இலங்கையில் ரமழான் உணவு கலாச்சாரத்தை TikTok மூலம் வெளிப்படுத்தும் Tea Podu

Share with your friend

உணவுக்கு ஒரு அசாதாரண சக்தி உண்டு. அது வெறும் உடலுக்குத் தேவையான எரிபொருள் மட்டுமல்ல. அது நம் வரலாற்றை சொல்லும் கதையாளர். அது ஒரு பாரம்பரியம். நம்மை இணைக்கும் ஒரு பாலம். இலங்கையைப் போன்ற பல்வகை கலாச்சாரத்தில், உணவு என்பது பல தலைமுறைகளை ஒன்றிணைக்கும் நூலாக செயல்படுகிறது. இலங்கை முழுவதும் உள்ள உணவகங்களை மதிப்பாய்வு செய்யும் பிரபலமான TikTok தளமான Tea Podu, குறிப்பாக ரமழான் காலத்தில், இலங்கையின் சிறப்பான உணவு கலாச்சாரத்தை ஆராய்ந்து பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. உணவை நேசிக்கும் ஒரு சாதாரண ஆர்வமாகத் தொடங்கிய இந்த முயற்சி, இன்று கலாச்சாரம், குடும்பம் மற்றும் உணவு ஆகியவை ஒன்றிணையும் ஒரு உயிரோட்டமான களமாக மாறியுள்ளது.


இந்த வசீகரிக்கும் TikTok பயணத்தின் இதயமாக விளங்குபவர் மொஹமட் உசாமா நௌபர்.அவரின் உணவின் மீதான ஆர்வம் ஆழமானது. Tea Podu ஆரம்பிக்கப்பட்டபோது, இலங்கையில் தமிழில் உணவு தொடர்பான வீடியோக்களை உருவாக்கிய முதல் பக்கம் இதுதான் என உசாமா தெரிவித்தார். ‘நான் எப்போதுமே அறிவைப் பகிர்வதை விரும்புபவன். அதனால்தான் என் நண்பர்களுடன் வெளியே செல்லும்போதெல்லாம் பல்வேறு உணவகங்களைப் பற்றிய வீடியோக்களைக் எடுத்து Tea Podu-வை ஆரம்பித்தேன். இந்த சாதாரண ஆர்வம் இலங்கையின் பாரம்பரிய சுவைகளை மட்டுமல்லாமல், உணவு வழங்கும் ஆழமான கலாச்சார தொடர்புகளையும் கொண்டாடும் ஒரு தளமாக Tea Podu உருவெடுக்கும் என்பதை உசாமா கற்பனை கூட செய்திருக்கவில்லை.

பாரம்பரியத்தை நவீன அணுகுமுறையுடன் கொண்டாடுதல்

ரமழான், நோன்பு மற்றும் சிந்தனைக்கான ஒரு மாதம். ஆழமான கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. உசாமாவைப் பொறுத்தவரை, அது அன்புக்குரியவர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்ளும் காலத்தால் அழியாத பாரம்பரியத்தைக் வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாகும். இலங்கையர்களாகிய எமக்கு, இஃப்தார் என்பது எப்போதுமே ஒற்றுமையின் நேரமாக இருந்தது. சமோசா, falooda மற்றும் தேங்காய் ரொட்டி போன்ற சுவையான உணவுகளால் நிறைந்திருந்தது என்று அவர் நினைவுகூர்கிறார். பாரம்பரியத்தில் ஊறியிருக்கும் இந்த ஒற்றுமையின் தருணங்கள், Tea Podu-வின் கவர்ச்சிகரமான உள்ளடக்கத்தின் மூலம் TikTok இல் உயிர்ப்பிக்கப்படுகின்றன. வாய் நீரூறச் செய்யும் உணவு விமர்சனங்கள் மற்றும் ரமழான் சிறப்பம்சங்களால் நிரம்பியுள்ளன.

