எலெக்ட்ரானிக் சாதனங்கள் முதல் மளிகைப் பொருட்கள் வரையான அன்றாட நுகர்வுப் பொருட்கள் வரை, HNB தனது கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு இந்த பண்டிகைக் காலத்தில் பல்வேறு வகையான உற்பத்திப் பொருட்களுக்கு 70% வரை கவர்ச்சிகரமான கழிவுச் சலுகைகளை வழங்குகிறது.
இந்த கழிவுச் சலுகைகள் குறிப்பிட்ட நாட்களில் அல்லது நவம்பர் மற்றும் டிசம்பர் 2021இல் குறிப்பிட்ட காலப்பகுதியில் பிரபல்யமான Brandகள், ஒன்லைன் மற்றும் ஃபேஷன் சில்லறை விற்பனை நிலையங்கள், உணவகங்கள், சூப்பர் மார்க்கெட், ஹோட்டல்கள் மற்றும் பலவற்றில் வாங்கும் போது பொருந்தும். இந்த கழிவுச் சலுகையைத் தவிர இதற்கும் பொருத்தமான தொனிப்பொருளான ‘A Season Wrapped In Happiness’ மேம்பாட்டு நடவடிககையானது, HNB கிரெடிட் கார்ட் உரிமையாளர்களுக்கு 48 மாதங்கள் வரையிலான வட்டியல்லா தவணைத் திட்டங்களையும் வழங்குகிறது.
எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்கள், பாகங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள், நகைகள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் ஆகியவற்றை வாங்கும் போது மேலதிக கையாளுதல் கட்டணங்கள் இல்லாமல் கவர்ச்சிகரமான கழிவுச் சலுகைகள் மற்றும் வசதியான தவணை திட்டங்களை வாடிக்கையாளர்கள் பெறலாம். பல்பொருள் அங்காடிகள், ஹோட்டல் தங்குமிடங்கள், உணவகங்கள், காகிதாதிகள் மற்றும் மருந்தகங்களிலிருந்து மருந்துப் பொருட்களை வாங்குதல் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க கழிவுகள் வழங்கப்படுகின்றன. மேலும், எரிபொருள் கொடுப்பனவுகள் மற்றும் ரொக்க முற்பணங்கள் தவிர ஏனைய பரிவர்த்தனைகளான காப்புறுதி, கல்வி மற்றும் மருத்துவமனைக் கட்டணங்களுக்கு 24 மாதங்கள் வரையிலான வட்டியல்லாத் தவணைத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
“HNB இல் உள்ள அனைவருக்கும் கிறிஸ்மஸ் எப்போதுமே உற்சாகமான பருவமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் எங்கள் வர்த்தக பங்குதாரர்களின் விரிவான வலையமைப்பில் இருந்து பரந்த அளவிலான ஒப்பந்தங்களைச் செய்வதன் மூலம், எமது நம்பிக்கையான வாடிக்கையாளர்களுடன் இந்த பண்டிகைக்காலத்தை கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு தொற்றுநோயால் ஏற்பட்ட சவாலான பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, எங்கள் கார்ட் உரிமையாளர்கள் தங்களைத் தாங்களே ஈடுபடுத்திக் கொள்வதற்கான தேர்வுகளை மட்டுமல்லாமல், அன்றாட பரிவர்த்தனைகளில் அவர்களுக்கு உதவியளிப்பதை உறுதி செய்வதில் நாங்கள் முன்னுரிமைக் கொடுத்தோம்,” என HNBஇன் கார்ட் நடவடிக்கைகளுக்கான பிரதானி கௌதமி நிரஞ்சன் கூறினார்.
எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் சாதனங்கள், ஃபேஷன் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பொருட்களைப் பொறுத்தவரை, HNB பரந்த அளவிலான ஆன்லைன் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளுடன் இணைந்துள்ளது, இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் வசிப்பிடத்திலிருந்து வசதிக்கேற்ப பாதுகாப்பாக ஷாப்பிங் செய்ய முடியும்.
பல புகழ்பெற்ற ஆன்லைன் பங்குதாரர்களும் இந்த ஆண்டிற்கான பண்டிகைக்கால சலுகைகளின் ஒரு பகுதியாக உள்ளனர். Daraz.lk, Wasi.lk, Lovetubuy.lk, Takas.lk, PickMe Food & Market, UberEats மற்றும் Providore.com ஆகிய இணையத்தளங்களில் இருந்து வாங்கப்படும் எந்தவொரு பொருட்களுக்கும் இக்கொடுப்பனவு காலப்பகுதிக்குள் 20% வரை தள்ளுபடி சலுகைகள் செல்லுபடியாகும்.
அதேபோன்று, Singer.lk, Mysoftlogic.lk மற்றும் Buyabans.com ஆகிய இணையத்தளங்களில் இருந்து கொள்வனவு செய்யப்படும் தெரிவு செய்யப்பட்ட பொருட்களுக்கு முறையே 20% மற்றும் 10% வரை கழிவு வழங்கப்படும். Quantum.lk இலிருந்து வாங்கப்படும் உள்நாட்டு உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் துணைக்கருவிகளுக்கு 15% வரை கழிவு வழங்கப்படுகிறது. HNB கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் வட்டியல்லாத தவணை திட்டங்கள் மூலம் இந்த ஆன்லைன் வர்த்தக நிலையங்கள் பலவற்றிலிருந்து கொள்வனவு செய்வதற்கு பணம் செலுத்தலாம்.
