கால் நூற்றாண்டு கால முன்னேற்றம்: Raffles இன் மீழ்ச்சி மற்றும் புத்தாக்கம் பற்றிய கதை

Share with your friend

இலங்கையின் விருந்தோம்பல் துறையில் முன்னணிப் பெயரான Raffles Consolidated (Pvt) Ltd, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் திகதி தனது 25 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இந்த முக்கியமான நிகழ்வைக் குறிக்கும் வகையில், நிறுவனம் எதிர்வரும் ஆண்டுகளில் வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை உருவாக்கும் வகையில் பல குறிப்பிடத்தக்கத் திட்டங்களை வெளிப்படுத்தியிருக்கின்றது.

புத்தாண்டின் உதயத்தோடு பல புதிய செயற்பாடுகளை முன்னெடுக்க Raffles திட்டமிட்டிருக்கின்றது.சவால்கள்  மிக்க பல ஆண்டுகளின் பின்னர், இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டு வலுவாக மீண்டு வருவதால், 2025 ஆம் ஆண்டில் அதன் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதன் மூலமும், சிறிய அளவிலான உல்லாச விடுதிகளை நிர்வகிப்பதன் மூலமும் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் அதிகரிப்பைப் பயன்படுத்திக் கொள்ள Raffles தயாராகின்றது. இலங்கையை சுற்றியுள்ள பல முக்கிய சுற்றுலா தளங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த உல்லாச விடுதிகள் அவை அமைந்திருக்கும் பிரதேசத்தின் தனித்துவமான கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் ஆடம்பரமான, தனித்துவமான அனுபவங்களைப் பெற்றுக் கொடுக்கும்.  

ஒரு காலத்தில் Raffles அமைப்பின் முதலிடத்தை வகித்து வந்த, அனைவராலும் விரும்பப்பட்ட,  தனித்துவம் மிக்க உணவகத்தை மீண்டும் 2025 ஆம் ஆண்டில், ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. இலக்கம் 35 பகதலே வீதி, கொழும்பு 3 இல்  அமைந்திருந்த,பிரபுக்கள் அடிக்கடி வந்து செல்லும் புகழ்பெற்ற இடமாக இருந்த இந்த உணவகம் மூலம்  நேர்த்தியான விருந்தோம்பல் அனுபவத்தை வழங்குவதன் மூலம் நகரத்தில் ஒரு தலைசிறந்த உணவக அடையாளமாக அதன் நிலையை மீண்டும் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

கூட்டக நிறுவன  மற்றும் உயர்தர வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் வெளிப்புற  கேட்டரிங் நிறுவனமாக 1999 டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, Raffles  பல பிரிவு கேட்டரிங் முன்னோடியாகப் பரிணமித்திருக்கின்றது, தற்போது இத்துறையின் மூன்று வகையான சேவைகளை வழங்கி வருகின்றது: கஃபேக்கள், தொழில்துறை கேட்டரிங், உயர்ந்தரக விருந்துகள் மற்றும் நிகழ்வு கேட்டரிங். 2001 ஆம் ஆண்டில், இலங்கையின் பல முன்னணி நிறுவனங்களுக்கான சிற்றுண்டிச்சாலைகளை நடத்துவதற்கான ஒப்பந்தங்களை வென்றதன் மூலம் Raffles தொழில்துறை கேட்டரிங் பிரிவிலும் இணைந்து கொண்டது,  

ஒரு வாடிக்கையாளருடன் ஆரம்பித்த Raffles நிறுவனம் இன்று 350 வாடிக்கையாளர்களுக்கு தமது சேவையை வழங்கி வருகின்றது. அந்த வகையில்  Raffles நிறுவனம் தற்போது நமது தொழிற்சாலைகள் மூலம் தினமும் சுமார் 70,000 அதிகமான  காலை, மதிய, மற்றும் இரவு என பிரதான உணவுகளை வழங்கிவருவடுதொ,  தொழில்துறைசார் உணவுகளைப் பெற்றுக் கொடுப்பதிலேயே அதன் வணிக மாதிரியின் முதன்மை கவனத்தைச் செலுத்தி வருகின்றது.

