இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகம் SME அபிவிருத்தி விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது

Share with your friend

தொழிலின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக சந்தைப்படுத்துதலில் கிடைக்கக்கூடிய திறன்களைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை சந்தைப்படுத்துபவர்களுக்கான உச்ச அமைப்பு இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகம் (SLIM). SLIM SME அபிவிருத்தி விருதுகளின் (SMEDA) 2022 பதிப்பிற்கான நுழைவு அனுமதிகள் ஒக்டோபர் 20 முதல் 2022 நவம்பர் 30 வரை திறக்கப்பட்டுள்ளன.

SLIM SMEDA ஆனது ‘மீள ஆரம்பிப்போம் இலங்கை’ (ReStartSL) இன் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது, இது சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களின் (SME) விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் வியாபாரக்குறிகளின்; சிறந்த முயற்சிகளுக்கு வெகுமதி அளிப்பதன் மூலம் பொருளாதாரத்தை புத்துயிர் பெற வணிகங்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாண்டு போட்டி, SLIM SMEDA இரண்டு விருது பிரிவுகளைக் கொண்டுள்ளது. சிறப்பு விருதுகள் பிரிவு மற்றும் முக்கிய விருதுகள் பிரிவு, இதன் கீழ் இலங்கையின் SME அரங்கின் சிறப்பான வளர்ச்சி திறனை பிரதிபலிக்கும் பல்வேறுப்பட்ட வகை பிரிவுகளில் இருந்து சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு பல விருதுகள் வழங்கப்படுகின்றன. முக்கிய வகைகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் நிறுவனங்களுக்கு ‘ஆண்டின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம்’ என்ற பட்டம் வழங்கப்படும், அதே சமயம் இளம் தனிநபரால் வரவிருக்கும் வணிகத் தொடக்கத்திற்கு ‘ஆண்டின் இளம் தொடக்கம்’ என்ற பட்டம் வழங்கப்படும்.

இந்நிகழ்வில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட SLIM இன் தலைவர் நுவான் கமகே, “75 சதவீதத்திற்கும் அதிகமான வணிகங்கள் மற்றும் பணியாளர்களை கணக்கிடும் போது, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் தான் இலங்கை பொருளாதாரத்தின் உயிர்நாடியாகும். இருப்பினும், SMEகள் மத்தியில் அடிப்படை சந்தைப்படுத்தல், தயாரிப்பு மற்றும் சேவைகள் வணிகமயமாக்கல் உத்திகள் பற்றிய அறிவு இல்லாதது அவர்களின் திறனை பாதிக்கிறது. SLIM Brand Excellence மூலம் பெறப்பட்ட உட்கருத்துக்களின் மூலம் இதனை அறிந்து, இந் நிகழ்வின் மூலம் சந்தைப்படுத்தல் உத்திகளைப் பயிற்சி செய்து அவற்றை இணைத்து வெற்றியை நோக்கி முன்னேற சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். SLIM SMEDA இன் முக்கிய நோக்கம், நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகளை மேம்படுத்தும் உந்து சக்தியாக சந்தைப்படுத்துதலை நிறுவுவதாகும்.” எனக் கூறினார்.

ஒரு உள்நாட்டு நிறுவனம், வருடாந்த வருமானம் ரூ. 16 மில்லியன் முதல் ரூ. 250 மில்லியன் பெறும் நிறுவனங்கள் ஒரு சிறு தொழில்முனைவோராக SLIM SMEDA க்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். அதே சமயம் நிறுவனங்கள் வருடாந்த வருமானமாக ரூ.750 மில்லியனுக்கு மேல் பெறாத நிறுவனங்கள் நடுத்தர தொழில்முனைவோர் பிரிவில்; விண்ணப்பதாரர்களாக விண்ணப்பிக்கலாம். அனைத்து நிறுவனங்களும் தகுதி பெற, வெளிப்புற தணிக்கையாளர்களால் கடைசியாக தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளின் மூலம் நிதித் தரவின் சரிபார்ப்பை வழங்க வேண்டும். மேலதிக  தகவல்களுக்கு கங்கானி – 94 070 3266 988 என்ற இலக்கத்துடன் அல்லது பயபெயni.ட;ளடiஅ.டம என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.


Share with your friend