அலரிக்ஸ் ஐஸ்கிறீமின் வெற்றிகரமான மீள்பிரவேசம் – SLIM Brand Excellence விருதுகளில் இரண்டு தங்கங்களை வென்றுள்ளது

Share with your friend

அலரிக்ஸ் ஐஸ்கிறீம் SLIM Brand Excellence விருதுகள் நிகழ்வில் ‘ஆண்டின் மிகச் சிறந்த திருப்புமுனை வர்த்தகநாமம்’ (Best Turnaround Brand of the year) மற்றும் ‘ஆண்டின் மிகச் சிறந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை உள்ளூர் வர்த்தகநாமம்’ (SME Local Brand of the Year) ஆகிய இரண்டு தங்க விருதுகளை வென்றுள்ளது. ஒரு வர்த்தகநாமம் மற்றும் தயாரிப்பு புதுப்பித்தலுக்குப் பிறகு, கட்டுபடியான விலையில் கிடைக்கின்ற ஐஸ்கிறீம்களின் புதுமையான தயாரிப்பு வரிசையைக் காண்பிப்பதில் அவர்கள் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தனர். பொருளாதாரம் மற்றும் வழங்கல் அழுத்தங்களில் இருந்து தப்பிப் பிழைப்பதற்கு போராடிக்கொண்டிருந்த வணிகத்தை புதுப்பிப்பதில் இது பல சவால்களை எதிர்கொண்டது. குறிப்பாக, தொற்றுநோய் நிலைமையின் போது உறைந்த தின்பண்டங்கள் நுகரப்படாமல் இருந்த ஒரு காலகட்டத்தில், ‘ஏங்க’ வைக்கும் தயாரிப்பு மற்றும் வெற்றிகரமான சந்தைப்படுத்தல் உத்தியின் மூலம் இதயங்களை வெல்ல அலரிக்ஸ் ஆல் முடிந்தது.

இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த Alerics Dairy நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான நுவான் டி சில்வா, அசல் சுவையான தயாரிப்பு வகைகள், உலகத் தரம் மற்றும் கட்டுபடியான விலைகள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, நாடு முழுவதும் உள்ள நுகர்வோரின் இதயங்களில் அலரிக்ஸை மீண்டும் கொண்டு வருவதில் ஊழியர்களின் குடும்பத்தின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை பாராட்டினார்.

Ceylon Vanilla, Coconut and Jaggery, Cinnamon, Passion Fruit Pavlova போன்ற சுவைகளில் உள்ளூர் மூலப்பொருட்களை சேர்ப்பிப்பதால் அலரிக்ஸின் திருப்புமுனை அதன் சொந்த வழியில் குறிப்பிடத்தக்க சாதனையாக மாறியுள்ளது. Pineapple & Chilli, Strawberry & Lime மற்றும் Mango & Passion Fruit போன்ற கவர்ச்சிகரமான சுவைகளுடன் கோடைக்கால உணர்வுகளுடன் கூடிய புதிய பழ வகைகள் கொண்ட் பொப்சிகல் வகையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இவை அனைத்தும் இலங்கையின் வெப்ப மண்டல சுவைகளாகும். அலரிக்ஸ் தனது அனைத்து தயாரிப்புகளிலும் இயற்கையான பழக் கூழ்மங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பழ பொப்சிகல் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நுகர்வோர் இயற்கையாகவே புத்துணர்ச்சி அடைவதை உறுதி செய்தது.  

சிறந்த சுவை, புத்துணர்ச்சி மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக அது தொடர்ச்சியான புத்தாக்கம் மற்றும் தரத்தில் கவனம் செலுத்துகின்றது. உள்ளூர் பால் பண்ணையாளர்களை ஆதரிப்பது எப்போதும் அலரிக்ஸ் வணிக நெறிமுறைகளில் ஒரு முக்கிய தூணாக இருந்து வருகிறது, அது பல உள்ளூர் பால் பண்ணையாளர்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதுடன், ஒட்டுமொத்த சமூகத்திற்கு பெரிய அளவில் பிரதியுபகாரம் செய்துள்ளது. இப்பயணத்தில் அன்பான உறவுகளை வளர்த்து வருகின்றது.

UberEats மற்றும் Pickme Food போன்ற ஒன்லைன் தளங்களில் பிரமிக்க வைக்கும் வர்த்தகநாம வீச்சின் மூலம், அலரிக்ஸ் இப்போது மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பல்பொருள் அங்காடிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்ப்புறங்களிலும் கிடைக்கிறது. புதிய ஆண்டை வரவேற்கும் வகையில், இந்த இரண்டு புகழ்பெற்ற விருதுகளும், இலங்கையின் உள்ளூர் சுவை வடிவங்களின் சுவை மற்றும் நலச்செழுமையைப் பயன்படுத்தி, பிள்ளைப் பருவ நினைவுகளை மீண்டும் மீண்டும் கொண்டு வருவதன் மூலம், வர்த்தகநாமத்தின் பிரபலத்தை உச்சத்திற்கு எடுத்துச் செல்லும்.


Share with your friend