ஏராளமான பிரபலமான சில்லறை மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருள் விற்பனை நிலையங்களும் விளம்பரத்தின் ஒரு பகுதியாகும். இவற்றில் Abans, Singer, Softlogic, Softlogic MAX and Furniture, CameraLK, Damro, iDealz Lanka, Quantum Fitness, Dinapala, Hunter & Company, Wickramarachchi Opticians, D.S. Jayasinghe Opticians (தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகள் மட்டும்) Seetha Holdings மற்றும் பல புகழ்பெற்ற பங்குதாரர்களும் அடங்குவர். வணிகரைப் பொறுத்து, இந்த விற்பனை நிலையங்கள் 48 மாதங்கள் வரை வட்டியல்லா தவணை திட்டங்களுடன் சேர்த்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 50% வரை கழிவை வழங்குகின்றன.
“எங்கள் வாடிக்கையாளர்களில் பலர் இந்த விடுமுறைக் காலத்தில் இயற்கைக்காட்சியை ரசிப்பதற்கு மாறுபட்ட இடங்களுக்குச் செல்ல மிகவும் ஆர்வமாக இருப்பார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இதற்காக நாங்கள் பலவிதமான கழிவுகள் மற்றும் சலுகைகளை வழங்கியிருந்தாலும், இந்தச் சலுகைகளைப் பயன்படுத்துபவர்கள் சுகாதார அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என கௌதமி நிரஞ்சன் கூறினார்.
கிறிஸ்மஸ் வரையிலான மேம்பாட்டுக் காலத்தில், HNB கிரெடிட் கார்ட் உரிமையாளர்கள் முன்னணி ஃபேஷன் சில்லறை விற்பனை நிலையங்களான House of Fashions, Odel, CIB, Kelly Felder, Cotton Collection, Crocodile, Beverly Street, Diliganz, Spring and Summer, Shirt works, DSI Premier and DSI, Hugo Boss, Under Armour, Dilly & Carlo, Cool Planet, Fashion Bug, Hameedia and Softlogic branded apparel such as Galleria, Odel.lk, Odel Sports, Levi’s, Luv SL, Nike, Adidas originals, Adidas performance, Skechers, Aldo, Tommy Hilfiger, Mango, Diesel, Guess, Tissot, Mothercare, The Toy Store, Armani Exchange, Fossil, International Watch Station, Sacoor bothers, Furla, Luxe Bags, Love Moschino, Vero Moda, Carpisa, Yamamay, Clarks, Jack & Jones, American Tourister, Hallmark, Longines, Charles & Keith, Calvin Klein and Crocs. ஆகியவற்றில் 25% வரை கழிவுகளைப் பெறமுடியும். HNB டெபிட் கார்ட் வைத்திருப்பவர்கள் அதே கடைகளில் வாங்கும் போது 15% வரை கழிவு வசதியைப் பெறலாம்.
இந்த பண்டிகைக்காலத்தில் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கவும் சிறப்பாக கொண்டாடவும் முடியும் என்பதை உறுதிசெய்து, HNB கிரெடிட் கார்ட் உரிமையாளர்களுக்காக ஒவ்வொரு திங்கட்கிழமையும் இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கு 25% தள்ளுபடியுடன் Cargills போன்ற முன்னணி பல்பொருள் அங்காடி சங்கிலிகளுடன் இணைந்து மேம்பாட்டு நடவடிக்கைகளை வங்கி வழங்கும். கார்ட் உரிமையாளர்களுக்கு, கீல்ஸ் சுப்பர் டிசம்பர் இறுதி வரை செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் புதிய காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு 20% கழிவை வழங்க உள்ளது. HNB கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் Beverages & Crimson பேக்கரி தயாரிப்புகளுக்கு லாஃப்ஸ் சூப்பர் அவுட்லெட்டுகளில் 20% தள்ளுபடியைப் பெறுவார்கள். Softlogic Glomark ஆனது HNB கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் உரிமையாளர்களுக்கான மொத்த பற்றுச்சீட்டில் முறையே 20% மற்றும் 10% கழிவை வழங்குகிறது, டிசம்பர் 31ஆம் திகதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் Arpico Supercentres மற்றும் தினசரி விற்பனை நிலையங்கள் ஒவ்வொரு வார இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் கடல் உணவுகளுக்கு 25% கழிவை இதே காலப்பகுதியில் வழங்கும்.
HNB கிரெடிட் கார்ட் உரிமையாளர்களுக்கான புகழ்பெற்ற நகைக் கடைகளில் வாங்கும் போது தள்ளுபடிகள் மற்றும் வட்டியல்லா தவணை திட்டங்களும் பொருந்தும். தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 70% வரை கழிவுகள் தள்ளுபடிகள் Zam Gems, Premadasa Jewellers, Raja Jewellers, Swarnamahal Jewellers, Vogue Jewellers and Colombo Jewellery Stores, Pure Gold by Tiesh, Fior Drissage Jewellers மற்றும் Mallika Hemachandra Jewellers மற்றும் பல நகை மாளிகைகள் ஆகியவற்றில் வாங்குவதற்கு 70% வரை கழிவு வழங்கப்படுகிறது. 24 மாதங்கள் வரை அனைத்து நகை வாங்குதல்களுக்கும் வட்டியில்லா தவணை திட்டங்கள் வழங்கப்படும்.