எதிர்கால பொறியியல் தலைவர்களை உருவாக்கும் ‘Project Summit’ தளத்தை ஆரம்பிக்கும் Sysco LABS

Share with your friend

நிறுவனங்களுக்கிடையில் தொடர்ச்சியான அகற்றல் வசதிகளை வழங்குதல் மற்றும் வருங்காலத்தில் தயாராகவிருக்கும் புதிய பொறியியல் சந்ததியினரை ஊக்குவித்தல் என்ற நோக்கில் எதிர்கால பொறியியல் தலைவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘Project Summit’ தளத்தை Sysco LABS Sri Lanka  நிறுவனம் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்தது.

பல்கலைக்கழகத்தில் இருந்து நேரடியாக வேலைக்கு உள்வாங்கப்படுபவர்கள் ‘4வது தொழிற்புரட்சி தொழில்நுட்பத்தின்’ (4IR) கீழ் வகைப்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பக் கருத்துக்களைச் செயல்படுத்த உதவுவதற்கு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் Sysco LABS இன் Project Summit அமையும். 

டிஜிட்டல் புரட்சியை எதிர்கொள்வதற்கான சரியான திறன்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் இத்திட்டத்தில் பங்கேற்பவர்கள் செயற்கை நுண்ணறிவு, இயந்திர ரீதியான கற்றல், அதிவேக தொழில்நுட்பம் மற்றும் இணைய உலகம் போன்ற 4IR எண்ணக்கருக்களின் வெளிப்பாடு மற்றும் வழிகாட்டுதலைப் பெறுவார்கள். எதிர்கால பணியாளர்களில் Sysco LABS நிறுனம் முதலீடு செய்துவருவதுடன், தமது திறன்களை வெளிக்கொணரவும், எதிர்காலத்துக்கான தீர்வுகளை உருவாக்கவும் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு 4IR உதவியாக இருப்பதையும் இது நோக்காகக் கொண்டுள்ளது.

Project Summit ஆனது 4 வருட கற்றல் காலத்தைக் கொண்டிருப்பதுடன், இதில் பங்கெடுப்பவர்கள் ஆறு மாதங்களில் திட்டத்தை முடிக்க முடியும். இது அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை விரைவாக்குவதற்கு இயலுமானதாக்க உதவும். “தொடக்க நிலையைக் கற்றுக்கொள்ளுங்கள்” என்ற அடிப்படையில் 4IR செயல்படுத்தப்பட்ட தீர்வுகளை அடையாளம் கண்டு உருவாக்கவும், உற்பத்தித்திறன் அளவீடுகளை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும்.

நிறுவனம் முழுவதும் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான மனநிலையை மேலும் வளர்ப்பது மற்றும் கண்டுபிடிப்பின் அடிப்படையிலான பொறியியல் கலாச்சாரத்தை வெளிப்படுத்துவது என்பது இத்திட்டத்தின் இரண்டாம் நிலை நோக்கமாகும். அதே நேரத்தில் வணிகக் களம் மற்றும் கட்டடக்கலை, திட்ட முகாமைத்துவம் மற்றும் விநியோக செயல்முறை என்பவற்றிலும் திறன்களை மேம்படுத்துவதற்கு இது உதவியாக இருக்கும்.

இத்திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நிறுவனத்தின் நிறுவன கட்டுமானக் குழுமத்தின் பொறியியல் மற்றும் கட்டுமானப் பணிப்பாளர் நிஷாந்த ஹெட்டியாராச்சி குறிப்பிடுகையில், “எங்களின் தனித்துவமான பொறியியல் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சித் திட்டமான Project Summit ஆனது தொழில்நுட்பத்தால் இயங்கும் உலகின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக இருக்கும் புதிய தலைமுறை பொறியாளர்களை உருவாக்கிறது. பெஸ்போக் மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அமர்வுகளைப் பயன்படுத்தி, வேலையிடத்தில் சிறந்து விளங்குவதற்குத் தேவையான திறன்கள் மற்றும் அனுபவத்துடன் இளம் பொறியாளர்களை விரைவாகக் கண்காணிப்பதை இது நோக்காகக் கொண்டுள்ளது.  அதே நேரத்தில் எங்கள் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு நிலையான திறமைக் குழுவையும் உறுதி செய்கிறது” என்றார்.

Sysco LABS Project Summit மற்றும் நிறுவனத்தின் புத்தாக்க கலாசாரம் குறித்த மேலதிக தகவல்களை https://syscolabs.lk/life-at-syscolabs என்ற இணைப்பின் ஊடாக அறிந்துகொள்ளவும்.


Share with your friend