அவுஸ்திரேலியாவின் இலங்கை சுற்றுப்பயணம் ஜூன் 7-ம் தேதி Daraz கோப்பை T20 தொடருடன் தொடங்குகிறது
அவுஸ்திரேலியாவின் இலங்கை சுற்றுப்பயணம் 6 வருடகால இடைவெளிக்குப் பிறகு நடைபெறுவதால், நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு கிரிக்கெட் நிகழ்வாக அமைகின்றது. மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட ‘Daraz கோப்பை’T20 தொடர் ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கண்டி பல்லேகல்ல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 2022 ஜூன் 07, 08, மற்றும் 11 ஆகிய திகதிகளில் நடைபெறும்.
நாட்டின் அனைத்து விதமான சவால்களையும் தாண்டி இலங்கையர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டிற்காக ஒரே குரலில் உற்சாகப்படுத்தும் ஓர் நிகழ்வாக கிரிக்கெட் மாறியுள்ளது. தேசிய விளையாட்டு அரங்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உறுதிபூண்டுள்ள ஒரு வியாபாரக்குறியாக, நடைபெறவிருக்கும் இலங்கை vs அவுஸ்திரேலியா T20 சர்வதேச தொடரின் Title அனுசரணையாளராக Daraz தனது பங்கை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.
பிரதான அனுசரணையைப் பற்றி Daraz Sri Lanka முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ரக்கில் பெர்னாண்டோ கூறுகையில்;: “இலங்கை அணியின் நாட்காட்டியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான விறுவிறுப்பான “Daraz Cup” T20 கிரிக்கெட் போட்டிக்கு வலுவூட்டுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் இளம் மற்றும் ஆற்றல்மிக்க இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆதரவளிப்பது மற்றும் சர்வதேச விளையாட்டுக்களில் பெரும் முன்னேற்றம் அடைய நமது இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பது இப்போது நமது வர்த்தக குறியின் முக்கியமான ஒரு பகுதியாக மாறியுள்ளது. இளைஞர்களை மையமாகக் கொண்ட வியாபாரக் குறியாக, நமது நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்காக, குறிப்பாக சிரமங்கள் மற்றும் சவால்கள் காணப்படும் இக்காலகட்டத்தில், எங்கள் வீரர்களுக்கு நம்பிக்கையை வளர்ப்பதற்கு உறுதுணையாக இருப்பது எங்களின் கடமையாக நாங்கள் கருதுகிறோம்.” எனக் கூறினார்.
பல ஆண்டுகளாக, இலங்கையில் மிகவும் விரும்பப்படும் விளையாட்டை ஆதரிப்பதில் Daraz ஒரு முதன்மை பங்காளராக தனது பங்கினை வகித்துள்ளது, கிரிக்கெட் விளையாட்டின் விறுவிறுப்புத் தன்மை அப்போதைய சிலோனின் 1800 காலப்பகுதிகளிலேயே இருந்து வந்தன. சமீப காலங்களில், மிகப்பெரிய ஒன்லைன் ஷொப்பிங் தளத்தின் இலங்கை அணிக்கான இலங்கை கிரிக்கெட்டின் (SLC) உத்தியோகபூர்வ வெளிநாட்டு அணி அனுசரணையாளராக செயற்பட்டது மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கைக்கான இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக SLC உடன் கூட்டு சேர்ந்தது. மேலும் இலங்கை பிரீமியர் லீக் இற்கும் (LPL) கைக்கோர்த்ததுடன் Daraz App இல் நேரடி ஒளிபரப்பையும் செய்தது. 2020 இல் தென்னாப்பிரிக்காவில் இலங்கை சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடருக்கு இணை அனுசரணை வழங்கியது.