உணவு அமைப்புகளையும் பொறுப்பான கொள்முதலையும் மேம்படுத்துதல்: தெற்காசியாவின் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்கும் வழிகள்

Share with your friend

அமெரிக்க சோயாபீன் ஏற்றுமதி கவுன்சிலின் SUSTAINASUMMIT மாநாடு, நிலையான உணவு அமைப்புகளை உருவாக்குவதில் அமெரிக்க சோயாவின் பங்கை வெளிப்படுத்துகிறது.

அமெரிக்க சோயாபீன் ஏற்றுமதி கவுன்சில் நடத்திய SUSTAINASUMMIT மாநாடு கொழும்பில் நடைபெற்றது. தெற்காசியாவைச் சேர்ந்த முன்னேறும் தலைவர்களும் அமெரிக்க சோயாபீன் விவசாயிகளும் இதில் கலந்து கொண்டனர். இப்போது மிகவும் அவசியம் என்ற கருப்பொருளில், பொறுப்பான கொள்முதலை மையமாகக் கொண்டு நிலையான தன்மையை வணிகத்தில் ஒருங்கிணைக்க இம்மாநாடு அழைப்பு விடுத்தது.

இலங்கையின் முக்கிய கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள், தங்கள் பொதியில் ‘நிலையான அமெரிக்க சோயா’ (‘Sustainable U.S. Soy’) முத்திரையை பயன்படுத்த ஒப்பந்தம் செய்தவர்கள், அமெரிக்க சோயாபீன் சங்கத்தின் இயக்குநர் ஸ்டான் போர்ன் தலைமையில் நடந்த குழு விவாதத்தில் கலந்து கொண்டனர்.

நிலையான தன்மை: ஒரு பிரபலமான போக்குக்கு அப்பால், வணிக தேவை

நிலையான தன்மை சுற்றுச்சூழலுக்கு மட்டும் நல்லதல்ல, வணிக இலாபத்திற்கும் உதவுகிறது. PwC-யின் நுகர்வோர் கருத்து ஆய்வின்படி, வாடிக்கையாளர்கள் நிலையான பொருட்களுக்கு 9.7% அதிகம் செலுத்தத் தயாராக உள்ளனர். இந்த சந்தை மாற்றம், நிலையான தன்மை நீடிக்கும் என்பதை காட்டுகிறது. இதை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் சந்தைப் பங்கை அதிகரிக்கவும், அபாயங்களை குறைக்கவும், பிராண்ட் மதிப்பை உயர்த்தவும் முடியும்.

அமெரிக்க சோயாபீன் ஏற்றுமதி கவுன்சிலின் (USSEC) தலைமை நிர்வாகி ஜிம் சட்டர், “நிலையான முறையில் சான்றளிக்கப்பட்ட அமெரிக்க சோயாபீன், வாடிக்கையாளர்களின் மாறிவரும் நிலையான கொள்முதல் தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது கால்நடைகள், மீன் உணவு மற்றும் சோயா உணவுகளுக்கு பயன்படுகிறது. அமெரிக்க சோயாவை தேர்ந்தெடுப்பவர்கள் சந்தையில் நம்பிக்கையை உருவாக்குவதோடு, போட்டியில் முன்னிலை பெறுகின்றனர்,” என்று கூறினார்.

அமெரிக்க சோயாபீன் விவசாயிகள்: நிலையான தன்மையின் முன்னோடிகள்

நிலையான தன்மை சமீபத்தில் பிரபலமானாலும், அமெரிக்க சோயாபீன் விவசாயிகள் பல தசாப்தங்களாக நிலையான முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். துல்லிய விவசாயம், பயிர் மாற்று மற்றும் நீர் மேலாண்மை போன்ற முறைகள் மண் அரிப்பை குறைத்து மண்ணின் தரத்தை மேம்படுத்தியுள்ளன.

நாங்கள் எப்போதும் தொடர்ந்து முன்னேற்றத்திற்கு முயற்சிக்கிறோம்,” என அமெரிக்க சோயாபீன் விவசாயியும் ஐக்கிய சோயாபீன் வாரிய இயக்குநருமான ஜோயி பவுட்ரோ கூறினார். “இன்று நாம் செய்யும் செயல்கள் நாளைய உலகத்தை வடிவமைக்கும். வாடிக்கையாளர்கள் அமெரிக்க சோயாவை தேர்ந்தெடுக்கும்போது, எங்கள் பண்ணைகளில் நிலையான முறையில் வளர்க்கப்பட்ட சோயாவின் மதிப்பை அவர்கள் உணர்கின்றனர்.”

நிலையான அமெரிக்க சோயா முத்திரை: ஒரு முக்கிய அடையாளம்

நிலையான தன்மை மக்களின் கொள்முதல் முடிவுகளை வழிநடத்துகிறது. ‘நிலையான அமெரிக்க சோயா’ (‘Sustainable U.S. Soy’) முத்திரை நிறுவனங்களுக்கு போட்டியில் முன்னிலை அளிக்கிறது. உணவு மற்றும் விலங்கு உணவு பொருட்களுக்கு குறைந்தது 60% அமெரிக்க சோயாவை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்கள் பொதியில் ‘நிலையான அமெரிக்க சோயாவால் உணவளிக்கப்பட்டவை’ (‘Fed with Sustainable U.S. Soy’) என்ற முத்திரையை பயன்படுத்தலாம். ‘நிலையான அமெரிக்க சோயா’ (‘Sustainable U.S. Soy’) முத்திரையை பெறுவதற்கு, முழு சோயாபீன் பொருட்களில் 90% சான்றளிக்கப்பட்ட நிலையான சோயா இருக்க வேண்டும்.

நியூ ஆந்தனீஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நீல் சுரவீர, இந்த முத்திரையின் நேர்மறையான தாக்கத்தைப் பற்றி கூறுகையில், “நிலையான முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வழங்கும் நிறுவனங்களை வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். ‘நிலையான அமெரிக்க சோயாவால் உணவளிக்கப்பட்டவை’ (Fed with Sustainable U.S. Soy’) என்ற முத்திரையின் உதவியுடன், எங்கள் சந்தைப் பங்கு சந்தை வளர்ச்சியை விட வேகமாக அதிகரிக்கிறது,” என்றார்.

சுமார் மூன்று தசாப்தங்களாக, அமெரிக்க சோயா தெற்காசியாவில் உறவுகளை வளர்த்து, புதுமைகளை ஊக்குவித்து, தொழில்துறையின் திறன்களை உயர்த்தி வருகிறது.


Share with your friend