- கிராமிய பொருளாதாரங்களுக்கு மீளவலுவூட்டல், பாலின மற்றும் சமூக ஒன்றிணைப்பை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தல்
- கிராமிய தொழில் உருவாக்கம், தொழில் இன்மையை இல்லாமல் செய்தல், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் போன்றவற்றை இலக்கு வைத்தல்
- நுண், சிறு நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு டிஜிட்டல் கட்டமைப்பு, நாடளாவிய e-வணிக செயற்பாடுகளில் ஈடுபடக் காணப்படும் தடைகளை இல்லாமல் செய்தல்
- அதிகளவான பெண்களை நிதியளவில் சுயாதீனமான தொழில் முயற்சியாளர்களாக திகழச் செய்ய வலுவூட்டுவதை இலக்காகக் கொண்டிருத்தல்
- கிராமிய தொழில்முயற்சியாளர்கள், பெண்கள் தலைமைத்துவத்தின் கீழ் வழிநடத்தப்படும் வியாபாரங்கள் போன்றவற்றில் e-வணிகம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதை ஆரம்பித்தல்
முன்னணி ஒன்லைன் கொடுப்பனவு கட்டமைப்பான WEBXPAY, அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்துடன் (DFAT) சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இதனூடாக, இலங்கையின் நுண், சிறு மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு டிஜிட்டல் கொடுப்பனவுகளை அணுகுவதை விரிவாக்கம் செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது.
மீட்சிக்கான வழிகாட்டியாக DFAT பங்காண்மை அமைந்திருப்பதுடன், பிராந்திய பொருளாதார மீட்சியை ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்டமைந்துள்ளது. WEBXPAY இன் பிரதான கொடுப்பனவு கட்டமைப்பு மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட e-வணிக தீர்வுகளை பயன்படுத்தி, நாடு முழுவதையும் சேர்ந்த நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்டி, இலங்கையின் வளர்ந்து வரும் டிஜிட்டல் கட்டமைப்பினூடாக பயன்பெறச் செய்து, பாலின மற்றும் சமூக உள்ளடக்கத்தில் அதிகளவு கவனம் செலுத்தப்படும்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய பிரதி உயர் ஸ்தானிகர் அமென்டா ஜுவல் கருத்துத் தெரிவிக்கையில், “WEBXPAY உடன் கைகோர்த்து, இலங்கையின் சிறிய, நடுத்தரளவு வியாபாரங்களுக்கு கைகொடுக்க முடிந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். குறிப்பாக பெண்களினால் முன்னெடுக்கப்படும் வியாபாரங்களை வலுவூட்டி, அவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சௌகரியமான முறையில் அட்டை மூலமான மற்றும் மொபைல் கொடுப்பனவுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அவர்களின் நிதி மற்றும் டிஜிட்டல் அறிவை மேம்படுத்துவதற்கு மேலாக, இந்தப் பங்காண்மையினூடாக, நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு தமது வியாபார நடவடிக்கைகளை தொற்றுப் பரவலுடனான இந்தக் காலப்பகுதியிலும் ஒன்லைனில் முன்னெடுத்துச் செல்ல உதவிகள் வழங்கப்படும். எதிர்காலத்தில் டிஜிட்டல் பொருளாதாரத்தில் போட்டிகரமானதான திகழ்வதற்கு அவர்களுக்கு உதவியாக அமைந்திருக்கும். முறையாக பதிவு செய்து, தமது ஒன்லைன் பிரசன்னத்தை மேம்படுத்துவது மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்களை திட்டமிடுவது போன்றவற்றுக்கு உதவுவதன் மூலமாக, அவர்களால் தமது வியாபார செயற்பாடுகளை சிறந்த முறையில் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதுடன், பொருளாதார தாக்கங்களின் போதும், மீண்டெழக்கூடிய நிலையில் இருப்பார்கள்.” என்றார்.
சிறு வியாபாரங்களுக்கு பணமில்லாத முறையிலான கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்வதற்கு ஆதரவளித்து, அவர்களின் வியாபாரத்தை ஒன்லைனுக்கு கொண்டு செல்வதற்கு WEBXPAY மற்றும் DFAT ஆகியன உதவிகளை வழங்கி, கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள, இலங்கையின் கிராமிய பொருளாதாரங்களின் துரித மீளமைப்புக்கு கைகொடுப்பது எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. ஏற்கனவே காணப்படும் வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்களை சென்றடைந்து தமது வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு இது உதவியாக அமைந்திருக்கும். அத்துடன், தமது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யவும், தமது நிதியியல் மற்றும் டிஜிட்டல் அறிவை வலிமைப்படுத்திக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.