எனினும், இதில் வெறும் பழைய நினைவுகளைத் தாண்டி ஏதோ ஒன்று உள்ளது. ஒவ்வொரு வீடியோவிலும், உசாமா இந்த பாரம்பரிய அனுபவங்களுக்கு ஒரு நவீன திருப்பத்தைக் கொண்டு வருகிறார். அவை இன்றைய பார்வையாளர்களுக்குப் பொருத்தமானதாகவும், உற்சாகமூட்டுவதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துகிறார். ரமழான் காலத்தில் நோன்பு திறப்பதற்கான சிறந்த உணவகங்களைக் கண்டுபிடிப்பதாக இருந்தாலும், அல்லது தமிழ் பின்னணிக் குரல் மற்றும் பிரபலமான TikTok பாடல்களுடன் உள்ளடக்கத்தை அனைவரும் உணரக்கூடியதாக்கும் மகிழ்ச்சிகரமான முறையாக இருந்தாலும், Tea Podu பாரம்பரியத்தின் சாரத்தை அழகாகப் பாதுகாக்கிறது. அதேநேரத்தில் TikTok மூலமாக அதை புதிய தலைமுறையினருக்கு எளிதில் கிடைக்கச் செய்கிறது. 


சமூகங்களை ஒன்றிணைப்பதில் TikTok இன் பலம்


TikTok என்பது வெறும் பொழுதுபோக்கிற்கான தளம் மட்டுமல்ல. அது கலாச்சார பரிமாற்றத்திற்கான ஒரு மேடையாக மாறியுள்ளது. ‘எங்களைப் போன்ற படைப்பாளிகள் குறுகிய காலத்தில் பரந்த ரசிகர்களை சென்றடைய TikTok ஒரு சக்திவாய்ந்த தளமாக இருந்து வருகிறது. அனைத்து வயதினரும் TikTok ஐப் பயன்படுத்துவதால், அதன் பெரிய பாவனையாளர் தளம் Tea Podu-வை பெருமளவு ரசிகர்களுடன் இணைக்க உதவியுள்ளது,’ என்று உசாமா தெரிவித்தார். அதன் குறுகிய-வடிவ வீடியோக்கள் மற்றும் உயிரோட்டமான வடிவமைப்புடன், Tea Podu தனது TikTok பக்கத்தில் சிறந்த உணவகங்களை மதிப்பாய்வு செய்வதோடு மட்டுமல்லாமல், அவற்றின் பின்னணியில் உள்ள கதைகளையும் பகிர்ந்து கொள்கிறது. எனவே இந்தக் கதைகள் எல்லைகளைக் கடந்து, உணவு மற்றும் பாரம்பரியத்தின் மீதான அன்பினால் மக்களை ஒன்றிணைக்கின்றன.

TikTok ஐ இவ்வளவு சிறப்பாக்குவது, பொதுவாக கேட்கப்படாத குரல்களை உயர்த்தி, அவற்றை உலகளாவிய அளவில் பரப்புவதில் உள்ளது. அந்தவகையில், இலங்கையின் Tea Podu போன்ற படைப்பாளிகளுக்கு, இது ரமழான் மற்றும் இலங்கை கலாச்சாரத்தை நேசிக்கும் மக்களுடன் தொடர்பு கொள்வதற்கான ஒரு பாலமாக விளங்குகிறது. இந்த தளம் உசாமாவிற்கு இடைவெளிகளை குறைக்கவும், பகிரப்பட்ட அனுபவங்கள் குறித்த உரையாடல்களை ஊக்குவிக்கவும் வழிவகுத்துள்ளது. ‘எனக்கு பல மக்களை அடைய முடிந்திருக்கிறது. உணவைப் போன்ற ஒரு எளிய விடயம் கூட மக்களை ஒன்றிணைக்க முடியும் என்பதைக் காண்பது நம்பமுடியாத விடயமாக உள்ளது,’ என்று அவர் தெரிவித்தார். 

ரமழானின் இதயம்: உணவு, குடும்பம் மற்றும் பாசம்

Tea Podu என்பது வெறுமனே உணவை காட்சிப்படுத்துவது மட்டுமல்ல. அது உணவு எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றி கொண்டாடுவது பற்றியதாகும். அதேபோல, ரமழான் என்பது உணவு மட்டுமல்ல, அது குடும்பம், பாரம்பரியம், மற்றும் நம்மை இணைக்கும் பிணைப்புகள் பற்றியது.’எனக்கு, ரமழான் என்பது பாரம்பரியம், குடும்பம், மற்றும் ஒற்றுமையைப் பற்றியது, மேலும் நான் என் உள்ளடக்கத்தில் அதைப் பிரதிபலிக்க முயற்சிக்கிறேன். என் உணவு விமர்சனங்கள், ரமழான் சிறப்புகள், மற்றும் இஃப்தார் அம்சங்கள் மூலம், இலங்கை வீடுகளில் நாங்கள் செய்வது போலவே, உணவுகளைப் பகிர்ந்து கொள்வதன் கலாச்சார முக்கியத்துவத்தை நான் முன்னிலைப்படுத்துகிறேன்,’ என்று உசாமா கூறுகிறார். 

