இலங்கைத்தாயின் சிறுவர்களே எமது தேசத்தின் எதிர்காலம். அவர்கள் வாழ்வின் சவால்கள் மற்றும் துன்பங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டு, பாதுகாப்பான சூழலில் வளர்க்கப்படவேண்டியவர்கள். இது அவர்கள் நம்பிக்கையுடன் தங்கள் கனவுகளைத் தொடர்ந்து முன்னெடுத்து, நனவாக்க வழிகோலும் என்று அலியான்ஸ் லங்கா நம்புகிறது. அதனால்தான் இலங்கையிலுள்ள சிறுவர்களுக்கு நிலைபேண்தகு எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவையான உதவியை வழங்குவது அலியான்ஸ் லங்கா நிறுவனம் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாகும். இந்த முயற்சியில், கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் உரிய பாதுகாப்பு இல்லாமல் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அலியான்ஸ் லங்கா அவதானித்துள்ளது. இதைப் பற்றி மேலும் ஆய்வு செய்ததில், கிராமப்புறங்களில் தலைக்கவசம் அல்லது போதிய பாதுகாப்பு இல்லாமல் மோட்டார் சைக்கிள்களில் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்வது பாரதூரமான குற்றம் மட்டுமல்லாது, விபத்து ஏற்பட்டால் உயிரிழக்கவும் நேரிடும்.
இவ்வாறு, இலங்கையின் வீதிகளில் சிறுவர்கள் பாதிக்கப்படக்கூடிய ஒரு பிரிவாக மாறியிருப்பதை புரிந்துகொண்ட அலியான்ஸ் லங்கா, வீதியில் செல்லும் சிறுவர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் அதனை ஊக்குவிப்பதற்கும் உதவும் முயற்சியை ஆரம்பித்துள்ளது. அலியான்ஸ் லங்கா தனது வலையமைப்பில் அடங்கியுள்ள பல்வேறு இடங்களில் 1,200 சிறுவர் பாதுகாப்பு தலைக்கவசங்களை நன்கொடையாக வழங்குவதன் மூலம் இதனை நிறைவேற்றி வருகின்றது. அதன்படி, 2022 நவம்பர் 23, 25 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நாடளாவிய ரீதியில் அலியான்ஸ் வலையமைப்பின் கீழுள்ள 24 இடங்களில் சிறுவர் பாதுகாப்பு தலைக்கவசங்கள் நன்கொடையளிக்கப்பட்டன. இந்த முயற்சி அலியான்ஸ் லங்கா நிறுவனத்தின் “சமூகநலன்” முயற்சிகளுக்கு பங்களிக்கும் என்பதுடன், இதன் மூலம் சமூக மேம்பாடு மற்றும் சமூக உள்ளடக்கத்தை அதிகரிக்கும் என நம்புகிறது.
விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்குமான முக்கிய நிகழ்வு களுத்துறையில் உள்ள அலியான்ஸ் லங்காவின் கிளையில் நடைபெற்றது, அங்கு ஒரு எளிமையான வைபவம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியுடன் அப்பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு 50 பாதுகாப்பு தலைக்கவசங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. தரம் 1-5 வரை கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை பொலிஸாரின் வழிகாட்டலின் கீழ் அலியான்ஸ் லங்காவினால் பாதுகாப்பு தலைக்கவசங்கள் வழங்கப்பட்டன. இலங்கை பொலிஸாரும், அலியான்ஸ் லங்காவும் இணைந்து செயலாற்றுவதன் மூலம், வீதிப் பாதுகாப்பு அடிப்படை அம்சங்களுடன், முறையான தலைக்கவச பாவனை மற்றும் தரநிலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்வர். களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வில் அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், இலங்கைக்கான முகாமையாளருமான, அலன் ஸ்மீ, பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரியான மங்கள பண்டார மற்றும் அலியான்ஸ் லங்கா முகாமைத்துவ நிர்வாக அணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்துள்ளனர்.
