அவியன, இலங்கை வர்த்தக கண்காட்சி துபாய்- 2024 இன் பிரதான அனுசரணையாளராதல்

Share with your friend

இலங்கையின் முதலாவது 7 நட்சத்திர ஹோட்டலான, அவியான இலங்கையின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளில் கைகோர்த்து, மிகவும் எதிர்பார்க்கப்படும் இலங்கை வர்த்தக கண்காட்சி துபாய்- 2024 இன் பிரதான அனுசரணையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நவம்பர்  02 ஆம் மற்றும் 03 ஆம் திகதிகளில் ஐக்கிய அரபு இராச்சியம், துபாயில் அமைந்துள்ள கிரவுன் பிளாசாவில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இலங்கை வர்த்தக கண்காட்சி துபாய்- 2024 என்பது இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கும், வளைகுடா நாடுகளைச் சேர்ந்த கொள்வனவு செய்பவர்களுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை இணைக்கும் நிகழ்வாகும், இது இலங்கை வணிகங்களுக்கு அவற்றின் சிறந்த தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கான உலகளாவிய தளத்தை வழங்குகிறது. இந்த நிகழ்வில் இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள், உணவு மசாலாப் பொருட்கள், தென்னை உற்பத்திப் பொருட்கள், தேயிலை, ஆடைகள் மற்றும் பல தொழிற்துறை உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இந்த நிகழ்விற்காக அவியான ஹோட்டல், அணுசரணையாளர் என்பதையும் தாண்டி ஹோட்டல் துறையின் நன்நம்பிக்கையினை அடையாளப்படுத்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.

 “இலங்கை வர்த்தக கண்காட்சி துபாய்- 2024 இற்கான முக்கிய அனுசரணை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஏனெனில், ஆடம்பரமான சுற்றுலாத் துறையினை வளர்ப்பதில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் எமது நாட்டினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நாங்கள் பெறுமையாகவும் பொறுப்பாகவும் உணர்கிறோம். இந்த ஒத்துழைப்பு எமது ஹோட்டலின் வியாபார துறையின் தொடர்ச்சியான முன்முயற்சியை பிரதிபலிக்கிறது. இலங்கையை ஆடம்பரமான சுற்றுலாத் துறையில் மட்டுமன்றி சர்வதேச வர்த்தகம் மற்றும் வர்த்தகத்திற்கான உந்துசக்திமிக்க மையமாக மேம்படுத்துவதற்கு நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.” என அவியானவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இலங்கையின் முதலாவது 7 நட்சத்திர ஹோட்டலான அவியான, ஒரு அமைதிமிக்க இடத்தில் அமைந்துள்ளது. அதன் விருந்தினர்களுக்கு ஆடம்பரமான உபசரிப்பினை வழங்குகிறது. அதன் இணையற்ற சேவை, செழுமையான தங்குமிடங்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த வசதிகளுக்காக அறியப்பட்டுள்ள அவியான ஹோட்டல், விருந்தோம்பல் துறையில் ஒரு புதிய தரத்தினையும் சகாப்த்தத்தினையும் படைத்துள்ளது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply