இரண்டு Pinnacle Sri Lanka விருதுகளை வென்றுள்ள Unique Industrial Solutions

Share with your friend

பாதுகாப்பான துணைப்பாகங்கள் மற்றும் கைத்தொழில் பொறியியற் தீர்வுகளை வழங்கும் முதன்மையான நிறுவனமான Unique Industrial Solutions தனியார் நிறுவனம் Pinnacle Sri Lanka விருது விழாவில் ஆண்டின் சிறந்த பாதுகாப்பான தீர்வுகள் மற்றும் துணைப் பாகங்கள் வழங்குநனர் (பாதுகாப்பு பிரிவு) என்ற விருதையும் ஆண்டின் சிறந்த தொழில்முயற்சியாளருக்கான (பாதுகாப்பான துணைப்பாகங்கள் வழங்குநர்) விருதையும் வென்றுள்ளது. 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட Unique Industrial Solutions நிறுவனம் உயர் தரத்திலான பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் தீர்வுகளை வழங்குவதில் புகழ்பெற்று விளங்குகிறது. தனியார் பாதுகாப்பு துணைப்பாகங்களுக்கான 3M, இன்னுமொரு பாதுகாப்பு துணைப் பாகங்களுக்கான Life Gear, வாயுவை அறிந்துக்கொள்வதற்கான Watch Gas போன்ற சர்வதேச அங்கீகாரம் பெற்ற வர்த்தகநாமங்களின் அதிகாரம் பெற்ற விநியோக முகவராகவும் இந் நிறுவனம் செயற்படுகின்றது.கழிவு நீரை சுத்தப்படுத்தல், ரிவர்ஸ் ஒஸ்மொசிஸ் கட்டமைப்புகள் போன்ற சேவைகளையும் வழங்கும் Unique Industrial Solutions சுற்றாடல்  பாதுகாப்புக் கருத்திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கிடையே முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளித்து சுற்றாடல் மாசுபாட்டை குறைப்பதற்கும், இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கும் உழைத்து வரும் இந் நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியாகவும் ஏற்கெனவே பல விருதுகளையும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு தமது வாடிக்கையாளர்களுக்கு கைத்தொழில் பயிற்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதோடு பரந்தளவிலான கணக்கெடுப்புகளையும் இந் நிறுவனம்  மேற்கொள்கிறது. பல் தேசிய கம்பனிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கும் Unique Industrial Solutions இந்த ஆண்டில் GLAMMER, BRAVO  மற்றும் TUSKER போன்ற வர்த்தகநாமங்களின் கீழ் இந் நிறுவனத்துக்கே தனித்துவமான மூன்று வகை பாதணிகளை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. “சேவை நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், புத்தாக்க மற்றும் நிலைபேறான தீர்வுகள் மூலம் சுற்றாடலை பாதுகாப்பதற்கும் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். இந் விருதுகளின் மூலம் உயர் தரத்திலான சேவைகளை வழங்குவதற்கு நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பும், எமது சேவைகள் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் மேலும் உறுதியாகின்றது.” என நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு கெலும் பெரேரா தெரிவித்தார்.


Share with your friend