உலகளாவிய புதுப்பிப்புக்களுடன் சிறந்த செயலி என்ற நிலையைக் கடந்து சென்றுள்ள Rakuten Viber

Share with your friend

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கவும், வர்த்தகநாமத்தின் தெரிவுநிலையை அதிகரிக்கவும் உதவும் வகையில் Business Inboxமற்றும் Commercial Accountஆகியவற்றை Viber அறிமுகப்படுத்தியுள்ளது 

2023, ஜனவரி 23, கொழும்பு – பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட குறுஞ்செய்திகளை அனுப்புவது மற்றும் ஒலியை அடிப்படையாகக் கொண்ட தொடர்பாடலில் உலகின் முன்னணியாளராகத் திகழும் Rakuten Viber, வாடிக்கையாளகளுக்கு செயலியின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக உலகளவில் இரண்டு முக்கிய வெளியீடுகளை அறிவித்துள்ளது. புதிதாக வழங்கப்படும் அம்சங்களான Business Inboxமற்றும் Commercial Accountஆகியவை சிறந்த செயலி என்ற Viber இன் நீண்டகால மூலோபாயத்தின் அடுத்த கட்டமாக அமையும். 

ஆய்வு அறிக்கைகளின் படி தனிப்பட்டமுறையிலான ஈடுபாடுகளை கம்பனிகள் மேற்கொள்ள வேண்டும் என்றே 71% வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பதுடன், சேவைகள் மூலம் சிறந்த வாடிக்கையாளர் மதிப்பை வழங்க 82% நிறுவனங்கள் பெறுமதி மேம்படுத்தல் உத்தியை செயற்படுத்தத் திட்டமிட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகம் ஆகிய இரண்டு விடயத்தையும் மனதில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள Viber இன் இந்தப் புதுப்பிப்பு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதுடன், வர்த்தகநாமத்துடன் ஈடுபாட்டையும் அதிகரிக்கும். 

வர்த்தகநாமம்-வாடிக்கையாளர் தொடர்பாடலை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு Business Inbox ஐ உலகளாவிய ரீதியில் Viber அறிமுகப்படுத்தியுள்ளது. வர்த்தகநாமம்-வாடிக்கையாளர்களுக்கான ஈடுபாட்டுக்கான தனித்துவமான இடத்தை, தனிநபர்கள் வழமையான Chat திரையிலிருந்து நேரடியாக அணுகலாம். இந்த அம்சமானது உத்தியோகபூர்வமான வர்த்தகநாம கணக்கிலிருந்து அனுப்பப்படும் அனைத்து வணிக செய்திகளையும் ஒரு கோப்பறையில் (folder) சேமித்து, ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு அனுமதிக்கும். (அவையாவன வங்கியிலிருந்தான அறிவிப்புக்கள், விநியோக சேவையின் ஓடர் உறுதிப்படுத்தல்கள், காட்சியறைகளிலிருந்து கிடைக்கும் விசேட கழிவுகள் போன்றவையாகும்) 

வாடிக்கையாளர் முதல் தடவையாக business message ஐ பெற்றுக்கொள்ளும்போது Business Inbox செயற்படுத்தப்படும். கடந்த காலத்தில் வணிகங்களுடன் உரையாடல்களை மேற்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் குறித்த உரையாடல்கள் யாவும் Business Inbox folder ற்கு தானாகவே நகர்த்தப்படும். Chats பட்டியலில் Business Inbox folder உருவாக்கப்பட்டால் அனைத்து வணிகச் செய்திகளும் நேரடியாக அதற்குள் செல்லும். Business Inboxஆனது வாடிக்கையாளர்களுக்கு குறித்த சிறந்த அனுபவத்தை வழங்குவதுடன், தமது வர்த்தக நாமங்களுடனான ஈடுபாடுகளை மிகவும் சௌகரியமான முறையில் மேற்கொள்ள வழிவகுக்கிறது. 

  • Business Inboxஇன் மேற்பகுதியில் குறிப்பிட்ட வர்த்தகநாமத்தின் உரையாடலை pin செய்யவும்
  • ஏந்தவொரு வர்த்தக நாமத்தையும் Business Inboxஇலிருந்து பிரதான ஊhயவள திரைக்கு நகர்த்தலாம்
  • பொதுவான Chats திரையில் எந்தவொரு வர்த்தக நாம உரையாடலையும் மேற் பகுதியில் pin  செய்யலாம்

அதேநேரம், வணிகத்திலிருந்த கிடைக்கும் பிந்திய புதுப்பிப்புக்களை இலகுவாக கண்டறிய முடியும். Folder ஆனது திரையின் மேல் பகுதியில் pin செய்யப்பட்டிருந்தால் business messages ஏனைய தனிப்பட்ட Chats உடன் கலந்துவிடாது. Business Inboxஆனது வாடிக்கையாளர் சேவை, வர்த்தக நாமத்துடனான ஈடுபாடு மற்றும் இயக்கி மாற்றம் போன்றவற்றை மேம்படுத்த  வர்த்தகநாமத்துக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் வினைத்திறான தொடர்பாடல்களுக்கு வழிவகுக்கும். 

