உலகின் சிறந்த பணியிடங்களில் முதலிடத்தில்DHL Express

Share with your friend

தொடர்ந்தும் ஐந்தாவது வருடத்தில் உலகின் சிறந்த பணியிடங்களின் பட்டியலில் முதல் 3 இடத்தில் ஒன்றாகவும், ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பிராந்தியங்களில் முதலிடத்தையும் பிடித்துள்ளது

DHL Express நிறுவனம் ஐந்தாவது வருடமாகவும் உலகின் சிறந்த பணியிடங்களில் ஒன்றாகப் பெயரிடப்பட்டிருப்பதுடன், உலகளாவிய தரப்படுத்தலில் மதிப்புக்குரிய 1வது இடத்தைப் பெற்றுக்கொண்டது. அத்துடன், ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களில் இந்நிறுவனம் முதலாவது இடத்தைப் பெற்றுக் கொண்டிருப்பதுடன், ஐரோப்பாவில் தொடர்ச்சியாக நான்காவது வருடமாகவும், ஆசியாவில் தொடர்ச்சியாக எட்டாவது வருடமாகவும், இலத்தீன் அமெரிக்காவில் தொடர்ந்து ஏழாவது வருடமாகவும் தனது தலைமைத்துவத்தை நிலைநிறுத்தியுள்ளது. Fortune சஞ்சிகையுடன் இணைந்து Great Place to Work™ மேற்கொண்ட பட்டியல்படுத்தலிலேயே இந்த அங்கீகாரம் கிடைத்தது.

இந்த வெற்றி தொடர்பில் அறிக்கையின் ஊடாக கருத்து வெளியிட்டுள்ள DHL Express இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜோன் பியர்சன் “உலகின் சிறந்த பணியிடங்கள் பட்டியலில் முதலாவது இடத்தைப் பிடித்துக்கொண்ட நிறுவனமான அங்கீகரிக்கப்பட்டிருப்பதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகின்றோம். மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் நாம் கொண்டிருக்கும் உறுதிப்பாடு மற்றும் 220 இற்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள 120,00 உலகளாவிய பணியாளர் குழுவின் மத்தியில் துடிப்பான அனைவரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர் என்ற கலாசாரத்தை வளர்ப்பதிலும் நாம் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை இந்த அங்கீகாரம் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. நாம் அறிமுகப்படுத்திய சான்றளிக்கப்பட்ட சர்வதேச நிபுணத்துவத் திட்டம் இந்த வெற்றிக்கு முக்கிய பங்குகாற்றியது. எமது பணியாளர்களின் அர்ப்பணிப்புக்கு மதிப்பளிப்பதன் ஊடாக DHL Express நிறுவனத்தின் விதிவிலக்கான சேவையை உறுதிசெய்ய முடியும். உலகளாவிய ரீதியில் உள்ள எமது அணியினர் பணியாற்றுவதற்குச் சிறந்த பணியிடச் சூழலை மேலும் மேம்படுத்துவதில் நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்துகின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உடமைகள் மற்றும் நோக்கம் பற்றிய கலாசாரம்

வலுவான சமூக உணர்வு மற்றும் பகிரப்பட்ட நோக்கம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதே DHL Express இல் நிறுவனத்தின் அடிப்படைக் கலாசாரமாகும். நிறுவனத்தின் வெற்றிக்கு பணியாளர்களே பிரதான காரணம் என்பதுடன், அவர்களின் இந்தப் பங்களிப்பு பல்வேறு வழிகளில் கொண்டாடப்படுகின்றது. வேகம், ஆர்வம், செய்யமுடியும் என்ற மனப்பான்மை மற்றும் சரியானதை சரியான நேரத்தில் மேற்கொள்ளல் போன்ற DHL Express இன் பிரதான மதிப்புக்களை உருவகப்படுத்தும் பணியாளர்கள் பாராட்டல் வாரம் மற்றும் வருடந்தின் சிறந்த பணியாளர் போன்ற திட்டங்களின் மூலம் கௌரவிக்கப்படுகின்றனர்.

சாதாரணமாகத் தொழில் என்பதற்கு அப்பால் DHL நிறுவனத்தின் பணியாற்றுவது என்பது மக்களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்தல் மற்றும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது என்ற சிறப்பான நோக்கத்திற்குப் பங்களிப்பதாக அர்த்தப்படும். DHL Got Heart, Global Volunteering Day, GoHelp, GoTeach மற்றும் GoTrade போன்ற கூட்டுப் பொறுப்புத் திட்டங்களில் பங்குபற்றுவதன் ஊடாக தாம் பணியாற்றும் சமூகங்களில் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், இது உலகை சிறந்த இடமாக மாற்றுவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கின்றது.

