ஓய்வாகவும் உங்களை மீளமைத்துக் கொள்ளவும் Sprite உடன் வீட்டிலிருந்து Esports கண்டுகளியுங்கள்

Share with your friend

கொழும்பு: Coca-Colaவின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்பார்க்ளிங் குளிர்பானவகை வர்த்தக நாமமான Sprite, இலங்கையில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஈஸ்போர்ட்ஸ் சமூகத்தின் Esports Premier League (EPL) 2021 உடன்  புத்துணர்ச்சியூட்டிடும் பங்காளியாக உத்தியோகபூர்வமாக இணைகின்றது. 

இப்பெருந்தொற்று காலத்தில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வீட்டிலேயே தங்கி, பருகுதல் மற்றும் மீளமைத்துக் கொள்ளலில் (sip and reset) புத்துணர்ச்சியை தேடுவதால் திரை நேரத்தினை  புத்துணர்ச்சியூட்டுவதாகவும் சுவாரசியமானதாகவும் மாற்றியமைக்கும் Sprite இன் இலக்கிற்கு இணங்க இக்கூட்டிணைவு அமைந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய Esports லீக் என அழைக்கப்படும் இந்த EPL 2021  ஆனது இலங்கையில் முதன்மையான Esports நிறுவனமான Gamer.LK> இனால் ஒழுங்கு செய்யப்படுகிறது. மேலும் இது 2021 ஆகஸ்ட் முதல் ஒக்டோபர் வரை நடைபெறும். இது அனைத்து கேமர்களாலும் எதிர்ப்பார்க்கப்படும் மற்றும் மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தரக்கூடிய ஒர் நிகழ்வாக அமைகிறது. அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடு தழுவிய ரீதியான மிகச்சிறந்த 60 விளையாட்டு வீரர்களை(கேமர்களை) தெரிவு செய்வதற்கான பதிவுகளை மேற்கொள்ள epl.lk தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.  

அனைத்து விளையாட்டு வீரர்களதும் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு அதிகாரிகளால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்களுக்கமைய, EPL 2021  தொலைதூரத்தில் நடைபெறும். வீரர்கள் தங்கள் வீட்டிலிருந்த வண்ணம் பாதுகாப்பாக இப்போட்டியில் கலந்துகொள்வர். வீட்டிலிருந்தே கலந்து கொள்வதால் நீங்கள் விரும்பிய எத்தருணத்திலும் Sprite இன் குளிர்ச்சியான, புத்துணர்ச்சியூட்டிடும் எலுமிச்சை சுவையை அனுபவிக்க வாய்ப்பு கிடைத்திடும்.  அனல் பறக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் பரபரப்புமிக்க கேமிங் இன் இடைவேளையின் போது நிதானமடைய தங்கள் Sprite இன் குளிர்ச்சியை அனுபவிப்பதன் மூலம் புத்துணர்ச்சி பெறலாம். அப்புத்துணர்ச்சியின் உதவியுடன் தங்களது அடுத்த நகர்வினைப் பற்றி தெளிவாகவும் நிதானமாகவும் சிந்தித்து விளையாடி, போட்டியை முறியடித்து முதலிடத்திற்கு வர முயற்சிக்கலாம். Sprite இனை Sip செய்து பருகுவதானது சவால்களை புத்துணர்ச்சியூட்டிடும் கண்ணோட்டத்தில் பார்க்க உதவுகிறது. மேலும் கேமிங் நடவடிக்கைகளின் கடினமானதோர் நாளின் பின்னர், அதிலிருந்து விடுபடவும், ஓய்வெடுக்கவும் உதவுகிறது. 

உரிமையை அடிப்படையாகக் கொண்ட PUBG மொபைல் லீக் இலங்கையின் ஒன்பது மாகாணங்கள் மற்றும் 3 அணிகள் உள்ளடங்கலாக மொத்தம் 12 அணிகளைக் கொண்டுள்ளது. EPL 2021 பரவலாகப் பார்க்கப்பட்ட இலங்கையின்  Esports ஆக கருதப்படுகிறது. 1500க்கும் மேற்பட்ட Esports விளையாட்டு வீரர்கள் தலா 5 வீரர்கள் கொண்ட 12 அணிகளில் ஒரு இடத்தினை அடைய போட்டியிடுகின்றனர்.  இந்த Esports விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயற்படவும் ஊக்குவிக்கவும் புத்துணர்ச்சியூட்டிடும் வகையில், ஒவ்வொரு அணிக்கும் புகழ்பெற்ற விளையாட்டு நட்சத்திரங்களான சனத் ஜயசூரிய, லசித் மாலிங்க, சமிந்த வாஸ், ரசல் ஆர்னல்ட், டி. எம். தில்ஷான், அஞ்சலோ மெத்திவ்ஸ் ஆகியோர் அணியின் வழிகாட்டிகளாக விளங்குகின்றனர். 

EPL 2021  ஆனது நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முறையே அணிகள் திறந்த தகுதி (Open Qualifiers) மூலம் சென்று, அணியின் ஏலம் மற்றும் Play-Offs மூலம் Super Weekend இல் தங்கள் இடத்தைப் பெற்று, சிறந்த 9 அணிகள் போட்டியிடும் இறுதிப் போட்டியின் மூலம் (Grand Finals) சம்பியன் முடிசூடுவர். இறுதிப் போட்டிகளை அடையும் அணிகள் spirit இன் புத்துணர்ச்சியைப் பெற்று தங்களை புதுப்பித்துக் கொண்டு நாட்டில் சிறந்தவர்களாக விளங்கிட வேண்டும் என்ற தங்களது உணர்வினை மீளமைத்துக் கொள்ள முடியும்.  

Esports, ஒரு உலகளாவிய நிகழ்வாக மாறியுள்ளதுடன் கடந்த பத்தாண்டு காலத்தினுள் இலங்கையில் மிகவேகமாக வளர்ந்தும் வருகிறது. Esports, 2019ஆம் ஆண்டு இலங்கை விளையாட்டு அமைச்சினால் தேசிய விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டதுடன், இன்று நாட்டில் சுமார் 4 மில்லியன் கேமர்கள் இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. குளிர்ச்சிமிகு Sprite இனை பருகிடும் வண்ணம் Esports இல் பங்குபற்றும்  போது சக விளையாட்டாளர்களுக்கு சவால் விடுத்து, வெற்றிபெற புத்துணர்ச்சியூட்டும் நகர்வுகளைத் தேடுவதால் அவர்களது அன்றைய நாளினை புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் வைத்திருக்க உதவுகிறது. 


Share with your friend