இந்த நிகழ்ச்சியினூடாக, WEBXPAY இனால் முறையாக பதிவு செய்து கொண்ட நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு தமது ஒன்லைன் வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கும் வியாபாரத்தில் நிலைத்திருப்பதற்கு அவசியமான ஊக்குவிப்புத் திட்டங்களை திட்டமிடவும் உதவிகள் வழங்கப்படும். இதன் பெறுபேறாக நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு தமது ஒன்லைன் விற்பனைகள் கண்காணிப்பது, கொடுப்பனவு லிங்க்களை உருவாக்குவது மற்றும் தமது வாடிக்கையாளர்கள் தரவுகளைக் கொண்ட தகவல் கட்டமைப்பை பேணக்கூடியதாக இருக்கும்.
WEBXPAY இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் ஸ்தாபகருமான ஒமார் சாஹிப் கருத்துத் தெரிவிக்கையில், “ஒவ்வொரு இலங்கையரின் வாழ்விலும் நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைத் துறை என்பது தொடர்புபட்டதாக அமைந்துள்ளது. எமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இந்த வியாபாரங்கள் அமைந்திருந்த போதிலும், கடந்த வருட காலமாக பெருமளவான வியாபாரங்கள் கடும் சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளன. எனவே, எமக்கு உதவிக் கரம் நீட்டியமைக்காகவும், நிலைபேறான, அடிப்படையான நிறுவனங்களினால் வலுவூட்டப்படும் பொருளாதார வளர்ச்சி எனும் புதிய யுகத்துக்கு எம்மை வழிநடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.” என்றார்.
சாஹிப் மேலும் குறிப்பிடுகையில், பாரம்பரிய வியாபாரங்கள் பின்னடைவுகளை எதிர்நோக்கியிருந்ததுடன், இலங்கையின் e-வணிகம் மற்றும் ஒன்லைன் வியாபாரங்கள் இந்தத் தொற்றுப் பரவலின் போது சிறப்பாக இயங்கியிருந்தன. எவ்வாறாயினும், இந்த வாய்ப்புகள் பெருமளவில் கொழும்பிலும், மேல் மாகாணத்தில் மற்றும் சில அண்மைய நகரங்களில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த வியாபாரம் தொடர்பில் போதியளவு அனுபவமின்மை மற்றும் நிபுணத்துவமின்மை காரணமாக, கிராமிய நுண், சிறிய நடுத்தரளவு வியாபாரங்கள் பணமீட்ட தவறியிருந்ததுடன், ஒன்லைன் சேவைகளில் ஏற்பட்ட கேள்வி காரணமாக ஈடுகொடுக்க முடியாமலிருந்தன.
இலங்கையின் நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள் நாட்டின் மொத்த வியாபாரங்களின் 90 சதவீதத்தைக் கொண்டுள்ளன. இவற்றினால் மொத்த தொழில் வாய்ப்புகளின் 45 சதவீதம் ஈடு செய்யப்படுகின்றது. மொத்த தேசிய உற்பத்தியின் 52 சதவீத பங்களிப்பை வழங்குகின்றது. எவ்வாறாயினும், பெரும்பாலான இந்த நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள் முறைசாரா வியாபாரங்களாக அமைந்துள்ளன. அதன் பெறுபேறாக, தினசரி பண அடிப்படையிலான விற்பனைகளில் இவற்றுக் தங்கியிருக்க வேண்டியுள்ளதுடன், முறையான திட்டமிடல் இன்மை மற்றும் முகாமைத்துவ திறன்கள் இன்மை நிலைக்கு முகங்கொடுக்கும். தொற்றுப் பரவலின் போது, தினசரி செயற்பாடுகளில் ஒப்பற்ற தடங்கல்கள் பதிவாகியிருந்தன.
இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படும் காலப்பகுதியில், WEBXPAY இனால் திட்டத்தினூடாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றி கவனமான முறையில் கண்காணிப்பு மற்றும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு, கிராமிய சமூகத்தாரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். பாரியபொருளாதார மட்டத்தில் நேர்த்தியான அனுகூலங்களை ஏற்படுத்துவதும் நோக்காக அமைந்துள்ளது. புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு மேலாக, கிராமியமட்டத்தில் தொழில் வாய்ப்பின்மையை இல்லாமல் செய்வதற்கு உதவுவதையும் இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. நிதியளவில் சுயாதீனமான பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதிலும் இந்தத் திட்டம் கவனம் செலுத்தும். மேலும், திட்டத்தின் டிஜிட்டல் வழிமுறை என்பதனூடாக, காபன் வெளியேற்றத்தைக் குறைப்பதுடன், விறுவிறுப்பான பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதும் இலக்காக அமைந்துள்ளது.