அறிமுக தினம் (Demo Day) 2022 இல் பசுமை வலு புத்தாக்கம்

Share with your friend

பசுமை வலு  முதன்மையாளனின்   (GEC) நான்காவது பதிப்பு, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘அறிமுக தின (Demo Day)’ ஆரம்பத்துடன் அதன் இறுதிக் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பசுமை வலுப் புத்தாக்குநர்களாகிய – எகோஸ்டீம் (Ecosteem), சனோடா (Sanota), ரோடா (Rhoda), ரூட் சொனார் (Route Sonar) மற்றும் எகோ டெக் பேஸ் (Eco Tech Base)  – ஆகியோர் உள்ளூர் மற்றும் சர்வதேச தொழில்துறை தலைவர்கள், முதலீட்டாளர்கள், உயர் வணிக நிர்வாகிகள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் அடங்கிய மதிப்பிற்குரிய பார்வையாளர்களுக்கு அவர்களின் புதுப்பிக்கப்பட்ட யோசனைகள் மற்றும் தீர்வுகளை வழங்கினர்.

பசுமை வலு  முதன்மையாளர்கள் போட்டியானது இலங்கையில் வளர்ந்து வரும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகளின் மிகவும் நம்பிக்கைக்குரிய யோசனைகள் மற்றும் புத்தாக்கங்களை அடையாளம் காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. வெற்றிகரமான புத்தாக்கங்கள் திறன் இயக்கத் தீர்வுகளான வழித் தேர்வுமுறை மற்றும் முதல் சிறீலங்கன் இலத்திரனியல் மோட்டார் சைக்கிள் (Sri-Lakan e-bike)  முதல் மலிவு விலையிலான சூரிய சக்திக் கூரை ஓடுகள் மற்றும் சுடு நீர் அமைப்புகள் முதல் குடிமனை அடிப்படையிலான கரிம உரம் மற்றும் உயிர் வாயு தீர்வுத்  வரையிலானது.

பசுமை வலு  முதன்மையாளர்களின்   (GEC) அறிமுக தினமானது (Demo Day) 2022 பெப்ரவரி 3 ஆம் திகதியன்று நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. ஜீஐஇஸட் (GIZ) இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் கிறிஸ்டியன் ஐன்ஃபெல்ட்டின் வரவேற்புரையைத் தொடர்ந்து, இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான ஜேர்மனி  ஃபெடரல் குடியரசின் தூதுவர் மாண்புமிகு ஹொல்கர் சியூபேர்ட் மற்றும் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபைத் தலைவர், திரு. ரஞ்சித் சேபால ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டு உரையாற்றினர்.

சேபால தனது சிறப்புரையில், இலங்கை நிர்ணயித்துள்ள இலட்சிய இலக்குகளை இவ்வாறு எடுத்துரைத்தார்: “2050 ஆம் ஆண்டளவில் காபன் நடுநிலைமையை நிறைவு செய்வதற்கான முக்கியமான பயணத்தை இலங்கை ஆரம்பித்துள்ளது. இந்தப் பயணத்தில், 2030 ஆம் ஆண்டளவில் 70 % மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களிலிருந்து பிறப்பாக்கம் செய்வதற்கான இலக்கொன்றையும் நாம் வகுத்துள்ளோம். ஜேர்மனியின் பெடரல் வெளிவிவகார அலுவலகம் எங்களுடன் கைகோர்த்து பசுமை வலு  முதன்மையாளன் முயற்சியை முன்னெடுத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது நிச்சயமாக இலங்கைக்கான காலத்திற்கேற்ற முக்கியதொரு திட்டமாகும். ஐந்து பசுமை வலு தொடக்க புத்தாக்குநர்கள் மற்றும் அவர்களின் புதுப்பிக்கத்தக்க வலு யோசனைகள் மற்றும் பசுமையான இலங்கையை நோக்கிய தீர்வுகளுக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.”  

