இலங்கையில் பாதுகாப்பான சுகாதார பழக்கத்தை மேம்படுத்தும் முன்னோடியாக Dettol

Share with your friend

Dettol, ஒரு நம்பகமான உலகளாவிய வர்த்தக நாமமாகும், இது ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக மனித ஆரோக்கியத்தை மேம்படுத்தி வருகிறது. மே 5 ஆம் திகதி உலக கை கழுவுதல் தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல புதிய திட்டங்களின் மூலம் நல்ல பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதற்கு தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அறிவித்துள்ளது.

ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவதற்கான Dettolன் அர்ப்பணிப்பின் அடிப்படையில், இந்த புதிய வேலைத்திட்டமானது இலங்கை சமூகத்தினரிடையே முறையான தனிப்பட்ட மற்றும் வீட்டு சுகாதாரப் பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதையும் பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Dettol 1933 ஆம் ஆண்டில் பிரசவத்திற்குப் பின்னர் சங்கிலித் தொடராக ஏற்படும் தொற்றான செப்சிஸைத் தடுக்க ஒரு பயனுள்ள தீர்வு தேவைப்படும் மருத்துவர்களுக்காக உருவாக்கப்பட்டது, பின்னர் இது உலகளவில் பிரபலமான வர்த்தக நாமமாக மாறியுள்ளது. இலங்கையில், Dettol 1962 ஆம் ஆண்டு முதல் நம்பிக்கை, செயல்திறன் மற்றும் கல்வியின் அடிப்படையில் அதன் நற்பெயரைப் பதிய வைத்து வருகிறது.

Dettol இலங்கையில் புதிய தாய்மார்களுக்கான சிறந்த விழிப்புணர்வு மற்றும் கல்வித் திட்டங்கள், பாடசாலைகளில் கை கழுவும் திட்டங்கள் மற்றும் COVID-19 நிவாரண முயற்சிகள் உட்பட பல சுகாதார முயற்சிகளைத் மேற்கொண்டு வருகிறது. Dettole வர்த்தக நாமம் பொதுமக்களின் சுகாதார உள்கட்டமைப்புக்கு பங்களிக்கிறது, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து, பொது இடங்கள் கிருமி நீக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அதே வேளையில், கோவிட் வைரஸ் பரவுவதைத் தவிடுப்பதற்கு, சரியான கை சுத்தம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது,

இலங்கை சமூகத்தினரிடையே சிறந்த சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக Dettol இந்த ஆண்டு தொடர்ச்சியான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. எதிர்காலத்தில், மகப்பேறு கிளினிக்குகள், பாடசாலை செயல்பாடுகள் மற்றும் பேரிடர் நிர்வகிப்பு நடவடிக்கைகள் போன்ற விடயங்களிலுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும், மேலும் இந்த செயல்பாட்டில் தொலைக்காட்சி உரையாடல்களின் மூலம் பொது மக்களுக்கான அறிவித்தல்களும் அடங்கும்.

இந்த புதிய முயற்சி குறித்து Reckitt Sri Lanka இன் சந்தைப்படுத்தல் பிரதானி ஷமிந்த பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “சமூகத்தினரிடையே முறையான சுகாதாரப் பழக்கவழக்கங்களை ஏற்படுத்துவதற்கு இலங்கையிலுள்ள அனைத்து சுகாதார ஊழியர்களும் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக நாங்கள் நன்றி கூறுகிறோம். Dettol ஒரு ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ள ஒரு பொறுப்பான வர்த்தக நாமமாகும். இந்த இலக்கை அடைய இது மற்றொரு படியாகும்.”

மேலும், இலங்கையில் முறையான கை கழுவும் பழக்கத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் Dettol மற்றுமொரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. “இலங்கையில் கைகளில் விஷக் கிருமிகளை நீக்கதல்” என்ற பகுதியின் கீழ் இந்நாட்டின் கலாசார கட்டமைப்பில் நடைமுறையில் உள்ள கருத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட புதிய சிந்தனைகளின் ஊடாக கை கழுவும் நல்ல பழக்கங்களை மக்களின் வாழ்வில் மீள அறிமுகப்படுத்துவதே இச்செயலின் பிரதான நோக்கமாகும்.

இது குறித்து கருத்து தெரிவித்த Dettol வர்த்தக நாம முகாமையாளர் லிலானி ராஜபக்ஷ, “இலங்கையில் சரியான கைகளை சுத்தம் செய்யும் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதற்கு Dettol செயலூக்கமான அணுகுமுறையை மேற்கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சிறந்த முயற்சியாகும்.’’ என அவர் கூறினார்.

இலங்கையில் சிறந்த சுகாதார நடைமுறைகளை மேம்படுத்த Dettol உறுதிபூண்டுள்ளது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் புதிய கை கழுவுதல் பிரச்சாரங்களைத் தொடங்குதல் ஆகியவை இந்த இலக்கை அடைய முக்கியமான படிகள். இவ்வாறான வேலைத்திட்டங்கள் மூலம் ஆரோக்கியமான சிறந்த இலங்கையை உருவாக்க முடியும்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக, Reckitt ஆனது அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது, நுகர்வோர் சுகாதாரத் துறையிலும் வீட்டிற்கும் பலவிதமான தீர்வுகளை வழங்குவதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்களின் சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துகிறது.

SLIM Effie விருதுகள் 2021 மற்றும் SLIM Digis 2.1 இல், Reckitt குழுவானது Dettol பிராண்ட் மார்க்கெட்டிங் சகோதரத்துவத்தால் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் 2022 SLIM சிறந்த வர்த்தக நாமம் விருது வழங்கும் நிகழ்வில், Dettol ஆனது ஆண்டின் சிறந்த தயாரிப்பு வர்த்தக நாமத்திற்கான தங்க விருதையும் உலகளாவிய வர்த்தக நாமத்திற்கான வெண்கல விருதையும் வென்றது. Reckitt தனது வாடிக்கையாளர்களுடன் திறம்பட தொடர்புகொள்வதற்கும் அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதன் பணிக்காக அங்கீகரிக்கப்பட்டது. LMD சஞ்சிகை Dettol இலங்கையில் மிகவும் விரும்பப்படும் வர்த்தக நாமமாக தரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share with your friend