‘குரு விரு’ ஆசிரியர் பயிற்சித் திட்டமானது ஆசிரியர்களின் தொழில்முறைத் தரத்தை மேம்படுத்தும் SLIIT இன் மற்றுமொரு சமூக கூட்டுப்பொறுப்புத் திட்டங்களில் ஒன்றாகும்.
ஆசிரியர்களின் அறிவு, திறன் மற்றும் மனப்பான்மையை மேம்படுத்தி, தரமான ஆசிரியர்களாவதற்கான தனிப்பட்ட பயிற்சிகளை வழங்கி 21ஆம் நூற்றாண்டின் கல்விக்குத் தேவையான கற்பித்தல் செயற்முறையின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கான ஆசிரியர்களின் திறன்களை விருத்தி செய்வது இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
கல்வித் துறையுடன் தொடர்புபட்ட 2,000ற்கும் அதிகமான துறைசார் நிபுணர்கள் நாடு முழுவதிலும் நடைபெற்ற ஒன்பது அமர்வுகளில் கலந்துகொண்டனர். 2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் தொற்றுநோய் காரணமாக அமர்வுகள் ஒன்லைன் மூலம் நடத்தப்பட்டதுடன், பின்னர் நேரடியாக நடத்தப்பட்டிருந்தது. அனைத்து நிகழ்ச்சிகளும் SLIIT இனால் இலவசமாக நடத்தப்பட்டன.
நிறுவனங்கள் மத்தியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் இதுவரை மஹாவலி தேசிய கல்வியல் கல்லூரி – பொல்கொல்ல, சியனே தேசிய கல்வியல் கல்லூரி – வெயாங்கொட, கொழும்பு றோயல் கல்லூரியின் முன்பள்ளி ஆசிரியர்கள், SLIIT இன் கல்வியியல் சட்டப்பின்படிப்பு டிப்ளோமா மாணவர்கள், தொரனேகம மகா வித்தியாலயம் – கட்டுகஸ்தோட, மீரிகம ஹப்பிட்டிகம தேசிய கல்வியல் கல்லூரி மற்றும் சந்தலன்கவ மத்திய கல்லூரி – நீர்கொழும்பு ஆகிய நிறுவனங்கள் அடங்குகின்றன.
ஆசிரியர்களுக்கு அவர்களின் கற்பித்தல் திறன் மற்றும் பிற திறன்களை மேம்படுத்துவது தொடர்பான தலைப்புகளில் SLIIT குரு விரு திட்டம் பயிற்சி அளிக்கிறது. இதுவரை நடத்தப்பட்ட அமர்வுகளில் செயல் ஆராய்ச்சி, பாடத்திட்டம், மற்றும் புள்ளிவிவர திறன்கள், தரவு பகுப்பாய்வு ஆகியவற்றை மேம்படுத்துகின்றன. வகுப்பறைக்கு ஒரு புதிய அணுகுமுறை, கல்விச் சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகள் மற்றும் பயனுள்ள ஒன்லைன் மூலமான கற்பித்தல் நுட்பங்கள் என்பனவும் இதில் அடங்கியிருந்தன. ஆசியர்கள் மற்றும் நிறுவனங்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமர்வுகளை SLIIT நடத்தியிருந்தது.
அனுபவம் வாய்ந்த SLIIT ஊழியர்களால் அமர்வுகள் வழிநடத்தப்படுவுதுடன், அந்தந்த பாடப் பிரிவுகளில் திறமைபெற்றவர்களுக்கு அளிக்கப்படுகிறது.இத்திட்டம் தொடர்பில் இன் மனிதநேயம் மற்றும் விஞ்ஞான பீடத்தின் கல்விக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி விராஜித் கமகே மேலும் விபரிக்கையில், “கற்பித்தல் மிகவும் உன்னதமான தொழில்களில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், எது இந்தக் ‘குரு விரு’ சமூகக் கூட்டுப்பொறுப்புத் திட்டம் பயிற்சியாளர்களை மேம்படுத்துவதையும் அவர்களின் அறிவு, திறன்கள், அணுகுமுறை மற்றும் தொழில்முறை மேம்பாட்டின் மூலம் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நமது குழந்தைகள் 21ம் நூற்றாண்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், 21ஆம் நூற்றாண்டின் பாடசாலைகள் மற்றும் வகுப்பறைகளுடன் பொருந்தக்கூடிய ஆசிரியர்களின் அறிவு, திறன்கள் மற்றும் மனப்பான்மை ஆகியவற்றை வளர்த்துக்கொள்வது இன்றியமையாதது. இன்றுவரை நாங்கள் ஒன்பது அமர்வுகளை வெற்றிகரமாக முடித்திருப்பதுடன், குரு விரு திட்டத்தின் மூலம் ஆசிரியர்கள் எங்கள் சிறப்பு பாட நிபுணத்துவத்தால் பயனடைவார்கள். அது மாத்திரமன்றி நாடு முழுவதும் உள்ள குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் முழுமையாக தயாராக இருப்பார்கள் என்று நம்புகின்றோம்” என்றார்.
எதிர்காலத்தில் குரு விரு திட்டத்தின் நிகழ்ச்சிகளை மஹியங்கனை, காலி மற்றும் கிரிஉல்ல ஆகிய பகுதிகளுக்கு விஸ்தரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக கோரிக்கைக்கு அமைய நாடு முழுவதிலுமுள்ள 19 தேசிய கல்வியல் கல்லூரிகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இதுவரை 5 தேசிய கல்வியல் கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.
SLIIT ஆசிரியர்களை வலுப்படுத்துவதில் உறுதியாக இருப்பதுடன், குரு விரு நிகழ்ச்சிகளை ஒரு தேசிய சேவையாக தொடர்ந்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியத் தொழிலைத் தேடும் தனிப்பட்ட நபர்கள் நன்மையடைவார்கள்.
குரு விரு அமர்வுகளை ஏற்பாடு செய்ய விரும்பும் கல்வி வலயங்கள், நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் மேலதிக தகவல்களுக்கு திரஞ்சய மீகஸ்தெனியவை 076 3638 200 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொள்ளுமாறு SLIIT கேட்டுக்கொள்கிறது.