எதிர்காலத்தை வெளிப்படுத்துங்கள் – OPPO INNO DAY 2021 இனை டிசம்பர் 14-15 இல் முதன் முதலாக ஒன்லைனில் INNO WORLD

Share with your friend

OPPO அதன் வருடாந்த OPPO INNO DAY தினத்தை 2021 டிசம்பர் 14-15 இல் சீனாவின் ஷென்சென் நகரில் நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. OPPO வின் பிரத்தியேகமான வருடாந்த தொழில்நுட்ப நிகழ்வான OPPO INNO DAY 2021 ஆனது, மூலோபாய புதுப்பிப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், தொழில்நுட்ப சாதனைகளை வெளிப்படுத்துவதற்குமாக, ஷென்சென் நகரில் இடம்பெறும் இந்நிகழ்வின் ஒரு பகுதியான, அதன் ஒன்லைன் வழியிலான OPPO INNO WORLD மூலம் உலகளாவிய பங்கேற்பாளர்களை ஈர்க்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒன்லைன் வெளியீட்டு நிகழ்வானது, சமீபத்திய ஆண்டுகளில் இடம்பெற்ற மிகவும் சிறந்த கலந்துரையாடலைக் கொண்ட ஒன்லைன் வெளியீட்டு நிகழ்வுகளில் ஒன்றாக அமையவுள்ளது.

OPPO INNO DAY ஆனது 2019 இல் தொடங்கியதிலிருந்து, இந்நிகழ்வானது நிறுவனத்தின் வளர்ந்து வந்த பாதையின் வரைபடத்தில் முன்னோடியான நிகழ்வாகக் கருதப்படுகிறது. முதன் முதலாக இடம்பெற்ற OPPO INNO DAY 2019 விழாவில், AR Glasses, 5G CPE, smartwatch உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைந்த தொகுதிகளை OPPO விளக்கியிருந்தது. கடந்த ஆண்டு, OPPO மூன்று கருத்தியல் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியது, இதில் புரட்சிகர சுழலும்  கையடக்கத் தொலைபேசியும் (rollable phone) அடங்கும். 2021 ஆம் ஆண்டில், OPPO வெளியீட்டு நிகழ்வு மற்றும் கண்காட்சிகள் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது, வழக்கமான நிகழ்விற்கு மாற்றமான வகையில் ஒன்லைன் அனுபவத்தின் மூலமான பொழுதுபோக்கு மற்றும் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாறும் உலகளாவிய நிகழ்வாக மாறவுள்ளது.

OPPO INNO WORLD என்பது OPPO INNO DAY 2021 இன் ஒன்லைன் மேடையாகும். OPPO INNO WORLD இன் பார்வையாளர்கள் தங்கள் தனிப்பயனாக்கப்பட்ட ஒன்லைன் அவதாரகங்களுடன் (avatars) தொலைதூர இணைப்பின் மூலம் இதில் இணையலாம். மேலும், அனைத்து ஒன்லைன் கண்காட்சி அரங்கங்களையும் பார்வையிட அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. தனிப்பயனாக்கப்பட்ட அவதாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், பார்வையாளர்கள் ஒன்லைன் உலகில் மறைந்து காணப்படும் ஈஸ்டர் முட்டைகளை சேகரிக்கலாம் என்பதுடன், இதன் மூலம் ஒருவருக்கொருவர் பழகவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. OPPO INNO WORLD இனை டிசம்பர் 14 முதல் முழுமையாக அணுக முடியும்.

OPPO இன் சமீபத்திய தொழில்நுட்ப சாதனைகளைப் பற்றி மேலும் அறிய https://www.oppo.com/en/events/innoday2021/oppoinnoday_en/ ஐப் பார்வையிடவும். அத்துடன் டிசம்பர் 14-15 அன்று OPPO INNO WORLD இல் உங்கள் சொந்த அவதாரத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை அறியவும்.


Share with your friend