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு நடவடிக்கை புதிய Commercial Accountஆகும். வர்த்தகநாமத்துடன் ஈடுபாடுகளை மேற்கொள்வதற்கான அனைத்து வழிகளையும் வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் கண்டறிய முடியும். இது தேடக்கூடிய வணிக நிறுவனம் தொடர்பில் அனைத்து வணிகத் தகவல்கள், சேவைகள் மற்றும் ஊhயவள பற்றி அனைத்தையும் Viber இல் வழங்கும். 

  • Viber இன் பிரதான search bar இல் குறித்த வணிகத்தின் பெயரைத் தட்டச்சு செய்து இந்த கணக்குகளைத் (businesses) தேட முடியும். 
  • வணிகம் என்ற பிரிவின் கீழ் இந்தத் தேடல் முடிவுகள் ஒரு குழுவாக்கப்படும்.
  • Commercial Accountஐ கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் வணிகத்தின் பெயர், குறியீடு, உறுதிப்படுத்தல் பதக்கம், விவரணம், தொடர்புத் தகவல்கள், தொடர்பாடல் மார்க்கம் போன்ற Viber இல் காணப்படும் விடயங்களைப் பார்வையிடலாம். இந்தக் கணக்குகள் வர்த்தகநாமம் குறித்து ஏனையவர்கள் பார்வையிடுவதற்கும் அனுப்பப்படலாம்.
  • வர்த்தக நாமங்கள் மூன்று முகவரிகள், இணையதளம், தொலைபேசி இலக்கம் மற்றும் 1000 எழுத்துகள் வரையிலான விளக்கத்தை வாடிக்கையாளர்கள் தாங்கள்  தேடும் அனைத்துத் தகவலையும் கண்டுபிடிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த முடியும்.

புதிய தேடக்கூடிய Commercial Accounts ஆனவை வாடிக்கையாளர்களுக்கு மேலும் அதிகாரத்தை வழங்குகிறது. வர்த்தகநாமங்களைத் தேட முடிவதுடன், தேடுவது மாத்திரமன்றி உடனடியாக குறித்த வர்த்தக நாமத்துடன் தொடர்பாடல்களையும் மேற்கொள்ள முடியும். Commercial Accounts வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும். Viber ஊடாக வணிகங்களுடன் தொடர்பாடல்களை மேற்கொள்ள விரும்பினால் அதற்குரிய channel ஐ தெரிவுசெய்து இந்தச் செயலியில் சிறிய இணையத்தள அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அதேநேரம், வணிகங்கள் தமது தொடர்பாடல்களை ஒழுங்குபடுத்தி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க முடியும்.

Commercial Accounts அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் Viber ஆனது இதனை தொடர்ந்தும் விஸ்தரிக்கும். வாடிக்கையாளரின் கைவிரல் அடையாளம், ஒரு கணக்கின் கீழ் பல சேவைகள், விஸ்தரிக்கப்பட்ட அம்சங்களான முன்பதிவு, இடம், வணிகத்துக்கு அழைப்பை ஏற்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்களை வேர்க்கவுள்ளது. இந்த வருடத்தில் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு முகாமைத்துவம் செய்யக் கூடிய மேலும் பல வாய்ப்புக்களையும் இந்தச் செயலி அறிமுகப்படுத்தவுள்ளது.

Business Inboxமற்றும் Commercial Accountமூலம் வணிகங்களுடன் ஈடுபாடுகளை மேற்கொள்ளும்போது வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் அதிகரிப்பதை Viber இலக்காகக் கொண்டுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட வர்த்தக நாமத்திலிருந்து அனுப்பப்படும் அனைத்து குறுஞ்செய்திகளும் Business Inboxஇற்கு நேரடியாக செல்லும். ஆள்மாறாட்டம் செய்யும் முயற்சிகளை இது தடுக்கும். ” blue tick”  மூலம் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகநாமங்களை வாடிக்கையாளர்கள் அடையாளம் கண்டுகொள்ள முடியும். Commercial Accounts அனைத்து வணிக தகவல்களையும் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தும். 

“ வர்த்தகநாமங்கள்-வாடிக்கையாளர் தொடர்பாடல்கள் மற்றும் ஈடுபாடுகளுக்கும் சௌகரியான ஒரு நிறுத்தத்திலான வணிக அனுபவத்தை வழங்கும் சிறந்த செயலி என்ற இலக்கை அடைவது என்ற Viber இன் அடுத்தகட்ட நகர்வின் ஒரு மைல் கல்லாக இது அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு செயலியின் மதிப்பை அதிகரிக்கவும், வர்த்தநாமங்கள் தங்கள் பார்வையாளர்களுடன் இணைவதற்கான வழிகளை விரிவுபடுத்தவும் நாங்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தும் சிறந்த செயலிக்கான அம்சங்களுக்கு இது அடித்தளமாக இருக்கும்” என இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஒஃபிர் இய்ல் தெரிவித்தார். “அதிக அம்சங்கள், அதிக சேவைகள் மற்றும் அதிக தகவல்தொடர்பு சனல்கள் என்பன வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக நாமங்களின் மதிப்புக்கு சமமாகும்” என்றார்.

இந்த இரண்டு விசேட அம்சங்களும் 2023 ஜனவரி 23ஆம் திகதி முதலில் உலகளாவிய ரீதியில் பயன்பாட்டில் இருக்கும்.


Share with your friend