வருடாந்த போட்டியினூடாக IELTS பரீட்சார்த்திகளுக்கு ஆங்கில மொழி மூல பல்கலைக்கழகங்களில் கற்கை கட்டணங்களில் 5000 ஸ்ரேளிங் பவுண் வரை ஆதரவளிக்கப்படுகின்றது.
இலங்கை, சீனா, ஜப்பான், ஹொங் கொங், இந்தோனேசியா, கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்வான், தாய்லாந்து, வியட்நாம், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பரீட்சார்த்திகளுக்கு இந்த ஆண்டு IELTS Prize இல் பங்கேற்க முடியும்.
உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் IELTS ஊடாக பட்டப்படிப்பு அல்லது பட்டப்பின்படிப்பு கற்கைகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு இதில் பங்கேற்க முடியும் என்பதுடன், 2023 ஜனவரி முதல் 2024 மார்ச் மாதம் வரை தமது கற்கையை ஆரம்பிப்பவர்களுக்கு பொருந்தும் வகையில் அமைந்திருக்கும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2023 செப்டெம்பர் 15ஆம் திகதி ஆகும்.
போட்டிகரமான விண்ணப்ப தெரிவு முறையினூடாக, இலங்கையிலிருந்து மொத்தம் ஒன்பது வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அவர்களுக்கு தமது கற்கைகளை தொடர்வதற்கு ஆதரவளிக்கும் வகையில் பணப்பரிசை பெற்றுக் கொள்ள முடியும்.
British Council ஸ்ரீ லங்காவின் இலங்கைக்காக பணிப்பாளர் ஒர்லாண்டோ எட்வர்ட்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையர்களுக்கு இந்த விறுவிறுப்பான போட்டியினூடாக IELTS Prize ஐ வெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். விண்ணப்பங்களை நான் எதிர்பார்ப்பதுடன், கடந்த காலங்களில் வெற்றியீட்டியவர்கள் தமது வெளிநாட்டுக்கற்கைகளினூடாக பயன்பெற்று, அவற்றை உள்நாட்டு சமூகங்களில் பயன்படுத்துவார்கள் என கருதுகின்றேன்.” என்றார்.
“சர்வதேச கற்கை மற்றும் கைகோர்ப்பு போன்றன அனைவருக்கும் அமைதியான மற்றும் சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்குவதில் பங்களிப்பு வழங்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த நம்பிக்கை மிக்க மற்றும் மதிநுட்பமான நபர்களுக்கு அவர்களின் இலக்குகளை எய்துவதற்கு ஆதரவளிப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்.” என்றார்.
விண்ணப்பதாரிகளுக்கு பரிசு தொடர்பில் மேலதிக தகவல்களை, விண்ணப்பிக்கும் முறை மற்றும் அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் https://takeielts.britishcouncil.org/take-ielts/study-work-abroad/ielts-prize எனும் இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.
IELTS பற்றி
The International English Language Testing System (IELTS) என்பது, உயர் கல்வி மற்றும் சர்வதேச புலம்பெயர்வுக்கான, உலகின் புகழ்பெற்ற ஆங்கில மொழி அறிவுப் பரிசோதனையாக அமைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் 11,500 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் IELTS இல் நம்பிக்கை கொண்டுள்ளன. இவற்றில் கல்வி நிலையங்கள், தொழில் வழங்குநர்கள், அரசாங்கங்கள் மற்றும் நிபுணத்துவ அமைப்புகள் போன்றன அடங்கியுள்ளன. கடந்த ஆண்டில் இலங்கையில் 60,000க்கும் அதிகமான பரீட்சார்த்திகள் IELTS பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
IELTS இன் இணை உரிமையாண்மையை British Council, IDP: IELTS அவுஸ்திரேலியா மற்றும் Cambridge Assessment English ஆகியன கொண்டுள்ளன. IELTS பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு: www.ielts.org
British Council பற்றி
ஐக்கிய இராஜ்ஜியத்தின் கலாசார உறவுகள் மற்றும் கல்விசார் வாய்ப்புகளுக்கான சர்வதேச அமைப்பாக British Council திகழ்கின்றது. இணைப்புகளை கட்டியெழுப்பல், ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் உலகளாவிய நாடுகளில் வசிக்கும் மக்களிடையே புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதனுஸடாக சமாதானம் மற்றும் சுபீட்சத்துக்கு நாம் ஆதரவளிக்கின்றோம். இதனை எமது கலை மற்றும் கலாசாரம், கல்வி மற்றும் ஆங்கில மொழி ஆகியவற்றில் மேற்கொள்ளும் பணியினூடாக மேற்கொள்கின்றோம். 200 க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களுடன் நாம் பணியாற்றுவதுடன், 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரசன்னத்தைக் கொண்டுள்ளோம். 2021-22 காலப்பகுதியில் நாம் 650 மில்லியன் மக்களை சென்றடைந்திருந்தோம். மேலதிக தகவல்களுக்கு: https://www.britishcouncil.lk/