தேசிய தொற்று நோய்கள் மருத்துவமனையிலுள்ள (IDH) கொவிட்-19 நோயாளர்களின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC தனது ‘உங்களுக்காகவே நாம்’ எனும் திட்டத்தின் மூலம் சுகாதார துறைக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக அதிநவீன Ultrasound Scanner இயந்திரத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது.
கொவிட்-19 மற்றும் பிற தொற்று நோய்கள் தொடர்பான நோயறிதல் மற்றும் தொற்றுக்களை கண்டறியும் பயன்பாட்டிற்கு உகந்த Scannerஇன் மதிப்பு 7.5 மில்லியன் ரூபாவாகும். HNBஇன் நிர்வாகப் பணிப்பாளரும் பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான டில்ஷான் ரொட்ரிகோ மற்றும் அதிகாரிகளான IDHஇன் பணிப்பாளர் டொக்டர் ஹசித அத்தநாயக்க மற்றும் ஆலோசகர் கதிரியக்க நிபுணர் டொக்டர் கிஷானி அபேவர்தன ஆகியோருக்கு Ultrasound Scanner இயந்திரத்தை கையளித்தார்.
‘கொவிட்-19 பரவுவதை கட்டுப்படுப்படுத்துவதற்கான எங்கள் திறன், எமது சுகாதார நிபுணர்களின் தைரியமான மற்றும் விடாமுயற்சியின் நேரடி விளைவாகும், குறிப்பாக IDHஇல் உள்ள ஊழியர்கள். இந்த நன்கொடை மூலம், முன்னணி மருத்துவ ஊழியர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம், ஒவ்வொரு நாளும் அயராது உழைத்து நம் தேசத்தை மீட்க உதவுகிறார்கள். இந்த தைரியமுள்ள ஊழியர்கள் ஆரம்பத்தில் இருந்தே இந்த நடவடிக்கையில் முன்னணியில் இருந்தனர், மேலும் மருத்துவமனை மற்றும் சுகாதாரத் துறைக்கு எந்த வகையிலும் தொடர்ந்து ஆதரவளிப்பதாக நாங்கள் உறுதியளிக்கிறோம்.’ என HNB இன் நிர்வாக பணிப்பாளரும் பிரதம செயற்பாட்;டு அதிகாரியுமான தில்ஷான் ரொட்ரிகோ கூறினார்.
HNBஇன் பேண்தகைமை அமைப்பினால் மேற்கொள்ளப்படும், ‘உங்களுக்காகவே நாம்’ முன்முயற்சிக்கு HNB ஊழியர்கள் நிதியளிக்கின்றனர், கடந்த ஆண்டு தொற்றுநோய் பரவ ஆரம்பித்த ஆரம்பக காலக்கட்டத்தில் ஒரு நாள் ஊதியத்தை வழங்கினர். இந்த முயற்சியை நிறுவுவதற்கான ஊழியர்களின் நன்கொடைகளை வங்கி பொறுப்பேற்று, இந்த தொற்றுநோயை எதிர்த்து போராடும் சுகாதார சேவையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், தொற்றுநோய் அதிகமாக பரவிய காலப்பகுதியில் நாட்டின் பிராந்திய மருத்துவமனைகள் மற்றும் MOH அலுவலகங்களுக்கு அவசரமாக தேவையின் நிமித்தம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (PPE) HNB வழங்கியது.
குறிப்பாக, ‘உங்களுக்காகவே நாம்’ திட்டம், HNB பேண்தகைமை அமைப்புடன் இணைந்து, இந்த ஆண்டு ஆரம்பத்தில் நாடு முழுவதும் உள்ள நுண் நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்ப 20 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியது.
‘பேண்தகைமை குறித்த HNBஇன் மூலோபாய கவனம் பல ஆண்டுகளாக காலத்தின் சோதனையை தாங்கிக்கொண்டது. பேண்தகைமை என்பது வங்கியின் வணிக மாதிரியில் உட்பொதிக்கப்பட்டுள்ளது மற்றும் பெரு நிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வு (CSR) ஒரு பங்கேற்பு தன்னார்வலராக உருவெடுத்துள்ளது, இது HNB ஊழியர்களால் பணமாகவோ அல்லது தயவான செயலாகவோ இருக்கலாம்’ என தலைமை டிரான்ஸ்போமேஷன் அதிகாரியும் பிரதி பொது முகாமையாளருமான எல். சிரந்தி குரே தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் 252 வாடிக்கையாளர் நிலையங்களைக்கொன்டுள்ள HNB இலங்கையின் மிகப்பெரிய தொழில்நுட்ப ரீதியான புத்தாக்கங்களைக் கொண்ட வங்கிகளில் ஒன்றாகும். இங்கிலாந்தை தளமாகக் கொண்ட புகழ்பெற்ற வங்கியாளர் சஞ்சிகை தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக உலகில் சிறந்த 1,000 வங்கிகளின் பட்டியலில் வங்கி இடம் பெற்றது. Fitch Ratings (Lanka) Ltd நிறுவனத்தினால் AA-(lka)இன் நீண்டகால தேசிய மதிப்பீட்டை HNB கொண்டுள்ளது.
2020ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி விருதுகளில் இங்கையின் சிறந்ந Sub-Custodian வங்கியாக HNB அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆசிய வங்கியாளர் விருதுகளில் 11வது தடவையாகவும் இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கிக்கான விருதை வென்றது. சவாலான பொருளாதார சூழல் மத்தியிலும் தன்னுடைய வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
படவிளக்கம்: HNBஇன் நிர்வாகப் பணிப்பாளரும் பிரதம் செயற்பாட்டு அதிகாரியுமான டில்ஷான் ரொட்றிகோவினால் Ultrasound Scanning இயந்திரம் IDH பணிப்பாளர் டொக்டர் ஹசித்த அத்தநாயக்க மற்றும் IDH ஆலோசகர் கதிரியக்க நிபுணர் கிஷானி அபேவர்தன ஆகியோரிடம் கையளிக்கும் போது (இடமிருந்து) IDH மருத்துவ அதிகாரி, டொக்டர் ரித்மி சமரசிறி, IDH ஆலோசகர் இதய நோய் டொக்டர் அஜித் திஸாநாயக்க, IDH ஆலோசனை மருத்துவர், டொக்டர் ஏ.ஜி.எஸ். ஆசிரி, IDH மருத்துவ அதிகாரி டொக்டர் அஸாத் சமத் மற்றும் HNB இன் தலைமை டிரான்ஸ்போமேஷன் அதிகாரியும் துணை பிரதி பொது முகாமையாளருமான சிரந்தி குரே, HNB இன் சிரேஷ்ட முகாமையாளர் – வசதிகள் முகாமைத்துவம் ரொஷான் பெர்னாண்டோ, HNB CHRO/AGM Human Capital மற்றும் வங்கிச் சேவைகள் அதிகாரி இந்திரஜித் சேனாதீர, HNB திட்ட தலைமை – பேண்தகைமை வர்த்தக அதிகாரி வி. டிஷாரத்னம் மற்றும் HNB Officer in Charge பேண்தகைமை வர்த்தக அதிகாரி ஷனெல் பெரேரா ஆகியோர் படத்தில் இருப்பதைக் காணலாம்.