இந்த முயற்சி குறித்து அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரியான மங்கள பண்டார அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “தினந்தோறும், இலங்கையிலும், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு நாங்கள் உதவுகிறோம், அவர்களின் வாழ்க்கையில் மிகவும் விலைமதிப்பற்றவையைப் பாதுகாக்கிறோம், மேலும் சில விடயங்கள் எங்களை விட விலைமதிப்பற்றவையான எமது சிறுவர்கள். எனவே, இலங்கையின் வீதிகளில் சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவாக மாறியிருப்பதைக் காண்பது துரதிர்ஷ்டவசமானது. அடிக்கடி உயிரிழப்புகள் அல்லது கடுமையான காயங்கள் பற்றி நாம் கேள்விப்படுகிறோம், அதே நேரத்தில் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட வீதி விபத்துக்கள் தினசரி அடிப்படையில் நிகழ்கின்றன. ஒரு பொறுப்புள்ள நிறுவனமாகவும், அபிமானத்திற்குரிய காப்புறுதி சேவை வழங்குநராகவும், எங்கள் விலைமதிப்பற்ற சிறுவர்களைப் பாதுகாக்க உதவும் தார்மீகக் கடமையும் சமூக அர்ப்பணிப்பும் எங்களிடம் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இதுவே இலங்கை பொலிஸாருடன் இணைந்து இத்திட்டத்தை மேற்கொள்வதற்கு எமக்கு உத்வேகம் அளித்துள்ளதுடன், சிறுவர் பாதுகாப்பு தலைக்கவசங்களை வழங்குவதற்கும், இலங்கையின் வீதிகளில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் சம்பவங்களில் சிறுவர்கள் முகங்கொடுக்கும் நிகழ்வுகளை குறைப்பதற்கு வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கும் நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
களுத்துறை, ஹட்டன், மதவாச்சி, நிக்கவெரட்டிய, குளியாப்பிட்டி, கலவானை, அக்குரஸ்ஸ மற்றும் சுன்னாகம் ஆகிய இடங்களில் உள்ள அலியான்ஸ் லங்காவின் கிளைகள், 2022 நவம்பர் 23 ஆம் திகதி அலியான்ஸ் சிறுவர் பாதுகாப்பு தலைக்கவசம் வழங்கும் திட்டத்தில் பங்குகொண்டன. 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி மொனராகலை, நுவரெலியா, அனுராதபுரம், புத்தளம், ஹொரணை, கம்பஹா, மத்துகம மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள அலியான்ஸ் லங்காவின் கிளைகள் தலா 50 தலைக்கவசங்களை நன்கொடையாக வழங்கியதோடு, கிளிநொச்சி, திஸ்ஸமஹராம, ஹிங்குராகொடை, கேகாலை, கஹவத்தை, பிலியந்தலை மற்றும் பண்டாரகம ஆகிய இடங்களில் உள்ள கிளைகளும் 2022 நவம்பர் 28 அன்று இதை முன்னெடுத்துள்ளன.
அலியான்ஸ் லங்கா என பொதுவாக அழைக்கப்படுகின்ற அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் மற்றும் அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் ஆகியன ஜேர்மனியின் மூனிச் மாநகரைத் தலைமையிடமாகக் கொண்ட காப்புறுதி மற்றும் சொத்து முகாமைத்துவ வணிகத்தில் முதன்மையான சேவைகளைக் கொண்ட உலகளாவிய நிதியியல் சேவை வழங்குநரான Allianz SE இன் முழுமையான உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனங்களாகும். அலியான்ஸ் குழுமத்தின் உலகளாவிய பலம் மற்றும் வலுவான மூலதனமயமாக்கல், உள்ளூர் நிபுணத்துவம் மற்றும் வணிக அறிவு ஆகியவற்றுடன் இணைந்து, அலியான்ஸ் லங்காவின் வெற்றிக்கான சக்திவாய்ந்த சூத்திரமாக உள்ளன.