2016 ஆம் ஆண்டில், வாழ்க்கையின் மறக்கமுடியாத தருணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட தவணை நிகழ்வு கூடமாக Raffles Residence அறிமுகப்படுத்தியதன் மூலம் Raffles தனது செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தியது. மிரிஹான, நுகேகொடயில் அமைந்துள்ள Raffles Residence அதி சொகுசு தன்மையை வெளிப்படுத்துகிறது, இதில் 100 மற்றும் 300 விருந்தினர்கள் கலந்து கொள்ளக்கூடிய வசதிகளைக் கொண்ட இரண்டு அரங்குகளுடன்  சகல விருந்துபசார தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடியதாக அமைந்திருக்கின்றது.

வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தொகைக்கு ஏற்ப அதன் கவர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தற்போது Raffles Residence  அதன் உட்புற மறுசீரமைப்பை மேற்கொண்டு வருகிறது. புதுப்பிக்கப்பட்ட இந்த அரங்குகள், 25வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு,2024 டிசம்பர் 1 ஆம் திகதி  விருந்தினர்களுக்காகத் திறந்து வைக்கப்பட இருக்கின்றது

25 ஆண்டுகால பயணத்தைத் திரும்பிப் பார்க்கும் வகையில் ​​Raffles ஸ்தாபக தலைவர், டோனி போஹோரான் கூறுகையில், “ஆரம்பத்திலிருந்து  கடந்த 25 ஆண்டுகளில், நாம் எதிர்கொண்ட பல தடைகளைத் தாண்டி, Raffles  விரைவான வளர்ச்சியையும் குறிப்பிடத்தக்க அளவிலான தாக்குப்பிடிக்கும் தன்மையினையும் வெளிப்படுத்தி இருப்பதாகத் தெரிவித்தார். தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது விரைவான மாற்றங்களை ஏற்படுத்தி, புத்தாக்கமாகச் சிந்தித்து, அச் சவால்களில் இருந்து நாங்கள் வெற்றிகரமாக மீன்றெழுந்தோம் என கூறுவதில் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்” எனக் கூறினார்.

Raffles பிரதம நிறைவேற்று அதிகாரி உபுல் கமகே கருத்துத் தெரிவிக்கையில், “எமது 25 வருடச் செயற்பாடுகள் முழுவதிலும் Raffles  இன் அணுகுமுறையில் தாக்குப்பிடிக்கும் தன்மை என்பது ஒரு பொதுவான கருப்பொருளாக இருந்து வந்திருக்கின்றது. சவால்களைச் சமாளிக்கும் நமது திறன், நமது பயணத்தின் அடுத்த அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கும்போது, ​​புதிய வணிகப் பகுதிகளுக்குள் நுழைவதற்கான நம்பிக்கையை அளித்துள்ளது. எமது அற்புதமான குழுவின் ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் ஊந்தப்பட்டு, எதிர்காலத்திற்கான எமது லட்சியத் திட்டங்களை வெற்றியடையும் என  நாம் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

Raffles இன் வெற்றிக்கான இரகசியங்களில் ஒன்று,சர்வதேச தரங்களைப் பூர்த்தி செய்வதற்கான அதன் அர்ப்பணிப்பிற்கான தொழில்துறை சான்றிதழ்களை பெற்றெடுத்தல் உயரிய சேவைத் தரத்தின் மீதான கவனம் செலுத்துதல் ஆகியனவாகும்.அனைத்து செயல்பாட்டுத் துறைகளும் தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட தர உத்தரவாதக் குழு 24 மணிநேரமும் கடமையில் ஈடுபட்டு உணவு பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை வழங்கி வருகின்றது  அத்தோடு நிறுவனம் ஒரு விரிவான விநியோகச் சங்கிலித்  தொடரைச் செயல்படுத்தி அதன் தொழில்துறை நடவடிக்கைகளுக்குத் தினசரி புதிய, உயர்தர உணவை வழங்கும்    செயல் திட்டத்தை   செயல்படுத்தி வருகின்றது.


Share with your friend