இந்த நிச்சயமற்ற காலங்களில் உங்கள் கட்டுப்பணங்களைச் செலுத்துவதற்கு AIA கிளை அலுவலகம் ஒன்றுக்கு, வங்கிக்கு அல்லது வேறு எந்தவொரு வெளிப்புற இடங்களுக்குச் செல்வதை நீங்கள் இறுதியாகவே மேற்கொள்ள விரும்புகின்றீர்கள் என்பதை AIA நன்கு விளங்கிக் கொள்கின்றது. உங்களினதும் மற்றும் உங்களின் குடும்பத்தினதும் எவ்விதமான இடையூறுமற்ற பாதுகாப்பை உறுதிப்படுத்தி அனுபவிப்பதற்கு உங்களுக்கான மிகவும் சௌகரியமான காப்புறுதிக் கட்டுப்பண வசதியினை ஏற்படுத்தித் தருவதன் முக்கியத்துவத்தை நாங்கள் விளங்கிக் கொள்கின்றோம். அதனாலேயே AIA தங்கள் வாடிக்கையாளர்கள் வீடுகளில் மிகவும் பாதுகாப்பாகவும், சௌகரியமாகவும் இருந்தவாறு அவர்களுடைய காப்புறுதிக் கட்டுப்பணங்களைச் செலுத்துவதற்கான பாதுகாப்பான மற்றும் இலகுவான பல தெரிவுகளை வழங்குகின்றது.
புத்தம் புதிய AIA வாடிக்கையாளர் போர்ட்டலானது வாடிக்கையாளர்கள் தங்களது AIA காப்புறுதிகளை எந்தவொரு நேரத்திலும், எங்கிருந்தும் அணுகுவதற்கும், மேலாண்மை செய்வதற்கும் மிகவும் சௌகரியமான முறை ஒன்றாகும். இந்த ஒரே குடையின் கீழ் வடிவமைக்கப்பட்ட டிஜிடல் தீர்வானது வாடிக்கையாளர்கள் தங்களது காப்புறுதி, கொடுப்பனவு விபரங்கள், இழப்பீட்டுத் தகவல்கள் மற்றும் பல சேவைகள் அனைத்தையும் ஒன்லைனில் அணுகுவதற்கு இடமளிக்கின்றது. இது கைபேசி, டெப்லெட் மற்றும் தனிப்பட்ட கணினிகளின் உதவியுடன் எவ்விதமான இடையூறுமின்றி அணுகுவதற்காக வடிவமைக்கப்பட்ட மிகவும் சமீபத்தைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்ற அதிஉயர் பாதுகாப்பான தளமாகவும் காணப்படுகின்றது. மும்மொழிகளிலும் அணுகக்கூடியவாறு வடிவமைக்கப்பட்ட இத்தளமானது வாடிக்கையாளர்கள் தங்களது கட்டுப்பணங்களைச் செலுத்துவதற்கும், காப்புறுதி நிலைகளை அறிந்துகொள்வதற்கும், காப்புறுதி விபரங்களை அணுகுவதற்கும் மற்றும் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறாமல் சேவைக்கான கோரிக்கையினைத் தொடர்வதற்கும் அவர்களை அனுமதிக்கின்றது. www.aialife.com.lk எனும் AIA இணையத்தளத்திற்குப் பிரவேசித்து MY AIA இன் கீழுள்ள AIA வாடிக்கையாளர் போர்ட்டலை கிளிக் செய்வதன் மூலம் AIA வாடிக்கையாளர் போர்ட்டலில் நீங்களும் பதிவு செய்ய முடியும்.
AIA Quick Pay இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் இவ்வாறாக முதன் முறையாக புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட மிகவும் பரிபூரணமான டிஜிடல் கொடுப்பனவு பொறிமுறையாகும். இது உண்மையில் வடிக்கையாளர்கள் தங்களது புதிய காப்புறுதிக் கட்டணங்களைச் செலுத்துவதற்கும், தொடர்ச்சியான கட்டணத் திட்டங்களை அமைப்பதற்கும் அல்லது நிலையியற் கட்டளை ஏற்படுத்துவதற்கும் அவர்களை அனுமதிக்கின்றது. AIA Quick Pay அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இரண்டே வருடங்களில் ரூபா.1.5 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் மற்றும் கட்டுப்பணச் சேகரிப்புகள் இடம்பெற்றுள்ளன. AIA வாடிக்கையாளர்கள் தங்களது வாழ்க்கையினை இலகுவாகவும், மிகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவதற்கு AIA Quick Pay மற்றுமொரு வழியாகும்.