ஒவ்வொரு விமர்சனத்திலும், உணவின் சிறப்பம்சத்திலும் ஒற்றுமையின் முக்கியத்துவம், பகிர்தலின் அழகு, மற்றும் நாம் உண்ணும் உணவின் கலாச்சார முக்கியத்துவம் உள்ளிட்ட ஆழமான செய்தியைக் கொண்டுள்ளது. இந்த வீடியோக்கள் அதை எதிரொலிக்கின்றன. ஏனெனில், அவை காலத்தால் அழியாத, ஆனால் புதுமையான மற்றும் அனைவருக்கும் அணுகக்கூடிய ஒன்றில் வேரூன்றியுள்ளன. ‘நான் இந்த வீடியோக்களை உருவாக்கும்போது, அது வெறும் உணவைப் பற்றியதல்ல. மற்றவர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதன் மகிழ்ச்சியை மக்களுக்கு நினைவூட்டுவதைப் பற்றியது,’ என்று உசாமா ஆர்வத்துடன் கூறுகிறார்.

Tea Podu-வின் தாக்கம் செயலியைத் தாண்டி வெகு தொலைவிற்கு நீண்டுள்ளது. அதைப் பின்தொடர்பவர்களுக்கு, நோன்பு திறக்க சிறந்த இடங்களைக் கண்டுபிடிப்பதற்கும், புதிய உணவுகளைக் கண்டறிவதற்கும், ரமழானின் சாரத்தைக் கொண்டாடுவதற்கும் ஒரு வழிகாட்டியாக மாறியுள்ளது. ‘எங்கள் உள்ளடக்கம் மக்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நோன்பு திறக்க சிறந்த இடங்களைக் கண்டுபிடிக்க உதவியுள்ளது, மேலும், அவர்களுக்குத் தெரியாத தனித்துவமான இலங்கை உணவுகளையும் கண்டறிய உதவியுள்ளது,’ என்று உசாமா கூறுகிறார். இந்த ஆய்வின் மூலம், Tea Podu ஒரு சமூக உணர்வை உருவாக்கியுள்ளது. உணவை மட்டுமல்லாமல் ஒற்றுமை மற்றும் சேர்ந்திருத்தல் ஆகியவற்றின் பகிரப்பட்ட மதிப்புகளைக் கொண்டாடுகிறது.

இப்போது தான் ஆரம்பமாகும் பயணம்

உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இணைக்கப்பட்டுள்ள இந்தக் காலத்தில், TikTok போன்ற தளங்கள் நாம் எவ்வாறு நமது கலாச்சாரங்களைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதை மறுவரையறை செய்கின்றன. Tea Podu-வுடன் உசாமா போன்ற படைப்பாளிகள், இலங்கையின் உணவு கலாச்சாரத்தை காண்பிப்பதோடு மட்டுமல்லாமல், உணவு வகைகளுக்குப் பின்னால் உள்ள கதைகள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்துகிறார்கள். ‘TikTok எங்களுக்கு வெறுமனே உணவைப் பகிர்ந்து கொள்ள மட்டுமல்லாமல், எங்கள் கலாச்சாரத்தை, பாரம்பரியங்களை, மற்றும் எங்கள் கதைகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பை அளித்துள்ளது,’ என்று உசாமா தெரிவித்தார். ‘இது ஒரு அற்புதமான பயணமாக இருந்தது, மேலும் இந்த உயிர்த்துடிப்பான சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.’ என அவர் மேலும் குறிப்பிட்டார். 

Tea Podu தனது உணவு விமர்சனங்கள் மற்றும் கலாச்சார கதைகளுடனும் தொடர்ந்து மக்களை ஈர்க்கும் நிலையில், TikTok வெறும் பொழுதுபோக்குக்கான தளமாக இல்லாமல், உண்மையான கலாச்சார பரிமாற்றத்திற்கான இடமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு புதிய வீடியோவிலும், உசாமா வெறும் உணவைப் பகிர்ந்து கொள்ளவில்லை, மாறாக, ஒரு உணவு வகை மற்றும் ஒவ்வொரு TikTok பதிவின் மூலமாக, பாரம்பரியத்தின் மீதான ஆழமான புரிதலை வளர்க்கிறார்.


Share with your friend