உள்நாட்டில் மதிப்பு சேர்க்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், மொபெட்களை உற்பத்தி செய்யும் TVS Lanka

Share with your friend

உள்நாட்டில் மதிப்புச் சேர்க்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், மொபெட்களை உற்பத்தி செய்வதன் மூலம் இலங்கையின் இரு சக்கர வாகனத் துறையை TVS Lanka நிறுவனம் மீள்வரையறை செய்து வருகிறது. ஒரு முக்கியமான பொருளாதார கட்டத்தில் இலங்கை பயணித்து வரும் நிலையில், உள்நாட்டில் மதிப்பு சேர்த்தல் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான TVS Lanka நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பானது, நாட்டின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பதோடு, இலங்கை நுகர்வோருக்கு நிலைபேறான மற்றும் செலவு குறைந்த போக்குவரத்து தீர்வுகளை வழங்குகிறது.

TVS Lanka Local Value Addition PR Pics

2021 ஆம் ஆண்டில் தமது அதிநவீன வாகன ஒன்றிணைத்தல் தொழிற்சாலையை இயக்கியதிலிருந்து, உள்நாட்டு உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதில் TVS Lanka கவனம் செலுத்தி வருகின்றது. இந்த தொழிற்சாலையானது அரை பில்லியனுக்கும் அதிகமான முதலீட்டில் நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவில் பயிற்சி பெற்ற முகாமையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் கீழ் இயங்கி வரும் இத்தொழிற்சாலை, உள்நாட்டு உற்பத்தியில் உலகளாவிய நிபுணத்துவத்தை உறுதி செய்கிறது. இந்த முயற்சியானது, கைத்தொழில் அமைச்சின் உள்நாட்டில் மதிப்புச் சேர்த்தல் திட்டத்துடன் இணைந்து செல்வதன் மூலம், தரம் மற்றும் புத்தாக்கத்திற்கான புதிய அளவுகோல்களை அமைக்கிறது.

TVS Lanka Local Value Addition PR Pics

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த TVS Lanka பிரதம நிறைவேற்று அதிகாரி கீத்தல் அந்தோனி, “ரூபாவின் மதிப்பிழப்பை முகாமைத்துவம் செய்ய இந்த முயற்சி மிகவும் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதென நாம் கருதுகிறோம். இலங்கையில் உற்பத்தித் துறையை மேம்படுத்துவதில் நாம் உறுதியாக உள்ளோம். அத்துடன், TVS மேற்கொண்ட முதலீடுகளுக்கு அமைய, வெளிநாட்டில் பயிற்சிகளைப் பெற்ற பொருட்களின் பகுதிகளின் உற்பத்தியாளர்களைக் கொண்ட கட்டமைப்பொன்றை நாம் உருவாக்கியுள்ளோம். அவர்கள் தற்போது OE அந்தஸ்து அங்கீகாரம் பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

TVS Lanka நிறுவனத்தின் செயற்பாடுகள் இலங்கை இளைஞர்கள் மற்றும் திறமையான நிபுணர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. உள்ளூர் வணிகங்கள் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஈடுபட்டுள்ள சிறிய நடுத்தர தொழில்முயற்சியாளர்களை  (SME) அவை ஆதரிக்கின்றன. அதன் பங்களிப்புகள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதோடு, TVS India நிறுவனத்துடன் இணைந்து இலங்கையின் அதிகரித்து வரும் போக்குவரத்துத் தேவைகளுக்கு புத்தாக்கமான மற்றும் நிலைபேறான தீர்வுகளை வழங்குவதில் நிறுவனம் உறுதியாக உள்ளது.

30 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் ஒரு முக்கிய பங்களிப்பாளராக TVS Lanka நிறுவனம் இருந்து வருவதோடு, போக்குவரத்து தீர்வுகளில் சிறந்து விளங்குகின்றமைக்காக பல்வேறு பாராட்டுகளையும் அது பெற்றுள்ளது. TVS மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், மொபெட், முச்சக்கர வண்டிகள் மற்றும் அதற்கான அசல் உதிரிப் பாகங்கள், TVS டயர்கள், டியூப்கள், Sonalika உழவு இயந்திரங்கள் மற்றும் அதன் அசல் உதிரிப் பாகங்கள், UCAP உதிரிப் பாகங்கள் மற்றும் துணைக்கருவிகளின் முழுமையாக உள்ளடக்கிய விரிவான தயாரிப்பு வகைகளை நிறுவனம் வழங்குகிறது. 2,000 இற்கும் மேற்பட்ட இடங்களில் விற்பனை புள்ளிகளின் விரிவான வலையமைப்புடன், நாடு முழுவதும் தமது உற்பத்திகளுக்கான அணுகலை பெறுவதன் மூலம், சேவைக்கான விசேடத்துவம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை TVS Lanka உறுதி செய்கிறது

பொருளாதார மீட்சியை நோக்கி இலங்கை நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், புத்தாக்கம் மற்றும் தொழில்துறை தலைமைத்துவத்தில் உறுதி பூண்டுள்ளதன் மூலம் ஒவ்வொரு இலங்கையரும் உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து தீர்வுகளை அணுகக்கூடியதாக TVS Lanka மாற்றுகிறது.

Picture Captions


Share with your friend