AIA இவ்வசதியினை அதாவது கோவிட் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னர் செப்டம்பர் 2019 இல் அறிமுகம் செய்திருந்தது. எனவே எங்களுடைய வாடிக்கையாளர்கள் மிகவும் இலகுவாக அனைத்துத் தருணங்களிலும் இதன் மூலமாக தங்களது கட்டுப்பணங்களைச் செலுத்த முடியுமாகவே இருக்கும். தற்போது வாடிக்கையாளர்களுக்கு டிஜிடல் கொடுப்பனவுகளுக்கான முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தங்களுடைய கைபேசிகளின் மூலமாகக் கொடுப்பனவுகளைச் செலுத்த முடியும். உண்மையில் இந்த டிஜிடல் தளமானது அனைத்து AIA வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமானதாகவும் மற்றும் பயனுள்ளதாகவுமே உள்ளது.
AIA வாடிக்கையாளர்கள் இலங்கையின் மிகவும் பிரபல்யமான mCash, Dialog eZ cash மற்றும் FriMi போன்ற கேபேசித் தீர்வுகள்/ டிஜிடல் பணப்பைகள் மூலமாக தங்களது செலுத்த வேண்டிய கட்டுப்பணங்கள் மற்றும் நிலுவைத் தொகைக் கட்டணங்களைச் செலுத்த முடியும். ஒன்லைன் வங்கிக் கொடுப்பனவுகளை கொமர்ஷல் வங்கி, HSBC, தேசிய சேமிப்பு வங்கி, ஹற்றன் நெஷனல் வங்கி, சம்பத் வங்கி, இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, ஸ்டேண்டட் சாட்டட் வங்கி, நேஷன்ஸ் ரஸ்ட் வங்கி போன்றவற்றின் மூலமாகவும் செலுத்த முடியும். AIA வாடிக்கையாளர்கள் இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்களாக இருக்கும் பட்சத்தில் கொமர்ஷல் வங்கியின் Q+, NDB Neo, HNB SOLO செயலிகளின் மூலமாகவும் தங்களது கொடுப்பனவுகளைச் செலுத்த முடியும்.
எனவே நீங்கள் AIA வாடிக்கையாளராக இருக்கும் பட்சத்தில் உங்கள் கட்டுப்பணங்களைச் செலுத்துவதற்கு ஏராளமான வழிகளைக் கொண்டிருப்பதோடு, எவ்விதத் தடங்களுமற்ற பாதுகாப்பையும் அனுபவிக்க முடியும். உங்களினதும், உங்கள் குடும்பத்தினதும் பாதுகாப்பிற்கான முக்கியத்துவத்தில் எவ்விதமான விட்டுக்கொடுப்பின்றி அனைத்துப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கைக்கொண்டு நீங்கள் மிகவும் பாதுகாப்பாகவே இருங்கள். உங்களுடைய ஆரோக்கியக் காப்புறுதி, ஓய்வூதியச் சேமிப்புகள் அல்லது நிதியியல் பாதுகாப்பிற்கு AIA இன் காப்புறுதித் திட்டங்களை நீங்கள் இதுவரை பெறவில்லை எனின் இலங்கையின் மிகச்சிறந்த காப்புறுதி நிறுவனமாக (2019 மற்றும் 2020 இற்காக குளோபல் பேங்கிக் எண்ட் பைனான்ஸ் ரிவியு நிறுவனத்தினால் விருது வழங்கி) கௌரவிக்கப்பட்டுள்ள நிறுவனத்திடம் இருந்து காப்புறுதித் திட்டம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கான மிகச்சரியான தருணம் இதுவாகும். மேலதிக விபரங்களுக்கு 0112 310310 தொலைபேசி இலக்கத்தினூடாக AIA இனை அழையுங்கள்.