தூதுவர் சூபேர்ட் தனதுரையில், புதிய ஜேர்மன் அரசாங்கம் காலநிலை மாற்ற நடவடிக்கையை தமது நிகழ்ச்சி நிரலில் முன்னணியில் வைத்துள்ளதாக சுட்டிக்காட்டினார். ஐந்து வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், “இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி துறையில் ஆக்கப்பூர்வமான யோசனைகளுக்கான மிகப்பெரிய, பயன்படுத்தப்படாத சாத்தியக்கூறுகள் இருப்பதை ஒவ்வொரு வருடமும் வலு  முதன்மையாளர்  நமக்குக் காட்டுகிறார். பசுமையான பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்தில் தொழில்முனைவோர் மற்றும் தனியார் துறையினர் இன்றியமையாதவர்கள். இது நிறுவனங்களால் இயக்கப்படும் புத்தாக்கங்கள் – சரியான கொள்கை கட்டமைப்புக்களால் செயல்படுத்தப்படும் – மிகக் குறுகிய காலத்திற்குள் நிலையான தீர்வுகளை அளவிட முடியும்.” என்று குறிப்பிட்டார்.

எகோஸ்டீம் (Ecosteem), சனோடா (Sanota), ரோடா (Rhoda), ரூட் சொனார் (Route Sonar) மற்றும் எகோ டெக் பேஸ் (Eco Tech Base) ஆகிய ஐந்து பசுமை வலு  முதன்மையாளர்களும் நிகழ்வில் கூடியிருந்த முதலீட்டாளர் மற்றும் பங்காளர் வலையமைப்பிற்கு அவர்களின் சுத்திகரிக்கப்பட்ட வணிகத் தீர்வுகளை அறிமுகப்படுத்தவும், வழங்கவும் தத்தமது சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தினர். முக்கிய பசுமை வலுப்  பங்குதாரர்களிடையே பசுமைக் கூட்டணிகள் மற்றும் கூட்டாண்மைகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட முறையான வலையமைப்பாக்கல் அமர்வுடன் அறிமுக தினம் (Demo Day) நிறைவடைந்தது.

2021 ஆம் ஆண்டில், ஐந்து உள்ளூர் பசுமை வலுப் புத்தாக்குநர்களும் ஆறு மாத கால ஊக்குவிப்புத் திட்டத்தில் ஹெட்ச் மற்றும் குட் லைஃப் எக்ஸ் (ஜீஎல்எக்ஸ்) (Hatch and Good Life X (GLX) உடன் பங்குபற்றினர். இது பசுமை வலு  சுற்றுச்சூழலில் உள்ளூர் மற்றும் சர்வதேச கூட்டாண்மைக்கான அவர்களின் தயாரிப்புகள் மற்றும் வாய்ப்புகளை நன்றாகச் சரிசெய்து மேம்படுத்த உதவியது. புகழ்பெற்ற தொழில்துறை நிபுணர்களின் தீவிர திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதலுக்குப் பிறகு, ஐந்து குழுக்களும் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்கும் அதேவேளை, தங்கள் வணிகங்களை மேலும் மேம்படுத்துவதற்கான அறிவு மற்றும் திறன்களைப் பெற்றுக்கொண்டுள்ளன.

‘பசுமை வலு  முதன்மையாளன் (Green Energy Champion)’ என்பது பசுமை வலுப் புரட்சியை வழிநடத்தும் புத்தாக்குநர்களை ஊக்குவிக்கும் ஒரு திட்டமாகும், இந்த திட்டம் ஜேர்மன் பெடரல் வெளியுறவு அலுவலகத்தால் நியமிக்கப்பட்டதுடன் Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) GmbH மற்றும் இலங்கையின் சூரிய சக்தி, காற்று மற்றும் நீர்மின் உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சு, இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை மற்றும் இலங்கையிலுள்ள ஜேர்மன் கைத்தொழில் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகள் குழு ஆகியன இணைந்து செயல்படுத்தப்படுகிறது. மேலும் தகவலுக்கு, தயவு செய்து  www.greenenergychampion.lk.  ஐ அணுகவும். அத்துடன் facebook.com/greenenergychampion மற்றும் instagram.com/greenenergychampion/ இல் எம்மைப் பின்தொடரவும்.


Share with your friend