இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் (SLDA) அங்கீகாரம் பெற்ற புதிய Mouthwash வகைகளை அறிமுகப்படுத்தும் க்லோகார்ட்

Share with your friend

இலங்கையின் மிகவும் நம்பகமான வாய்ச்சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமங்களில் ஒன்றான க்லோகார்ட், தனது புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட க்லோகார்ட் Mouthwash வகைகளை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது. Clove Mouthwash மற்றும் Mint Mouthwash ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கும் இந்த புதிய தயாரிப்பானது, இலங்கை பாவனையாளர்களின் வாய்ச் சுகாதார நடைமுறைக்கு மேலும் அதிக பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நாளாந்தம் வாய்ச்சுகாதார பராமரிப்பு பழக்கத்தில் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தி சிறந்த சுகாதார பலனை பெற உதவும்.

புதிய க்லோகார்ட் mouthwash ஆனது, புளோரைட்டை கொண்டுள்ளதோடு, சிறந்த வாய் ஆரோக்கியத்திற்கு உதவும் கிராம்பு மற்றும் புதினா போன்ற இயற்கை பொருட்களுடன் விசேடத்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராம்பு, புளோரைட் கலவையானது, பற் சொத்தை ஏற்படுவதைத் தடுக்க உதவுவதோடு, கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது. அத்துடன் நீண்ட கால பாதுகாப்பிற்காக பல் மிளிரியை பலப்படுத்துகிறது. புதினா பக்டீரியாவை எதிர்த்துப் போராடும் அதேவேளை, ​​நீண்ட நேர புத்துணர்ச்சியை வழங்குகிறது. ஒருவர் தினமும் க்லோகார்ட் மவுத்வாஷை வாய்ச்சுகாதார பராமரிப்பிற்காக பயன்படுத்தும் வழக்கத்தில் கொள்வதன் மூலம், பற் சொத்தை மற்றும் ஈறு பிரச்சினைகள்  போன்ற பல் பிரச்சினைகளின் அபாயத்தைத் குறைக்க முடியும் என்பதோடு, பொதுவான பல் பிரச்சினைகளுக்கு எதிராக மேலதிக பாதுகாப்பை பெற முடியும். க்லோகார்ட் Mouthwash புதிய தயாரிப்பு வகைகள் இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் (SLDA) அங்கீகாரத்தைப் பெற்ற இலங்கையின் முதலாவது mouthwash ஆகும். இந்த அங்கீகாரமானது, இத்தயாரிப்புகளின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை கோடிட்டுக் காட்டுகிறது.

வாய்ச்சுகாதார பராமரிப்புத் துறையில் 30 வருடங்களுக்கும் மேலான அனுபவத்துடன், ஒரு வீட்டுப் பெயராக க்லோகார்ட் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. தரம் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள் தொடர்பான இவ்வர்த்தகநாமத்தின் அர்ப்பணிப்பானது, இலங்கையில் வாய்ச்சுகாதார பராமரிப்புத் தயாரிப்புகளின் நம்பகமான வழங்குனர் எனும் அதன் நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மீள் அறிமுகமானது, அனைத்து வயதினரும் தமது தினசரி வாய்ச்சுகாதார பராமரிப்பை மேம்படுத்துவதற்கு உறுதியளிக்கும் பல்வேறு Mouthwash வகைகளுடன், பற்பசையின் செயற்பாட்டுக்கு அப்பால் வர்த்தகநாமத்தின் நிபுணத்துவத்தை மேலும் விரிவுபடுத்துகிறது.


Share with your friend