உயர் தரத்திலான பல்கலைக்கழகக் கல்விக்கான அணுகலை வழங்கும் இலங்கையின் முன்னணியாளராகவும், ஆய்வின் தலைவராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள SLIIT, மதிப்புமிக்க சர்வதேச ஆய்வுக்கான தரப்படுத்தலில் அண்மையில் அங்கீகாரம் பெற்றுள்ளது. 1999ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்நிறுனம், வேலைவாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட கல்வித்திட்டம், தொழில்துறையின் கூட்டாண்மை, சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாணவர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதன் ஊடாக நாட்டின் உயர்கல்வியின் நிலத்தோற்றத்தை மாற்றியுள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட AD Scientific Index 2021 ற்கு அமைய இன் கல்விக்கான பிரதி துணைவேந்தர் பேராசிரியர் நிமல் ராஜபக்ஷ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் நாட்டின் உயர்ந்த புள்ளியைப் பெற்றுக்கொண்டார். பட்டக்கல்வி மற்றும் ஆராய்ச்சி பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ராகுல அத்தகல்ல , கணினிப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சந்திமால் ஜயவர்த்தன, மெட்டீரியல் இன்ஜினியரிங்கின் திணைக்களத் தலைவர் கலாநிதி முதித் கருணாரத்ன ஆகியோரும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப தடப்படுத்தலில் உள்ளடங்கியுள்ளனர். சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பெரேரா, பேராசிரியர் லக்ஷ்மன் அலஸ், கலாநிதி ரஞ்சித் பெரேரா ஆகியோர் வணிக மற்றும் முகாமைத்துவ, பொருளாதார மற்றும் பொருளாதார அளவியல், வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை ஆகியவற்றில் முறையே தரப்படுத்தல்களில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
மேதிகமாக, மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆராய்ச்சி இலக்கியங்களின் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க மேற்கோள் தரவுத்தளமான ஸ்கோபஸின் அடிப்படையில், அனைத்து துறைகளிலும் உலகின் முதல் 2% தரவரிசையில் உள்ள அறிஞர்களின் குழு 2020 இல் அடையாளம் காணப்பட்டது. உலகளாவிய ரீதியில் முன்னணியில் உள்ள 60,000 ஆராய்ச்சியாளர்களின் பட்டியலில் பேராசிரியர் நிமல் ராஜபக்ஷ முதல் 1%தரவரிசையில் இடம்பிடித்துள்ளதுடன், இது இலங்கையின் உயர்கல்வி நிறுவனத்தின் கல்விசார் பணியாளர் ஒருவர் அடைந்துள்ள உயர்ந்த தரவரிசையாகும். ஸ்கோபஸ் அடிப்படையிலான தரவரிசையானது ஆறு மேற்கோள் அளவீடுகளைக் கவனத்தில் கொண்டு முதல் 2% அறிஞர்களைத் தொகுத்துள்ளது.
AD அறிவியல் குறியீடு (Alper-Doger Scientific Index) என்பது விஞ்ஞான செயல்திறன் மற்றும் தனிப்பட்ட விஞ்ஞானிகளின் விஞ்ஞான உற்பத்தித்திறன் கூடுதல் மதிப்பின் அடிப்படையில் தரவரிசைப் படுத்தும் மற்றும் பகுப்பாய்வுகளை மேற்கொள்ளும் அமைப்பாகும். மேலும், இது இணைந்த விஞ்ஞானிகளின் அறிவியல் பண்புகளின் அடிப்படையில் நிறுவனங்களின் தரவரிசைகளை வழங்குகிறது. மேலதிக தகவல்களுக்கு, https://www.adscientificindex.com/?tit=Engineering+%26+Technology&con&country_code=lk&subject&fbclid=IwAR1HzZUCv8XyzscV0Ao-tl3Xo9_bNOJ3JDBUIHJIMsFi8nO-5E3l-mVRxSU.