மக்களுக்கான அர்ப்பணிப்பே முதன்மை

மக்களுக்காக நிறுவனத்தின் தற்போதைய அர்ப்பணிப்புப் பற்றிக் குறிப்பிட்ட DHL Express நிறுவனத்தின் மனித வளங்களுக்கான நிறைவேற்றுப் பிரதித் தலைவர் ஃபாட்ஸ்லூன் ஸபான்டி “நாம் செய்யும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எமது பணியாளர்களே ஆதாரம். ஒவ்வொரு நபரும் மதிக்கப்படுவதையும், அவர்கள் புரிந்துகொள்ளப்படுகின்றார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கும் நாம் கடுமையாகப் பணியாற்றுகின்றோம். ஆதரவான மற்றும் ஊக்கப்படுத்தும் பணிச் சூழலை உருவாக்கி, ஒவ்வொரு நபரும் வளர்ச்சியடைவதற்கு நாம் ஆதரவாக இருக்கின்றோம் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றோம். அவர்களின் தனித்துவமான கண்ணோட்டங்கள் மற்றும் பங்களிப்புக்கள் எமது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதுடன், தொழில்துறையில் நாம் நிலைத்திருப்பதற்கும் பெரும் உதவியாக இருக்கின்றன” எனக் குறிப்பிட்டார்.

DHL Express ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் திமித்திரி பெரேரா கருத்து வெளியிடுகையில், “ஐந்தாவது தடவையாகவும் உலகில் சிறந்த பணியிடங்களில் முதல் மூன்று இடங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டதன் ஊடாக, ‘மக்களே முதன்மை’ என்ற நிறுவனத்தின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம் என்பது பறைசாற்றப்படுகின்றது. தமது மதிப்பு உணரப்படுகின்றது, தாம் ஊக்குவிக்கப்படுகின்றோம் மற்றும் வலுவூட்டப்படுகின்றோம் என பணியாளர்கள் சிந்திப்பதற்கான பணிச் சூழலை ஏற்படுத்துவதில் நாம் கவனம் செலுத்துகின்றோம். எங்களின் வெற்றிக்கும், நாம் பணியாற்றும் சமூகங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும், இலங்கையை ஏனைய உலக நாடுகளுடன் இணைப்பதற்கும்  DHL இன் முக்கிய மதிப்புகளை வெளிக்காட்டும் அர்ப்பணிப்புடன் கூடிய குழுவே காரணம் என்பது எமது அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்” என்றார்.

உலகளாவிய ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்தல்

“உலகளாவிய தொழில் வழங்குனர் என்ற ரீதியில் எமது மக்களுக்கும் எமது கிரகத்திற்குமான பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது” என Great Place to Work™ இன் பிரதம நிறைவேற்று அதிகாரி  மைக்கல்.சி புஷ் தெரிவித்தார். “குறிப்பிடத்தக்க இந்த நிறுவனங்கள் சிறந்த செயற்பாட்டை வெளிப்படுத்தியிருப்பது மாத்திரமன்றி தாம் சார்ந்த சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளன. ஏதாவது நோக்கத்துடன் பணியாற்றும்போது அந்தப் பணியில் புதுமை, விரிவான செயற்பாடு என்பன காணப்படுவதுடன், நம் அனைவருக்கும் சிறந்த உலகத்தைக் கட்டியெழுப்ப இது உதவியாக இருக்கும்” என அவர் குறிப்பிட்டார்.

உலகின் சிறந்த பணியிடங்கள் பட்டியலில் DHL Express நிறுவனம் உயர்ந்த இடத்தில் பட்டியலிடப்பட்டிருப்பதுடன், 2020ஆம் ஆண்டு முதல் உலகளாவிய ரீதியில் முதல் மூன்று நிறுவங்களில் தெரிவாகியுள்ளது. தனது மக்கள், அதன் மதிப்பு மற்றும் நோக்கம் மீது நிறுவனம் கொண்டிருக்கும் அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு என்பன உலகத்தில் சிறந்த பணியிடம் என்பதில் அதன் சிறந்த நிலையை உறுதிப்படுத்தி வருகின்றன. சிறிய அளவிலான நிறுவனங்கள் மற்றும் சிறந்த பல்தேசிய நிறுவனம் ஆகியவற்றின் பிரிவுகளின் கீழ் இலங்கையில் முதலாவது சிறந்த பணியிடமாகவும், ஆசியாவில் சிறந்த பல்தேசியக் கம்பனிகளுக்கான சிறந்த பணியிடத்தில் முதலாவது இடத்தையும் தொடர்ச்சியாகப் பெற்றிருப்பதுடன், தொடர்ச்சியாக 10 வருடங்களாக இலங்கையில் சிறந்த பணியிடமாகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

*©2024 Fortune Media IP Limited. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. உரிமத்தின் கீழ் பயன்படுத்தப்படுகிறது. Fortune  மற்றும் Fortune Media IP Limited ஆகியவை DHL Express தயாரிப்புகள் அல்லது சேவைகளுடன் இணைக்கப்படவில்லை, மேலும் அவற்றை ஆதரிப்பதில்லை.


Share with your friend