன்மை வாய்ந்த பணியிடங்களில் சிறப்பாக செயலாற்றக்கூடிய திறன்கள் படைத்த பட்டதாரிகளை உருவாக்குவதில் பங்களிப்பு வகையில், வட்டியில்லாத மாணவர் கடன் (IFSL) திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்ட பட்டப் படிப்புகளை வழங்கவும், கற்கை பூர்த்தி செய்த பின் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கும் உதவ Saegis கம்பஸ் முன்வந்துள்ளது.

கொழும்பின் மையப்பகுதியில் அமைந்துள்ள முன்னணி உயர் கல்விச் சேவைகளை வழங்கும் நிலையமாக அறியப்படும் Saegis கம்பஸ், பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச தொழில் வழங்குநர்களின் கருத்துக் கணிப்புகளினூடாக இந்த விடயத்தின் முக்கியத்துவம் பற்றி நன்கு அறிந்துள்ளது. பணியாற்றும் உலகில் முதல் தர அனுபவத்தைப் பெற்றுக் கொள்வது என்பதிலிருந்து, பட்டதாரிகளுக்கு தமக்கு பிடித்தமான தொழில்கள் பற்றி சிறந்த புரிந்துணர்வை கொண்டிருப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும் நிறுவனங்களில் SLT-Mobitel, DirectPay, PayMedia, Epic Technology Group, Royal Ceramic Lanka PLC, Prosoft, Manjari, Revo  போன்ற பல அடங்கியுள்ளன.

பட்டம் பெறுவதற்கு முன்னதாக மாணவர்கள் பெற்றுக் கொள்ளும் அனுகூலங்கள் பெறுமதி வாய்ந்தனவாக அமைந்துள்ளன. நிபுணத்துவ தொடர்புகள் மற்றும் வலையமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள உதவியாக அமைந்திருப்பதுடன், சிறந்த மக்கள் திறன்களை கட்டியெழுப்பவும், பல்வேறு சவால்கள் மற்றும் சூழ்நிலைகளை அனுபவிப்பது, அவர்களின் பலம் மற்றும் பலவீனம் பற்றி அறிந்திருப்பது மற்றும் எதிர்காலத்தில் பின்தொடர்வதற்கு சரியான தொழில் நிலை என்பதை உறுதி செய்வது போன்றவற்றை எய்த உதவியாக அமைந்துள்ளது. தொழில் வழங்குநர்களுக்கும் தமது நிறுவனத்தில் தொழிலாற்றுவதற்கு பொருத்தமானவர்களை இனங்கண்டு கொள்ளவும் உதவியாக அமைந்திருக்கும்.

2018 முதல் 2020 வருடம் வரையான காலப்பகுதியில் தமது க.பொ.த உயர் தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு உயர் கல்வியைத் தொடர வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தை வழங்கும் இலங்கை அரசாங்கத்தின் திட்டத்தின் பிரகாரம், Saegis கம்பஸினால் வழங்கப்படும் பட்டப் படிப்புகளில் சந்தைப்படுத்தல், மனித வளங்கள் முகாமைத்துவம் மற்றும் கணக்கீடு மற்றும் நிதியியல் போன்ற பிரிவுகளில் Bachelor of Business Management (Hons)பட்டக் கற்கைகள், Bachelor of Business Administration (BBA), BSc Honours (BSc (Hons)) in Computer Science, Software Engineering, and IT மற்றும் Bachelor of Information Technology (BIT) போன்ற கற்கைகளும் வழங்கப்படுகின்றன.

வளர்ந்து வரும் மற்றும் சம காலத்துக்கான பாடவிதானங்களுடன் சிறந்த பயிலல் அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதை உறுதி செய்து கொள்ள முடியும் என்பதுடன், புகழ்பெற்ற, அனுபவம் வாய்ந்த மற்றும் பரந்த விரிவுரையாளர் குழுவினால் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இலவச Wi-Fi வசதி, நவீன IT ஆய்வுகூடம், மொழி ஆய்வுகூடம், நூலகம், ஓய்வெடுக்கும் பகுதி, இடவசதிகள் நிறைந்த குளிரூட்டப்பட்ட டிஜிட்டல் விரிவுரைப் பகுதிகள், உணவகங்கள், விளையாட்டு மற்றும் பொழுது போக்கு செயற்பாடுகள் போன்ற பல வசதிகளும் வழங்கப்படுகின்றன.

Saegis கம்பஸினால் தொடர்ந்தும் மாணவர்களுக்கு தொழில்நிலை வழிகாட்டல்கள் வழங்கப்படுவதுடன், பல சுய ஆளுமை விருத்தி செயற்பாடுக்ள, இலவச ஆங்கில மொழி வகுப்புகள், லியோ கழகம் மற்றும் ரொட்ராக்ட் கழகம் போன்றவற்றுடன் மேலதிக கல்விசார் உதவிகளும் வழங்கப்படுகின்றது.

பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது தொடர்பில் மாணவர்களுக்கு அவசியமான வழிகாட்டல்கள் மற்றும் உதவிகளை Saegis கம்பஸ் வழங்கும். கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் காணப்படும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 2022 பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் வகையில் சமர்ப்பிக்க வேண்டும். 6ஆவது மாணவர் சேர்ப்பு ஆண்டுக்குரிய கல்விச் செயற்பாடுகள் 2022 ஜுன் மாதத்தில் ஆரம்பமாகும். மேலதிக தகவல்களுக்கு 0770430000 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் அல்லது www.saegis.edu.lk எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்.


Share with your friend