உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

Share with your friend

ஜூன் 05 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு புதிய அர்த்தத்தைச் சேர்க்கும் வகையில், Coca-Cola Beverages Sri Lanka பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் மீள்சுழற்சி திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதன்படி, பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் அகற்றல் அலகுகளை நிறுவிய Coca-Cola, கழிவு நிர்வகிப்பு மூலம் சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான தனது அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளது.

தற்போதைய பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி துறை கண்காணிப்பு குழுவின் தலைவர் அஜித் மான்னப்பெரும ஆகியோரின் தலைமையில்  ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த செயற்திட்டம் பசுமையான எதிர்காலத்திற்கு ஒரு சிறந்த நடவடிக்கையாக அமையும் என்பதில் உறுதி.

நாடு முழுவதும் ஏற்கனவே 500க்கும் மேற்பட்ட PET பிளாஸ்டிக் சேகரிப்பு அலகுகளை நிறுவியுள்ள Coca-Cola Beverages, இலங்கை பாராளுமன்ற வளாகத்திலும் அத்தகைய அலகுகளை நிறுவுவதன் மூலம் PET பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சி உத்திகளை மேலும் மேம்படுத்தும். ஒரு சேகரிப்பு பிரிவில் 50 கிலோ PET பிளாஸ்டிக்கை சேகரிக்கும் திறன் காரணமாக, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் Coca-Cola Beverages ஆனது பிளாஸ்டிக் மீள்சுழற்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திரு. அஜித் மான்னப்பெரும, “பாராளுமன்ற வளாகத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் முழு நாட்டிற்கும் மிகவும் முக்கியமானது. சராசரியாக, ஆண்டுக்கு சுமார் 1,600 மெட்ரிக் தொன் PET பிளாஸ்டிக் சுற்றுச்சூழலில் கலக்கப்படுகிறது. ஆனால் மீள்சுழற்சிக்கு 400 மெட்ரிக் தொன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பொறுப்பற்ற முறையில் சுற்றுச்சூழலில் சேர்க்கப்படும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பது மீள்சுழற்சி செய்வதில் தனியார் துறை நிறுவனங்களின் தலையீடு மிகவும் பாராட்டத்தக்கது. அந்தத் தலையீட்டின் கீழ் பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் நிர்வகிப்பிற்கான திட்டத்தைத் தொடங்கியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்தார்.

Coca-Cola உடன் இணைந்து PET பிளாஸ்டிக்கை சேகரித்து மீள்சுழற்சி செய்வதற்கு Eco-Spindles பொறுப்பெடுத்துள்ளது. Eco-Spindles ஆனது ஹொரணையில் அமைந்துள்ள அதன் அதிநவீன வசதிகள் மூலம் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கை வினைத்திறனுடன் செயற்படுத்துகிறது என்பது மற்றுமொரு விசேட அம்சமாகும். நாட்டில் கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவதற்கான பங்களிப்பாகவும் இது அமைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கு உரையாற்றிய Coca-Cola Beverages Sri Lanka இன் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. பிரதீப் பாண்டே, “பிளாஸ்டிக் கழிவு நிர்வகிப்பு மற்றும் மீள்சுழற்சி ஆகியவற்றில் எங்களது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் மூலம் எங்கள் சமூகத்தில் ஒரு அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், இலங்கை பாராளுமன்றத்துடனான இந்த ஒத்துழைப்பின் மூலம், சுற்றாடல் நிலைத்தன்மைக்கான எங்களின் அர்ப்பணிப்பு நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான ஒத்துழைப்புகளின் ஊடாக, இலங்கையர்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான எமது இலக்குகளை மேலும் அடைய நாங்கள் உழைத்து வருகிறோம்.” என தெரிவித்தார்.

இந்த மூலோபாய ஒத்துழைப்பு மூலம், Coca-Cola சுமார் 125 தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ஆதரவுடன் சமூகங்களில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குகிறது. “வாழ்க்கையை மீண்டும் தாருங்கள்” திட்டம் மேலும் தொடர்கிறது. அந்த திட்டத்தின் கீழ் 36 மில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் PET போத்தல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்பது சிறப்பம்சமாகும். அதற்காக இலங்கை முழுவதும் 540 சேகரிப்பு கொள்கலன்கள், 9 மீட்பு வசதிகள் மற்றும் 27 சேகரிப்பு மையங்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளனர். சுமார் 120 பொறுப்புள்ள நிறுவனங்களின் ஆலோசனையின் கீழ், அவர்கள் சுமார் 2500 இளைஞர்களை பிளாஸ்டிக் சேகரிக்கவும், மீள்சுழற்சி செய்யவும், அறிவை மேம்படுத்தவும் மற்றும் ஊக்குவிக்கவும் ஈடுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply