‘Doc Talk’ – ஆரோக்கிய அறிவு தொடர்பான நிபுணர் பார்வை’ ஆனது துல்லியமான, நடைமுறைக்கேற்ற, எளிதில் அடையக்கூடிய சுகாதாரத் தகவல்களை வழங்கும் நோக்கிலான முழுமையான புதிய யூடியூப் தளமாகும். இது அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிமுகமகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளத்தின் அறிமுகமானது, இலங்கையின் உடல்நலன் தொடர்பான துறையில் புதிய யுகத்தைக் குறிக்கின்றதோடு, Doc Talk (Pvt) Ltd. எனும் நிறுவனத்தின் நிறுவலையும் குறிக்கிறது. இது சமூக நலன் தொடர்பில் இத்தளம் கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.

இந்த தளத்தின் அறிமுக விழா பல்வேறு சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்புடன் கோலாகலமாக அண்மையில் இடம்பெற்றது. இதில் மருத்துவ சங்கத்தின் மருத்துவ பணிப்பாளர் சுரந்த பெரேரா உள்ளிட்ட பல முக்கிய சுகாதார நிபுணர்கள் கலந்துகொண்டனர். அவர்களின் பங்கேற்பு, Doc Talk தளத்தின் நிறுவன ரீதியான மற்றும் தொழில்முறை ரீதியான வலுவான ஆதரவை எடுத்துக் காட்டுவதோடு, இத்தளத்தின் நம்பகத்தன்மையையும், இது வழங்கும் தகவல்களின் நம்பிக்கையையும் மேலும் உறுதிப்படுத்துகின்றது.
பொதுமக்களுக்கும் மருத்துவ நிபுணத்துவ அறிவுக்கும் இடையிலான இடைவெளியை நெருக்கமாக்குவதும் சுகாதாரக் கல்வியை சுவாரஸ்யமாகவும் எளிதாகவும் புரியும்படி மாற்றுவதுமே Doc Talk தளம் நிறுவப்பட்டதன் முக்கிய நோக்கமாகும். இத்தளமானது, நோய்த் தடுப்பு பராமரிப்பு, உணவு நடைமுறை, மனநலம் மற்றும் மருத்துவத்தின் புதிய போக்குகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நடைமுறை ரீதியான ஆலோசனைகளை வழங்கும்.
இந்த அறிமுக விழாவில் Doc Talk (Pvt) Ltd. நிறுவுனரும் அதன் முகாமைத்துவ பணிப்பாளருமான நதீஷா பெரேரா கருத்து வெளியிடுகையில் “எமது குறிக்கோள், நிபுணர்கள் மூலம் வழிநடத்தப்படும், துல்லியமான சுகாதாரத் தகவலை எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்வதாகும். இன்று தவறான தகவல்கள் உண்மையை விட மிக வேகமாகப் பரவுகின்றன. குறிப்பாக சுகாதார விடயங்களில், இது ஆபத்தான விடயமாகும். Doc Talk என்பது, நம்பகமான, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய ஆலோசனைகளை நேரடியாக நிபுணர்களிடமிருந்து மக்களுக்குக் கொண்டு சேர்த்து, அவர்களுக்கும் அவர்களது அன்புக்குரியவர்களினதும் நலனுக்காக அறிவார்ந்த முடிவுகளை எடுக்க ஊக்குவிக்கிறது.” என்றார்.
Doc Talk தளம், மருத்துவ ஆலோசனைக்கான இடமாக மட்டுமின்றி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்படுத்த ஊக்கமளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக, உண்மையான வெற்றிக் கதைகள், நிபுணர் நேர்காணல்கள் உள்ளிட்ட விசேட பகுதிகள் இலங்கையின் முன்னணி மருத்துவர்களின் வழிகாட்டல்கள் மூலம் முன்னெடுக்கப்படும். மருத்துவ அறிவு என்பது மருத்துவர்களுக்கு மட்டுமானது எனும் பாரம்பரியமான எண்ணத்தை சவாலுக்கு உட்படுத்தி, அது அனைவரின் அன்றாட வாழ்க்கையுடனும் தொடர்புடையதும் பயனுடையதும் என்பதை Doc Talk எடுத்துக்காட்டுகிறது.
சுகாதாரம் தொடர்பில் ஆர்வமுள்ளவர்கள், உடல்நலன் தொடர்பான ஆர்வலர்கள், மருத்துவ நிபுணர்கள், கொள்கை அமைப்பாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் Doc Talk அதன் தளத்திற்கு வரவேற்கிறது. நிபுணத்துவம், ஒருமைப்பாடு மற்றும் சமூக நோக்கம் போன்ற வலுவான அடித்தளத்தின் மீது நிர்மாணிக்கப்பட்ட Doc Talk, இலங்கையிலும் அதற்கு அப்பாலும் சுகாதாரம் மற்றும் உடல்நலன் தொடர்பான ஒரே டிஜிட்டல் மையமாக வளர்ச்சியடைய எதிர்பார்க்கிறது.