1948 பிப்ரவரி 4 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட இலங்கையின் சுதந்திர தினத்தை கௌரவிக்கும் முகமாக பிராந்திய அரசியல் தலைவர்களும், பிரதிநிதிகளும் ஒன்று கூடும் இலங்கையின் தேசிய தின கொண்டாட்டங்களுக்கு முன்னர் கிரீன்பீஸ் தெற்காசியா பெருங்கடல் பாதுகாப்புக்கான பலமான செய்தியை கொழும்பில் வெளியிடுகின்றது. கடல்களில் பெரிய அளவிலான சரணாலயங்களை உருவாக்க வழிவகுக்கும் உலகளாவிய பெருங்கடல் ஒப்பந்தத்திற்கு பிராந்தியத்தின் அரசியல் தலைவர்கள் ஆதரவாக செயலாற்றியமையை வரவேற்கும் விதமாக கொழும்பின் முக்கிய, உயரமான ஹோட்டல் ஒன்றில் “தெற்காசியா: பெருங்கடல் ஒப்பந்தத்தின் முன்னணி!” என்று எழுதப்பட்ட ஓர் பெரிய பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
2024 செப்டம்பர் இல் ஐ. நா. பொதுச் சபையில் பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் இப் புதிய ஒப்பந்தத்தை அங்கீகரித்தன நாட்டின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் உயிரியல் பன்முகத்தன்மை ஒப்பந்தம் (BBNJ) என முன்னர் அழைக்கப்பட்டது நேபாளம் ஒரு வருடம் முன்பு கையெழுத்திட்டதுடன், இந்தியாவும் அதன் கையொப்பத்தை உறுதிப்படுத்தியது. இச் சங்கிலியை நிறைவு செய்யும் வகையில் கடந்த டிசம்பரில் இலங்கை டீடீதுே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, ஒப்புதல் அளிக்க உறுதியளித்தது “இவ்வாறு செயற்படுவதன் மூலம் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள நாடுகள் ஆழ் கடல்களில் கடலின் உயிரியல்
பன்முகத்தன்மையினை பாதுகாப்பதிலும், காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதிலுமான துணிச்சலான, தொலைநோக்குச் சிந்தனை கொண்ட அமைப்பை வெளிப்படுத்துகின்றன. இவ் அர்ப்பணிப்பு தற்போது வாழ்க்கை நடாத்தும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல், இதன் பிறகு உருவாகும் தலைமுறைகளுக்கு ஆரோக்கியமான, நிலையான எதிர்காலத்தையும் உறுதி செய்கிறது.” என கிரீன்பீஸ் தெற்காசியாவின் பிரச்சாரகர் திருமதி. அனீடா பெரேரா கூறினார். பூமியின் மேற்பரப்பில் 71% கடலினால் சூழப்பட்டுள்ளதுடன், அவை இவ்வுலகின் உயிரியல் பன்முகத்தன்மையின் பெரும்பாலான பகுதிக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதுடன், இவ்வுலகின் மிகப்பெரிய கார்பன் உள்வாங்கியாகவும் செயற்படுகிறது. இதுவரை காலமும் மனிதர்களினால் வெளியேற்றப்பட்ட பச்சை வீட்டு வாயு வெளியேற்றங்களில் 90% க்கும் அதிகமான வெப்பத்தை கடல்கள் உறிஞ்சியுள்ளன. இருப்பினும், அளவுக்கதிகமாக மீன்பிடித்தல், சுரங்க அகழ்வு, மாசுபடுத்தல், அமிலமயமாக்கல் மற்றும் நீர் வெப்பமடைதல் ஆகிய பல்வேறுபட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக மேலும் பவளப்பாறைகள் வெளுப்படைதல், கடல் உயிரினங்களின் பரவலில் மாற்றங்கள், கடல் பனி கரைதல், கடல் நீர் மட்ட உயர்வு மற்றும் தீவிரமான வானிலை மாற்றங்கள் ஆகிய நிகழ்வுகளுக்கு வழிவகுக்கின்றது. இவற்றின் விளைவாக, மனித நடவடிக்கைகளின் காரணமாக வழமையை விட அதிகமாக வெளியிடப்படும் கார்பனீரொட்சைட்டு உறிஞ்சும் ஆற்றல் குறைவடைகின்றது. இதன் காரணமாக தீவிர காலநிலை மாற்றத்தின் மூலமான தாக்கங்கள் அதிகரிக்கின்றன இதற்கு மாற்றமாக, உலகளாவிய பெருங்கடல் ஒப்பந்தமானது முக்கிய கடல் சுற்றுச்சூழல்களில் பெரிய பாதுகாக்கப்பட்ட பகுதிகளை பிரகடனப்படுத்துவதை எளிதாக்கி, 2030 ஆம் ஆண்டளவில் ஆழ் கடல்களில் 30% பகுதியை பாதுகாக்க வழிவகுக்கின்றது.
“பெருங்கடல்கள் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உணவு இறையாண்மைக்கு இன்றியமையாத ஒரு விடயம் என்பதுடன், தெற்காசியாவிலும், பிற இடங்களிலும் வழமையாக இப்பொழுது இடம்பெறும் திடீர் காலநிலை மாற்றம் மற்றும் தீவிர வானிலை நெருக்கடியை தணிப்பதற்கும் இது முக்கியமாக செயற்படுகின்றது: சூறாவளிகள், வெப்ப அலைகள், வறட்சி, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகிய இயற்கை பேரழிவுகளை குறிப்பிடலாம். படிம எரிபொருள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தவும், காலநிலைக்கான எமது சிறந்த நண்பனான பெருங்கடலை பாதுகாக்கவும் இதுவே சிறந்த நேரம்.” என கிரீன்பீஸ் தெற்காசியாவின் துணை திட்ட இயக்குநர் திரு. அவினாஸ் சன்சல் கூறினார்.
“இலங்கையின் சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில், அண்மையில் நமது அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளுக்குமான எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், குறுகிய கால எல்லையினுள் பயனுள்ளவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக ஜூன் 2025 இல் நடைபெறவுள்ள ஐ. நா. பெருங்கடல் மாநாட்டிற்கு உலகளாவிய பெருங்கடல் ஒப்பந்தத்தின் முழுமையான அங்கீகரிப்பை சரியான நேரத்தில் உறுதி செய்யுமாறு வலியுறுத்துகின்றது.” என அனீடா பெரேரா குறிப்பிட்டார்.