சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலைபேறான செயன்முறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில், நாட்டின் கோழிப் பண்ணைத் துறையில் உறுதியான நாமத்தைக் கொண்டுள்ள நியு அந்தனீஸ் பார்ம்ஸ் (பிரைவட்) லிமிடெட், பெருமைக்குரிய Greenhouse Gas (GHG) சான்றிதழைப் பெற்றுள்ளது. ISO 14064-1:2018 நியமங்களுக்கமைய உறுதி செய்யப்பட்டு, நெதர்லாந்தைச் சேர்ந்த கட்டுப்பாட்டு யூனியன் சான்றளிப்பு அமைப்பிடமிருந்து இந்த சான்று வழங்கப்பட்டுள்ளது.
இதனூடாக, நாட்டின் முதலாவது ஒரே GHG (Greenhouse Gas) சான்றிதழைப் பெற்ற கோழி இறைச்சி உற்பத்தியாளராக நியு அந்தனீஸ் பார்ம்ஸ் திகழ்கின்றது. தனது முழு விநியோகத் தொடரிலும் காபன் கரிசனை மிகுந்த வழிமுறை பின்பற்றப்படுவதை உறுதி செய்கின்றது. வலுச் சேமிப்பு நடவடிக்கைகள், பொறுப்பு வாய்ந்த கழிவு அகற்றல் கட்டமைப்புகள், சூரிய வலுப் பாவனைக்கு மாறுதல், தன்னியக்கமயமாக்கலுக்கு மாறுவதனூடாக கடதாசி பாவனையைக் குறைத்தல் போன்ற செயற்பாடுகளினூடாக இந்த GHG வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படுகின்றது.
நியு அந்தனீஸ் பார்ம்ஸ் தவிசாளரும் இணை ஸ்தபகருமான எமில் ஸ்டான்லி கருத்துத் தெரிவிக்கையில், “நாம் ஸ்தாபிக்கப்பட்டது முதல் சூழலுக்கு நட்பான தொழிற்துறையின் சிறந்த செயன்முறைகளை பின்பற்றுவதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். GHG சான்றைப் பெற்றுக் கொண்டுள்ளமையானது எமது நிறுவனத்துக்கு முக்கியத்துவம்வாய்ந்ததாக மாத்திரம் அமைந்திராமல், நாட்டின் கோழிப் பண்ணைத் துறைக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இதனூடாக, காபன் வெளியீட்டை குறைப்பது தொடர்பில் எமது அர்ப்பணிப்பையும், ஆற்றலை இது பிரதிபலிக்கப்படுவதுடன், பல தலைமுறைகளுக்கு எமது சூழல் கட்டமைப்பை பேணுவதற்கும் உதவியாக அமைந்துள்ளது.” என்றார்.
சூழலுக்கு நட்பான முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கு கிடைத்த சான்றாக இந்த சான்றிதழ் அமைந்துள்ளது. ‘HarithaHari’ கோழி இறைச்சியினூடாக இயற்கையான பசுமை வழங்கப்படுவதுடன், சரியான சுவை மற்றும் நறுமணம் போன்றவற்றுடன், சரியான போஷாக்கும் கிடைக்கின்றது. இறைச்சியில் அவசியமான அமினோ அமிலங்க்ள அடங்கியிருப்பதுடன், 100 சதவீதம் இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்பான முறையில் உற்பத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. விலங்கு நலன்புரி பணிகள், பாதுகாப்பு மற்றும் சுகாதார நியமங்கள் போன்றன அமெரிக்காவின் தேசிய கோழிஇறைச்சி சம்மேளனத்தின் நியமங்களை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன.
நியு அந்தனீஸ் பார்ம்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் சுரவீர கருத்துத் தெரிவிக்கையில், “சமூகப் பொறுப்புணர்வு என்பதற்கு அப்பாற்பட்டதாக பசுமையான வழிமுறைகளைப் பின்பற்றுவது என்பது அமைந்திருப்பதுடன், அதை கடப்பாடாகவும், கடமையாகவும் கருதுகின்றோம். நாம் ஏற்கனவே பெற்றுள்ள பல சான்றுகளுடன், இந்த சான்றிதழும், எமது சகல வாழ்வாதாரங்களின் நலனுக்காக சரியான கோழி இறைச்சியை வழங்கும் பயணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படியாக அமைந்துள்ளது.” என்றார்.
நியு அந்தனீஸ் பார்ம்ஸ் என்பது GMP, HACCP மற்றும் ISO 22000 சான்றுகளைப் பெற்ற நிறுவனமாக அமைந்திருப்பதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச ஹலால் சான்றுகளையும் பெற்றுள்ளது. பாரம்பரிய பிளாஸ்ரிக் அல்லது பொலிதீன் மூலப் பொருட்களை பயன்படுத்தி பொதியிடுவதிலிருந்து மாறி, கொம்போஸ்டாக மாற்றக்கூடிய பொதியிடலை பின்பற்றும் இலங்கையின் முதலாவதும், ஒரே கோழி இறைச்சி உற்பத்தியாளராக திகழ்கின்றது.
1986 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நியு அந்தனீஸ் பார்ம்ஸ், கடந்த காலங்களில் நம்பிக்கை மற்றும் தரம் போன்றவற்றுக்காக பாரிய வளர்ச்சியையும் வெற்றிகரமான செயற்பாடுகளையும் பதிவு செய்துள்ளது. இதனை அதன் பங்காளர்களுடன் நீண்ட காலமாக பேணி வரும் உறுதியான உறவுகளினூடாக அவதானிக்க முடிகின்றது. உற்பத்திக் கொள்ளளவை அதிகரிக்கும் விரிவாக்க நடவடிக்கைகளை நிறுவனம் மேற்கொள்வதுடன், தூரநோக்குடைய ஏற்றுமதி அடிப்படையிலான தந்திரோபாயத்தையும் கொண்டுள்ளது.