குழு அரட்டையில் Disappearing Messages அம்சத்தை அறிமுகப்படுத்தும் Viber

Share with your friend

Viber இன் இந்த அம்சமானது disappear ஆவதற்கான நேரத்தை 10 விநாடியிலிருந்து ஒரு நாள் வரையில் மாற்றுவதற்கு இடமளிப்பதுடன், குழு அரட்டையில் இந்த அம்சத்தை இலகுவாக செயற்படுத்த முடிவதுடன், இதன்மூலம் குறுஞ்செய்தியொன்று வேறு நபர்களுக்கு அனுப்புவது, பிரதி செய்வது அல்லது ஸ்கிரீன் ஷொட் எடுப்பதைத் தடுக்கும்.

உலகின் முன்னணியான தளங்களுக்கிடையிலான குறுஞ்செய்தி மற்றும் குரலை அடிப்படையாகக் கொண்ட தொடர்பாடல் செயலி Rakuten Viber,  உலகளாவிய ரீதியில் Google Play ஊடாக ஒரு பில்லியனுக்கும் அதிகமான தரவிறக்கங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன்,  இதுவரை  Viber செயலி ஊடாக ஒருவருக்கு ஒருவர் நேரடியான அரட்டையின் போது மாத்திரம் வழங்கப்பட்ட disappearing message அம்சத்தை குழு அரட்டையிலும் வழங்குவதாக அறிவித்துள்ளது. 

குழு அரட்டையில் குறித்த disappearing message அமைப்பைச் செயற்படுத்துவதற்கு பல்வேறு கட்டங்களுக்குச் செல்லாது, குழுவிலேயே அதன் status ஐ மாற்ற பயனர்களுக்கு இடமளிக்கிறது. Viber அம்சத்துடன், உறுப்பினர்கள் அரட்டைக்குள்ளேயே அதன் செயற்பாட்டை மாற்ற முடியும்.

விஸ்தரிக்கப்பட்ட இந்த வசதியின் ஊடாக குழு அரட்டையில் இணைந்துள்ள Viber பயனர்கள் தமது தனிப்பட்ட குறுஞ்செய்தி 10 விநாடியில், ஒரு நிமிடத்தில், ஒரு மணித்தியாலத்தில் அல்லது ஒரு நாளின் பின்னர் disappearஆக வேண்டுமா என்பதைத் தெரிவுசெய்ய முடியும். ஏனைய செயலிகளில் உள்ள disappearing message அம்சத்தைவிட அதிகமான தெரிவுகள் இதில் காணப்படுகின்றன.  Android 6 அல்லது அதற்குப் பிந்திய புதிய இயங்குதளத்தைக் கொண்டுள்ள கருவிகளில் disappearing அம்சம் செயற்படுத்தப்பட்டிருந்தால் குறுஞ்செய்தியொன்றை வேறு நபர்களுக்கு அனுப்புவது, பிரதி செய்வது அல்லது ஸ்கிரீன் ஷொட் எடுப்பதற்கு Viber முற்றாக இடளிக்காது. இதற்கு முன்னைய பதிப்புக்களைக் கொண்ட என்ரொய்ட் மற்றும் iOS கருவிகளில் குழு அரட்டைகளின் போது குறுஞ்செய்தியொன்று disappear ஆக்குவதாயின் ஸ்கிரீன்ஷொட் எடுத்து வைத்துக் கொள்வதற்காக உறுப்பினர்களுக்கு அது குறித்த தன்னிச்சையான அறிவிப்புச் செல்லும். புகைப்படங்கள், ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குறுஞ்செய்திகளுக்கும் இந்த அம்சம் ஏற்புடையதாகும்.

உதாரணமாக, வீட்டுப் பார்ட்டிக்கு குழுவொன்று அழைக்கப்பட்டால், பிரதான நுழைவாயிலுக்குள் நுழைவதற்கான குறியீட்டை குழு அரட்டையில் அனுப்பி, குறித்த பயனர் அதனைப் பார்த்தபின்னர் மறைந்துபோகச் செய்ய முடியும். 

Viber இல் தனிப்பட்ட மற்றும் குழு அரட்டைகள்  யாவும் மறைக்குறியாக்கப்பட்டிருப்பதால் இதன் ஊடான தொடர்பாடல்கள் எப்பொழுதும் தனிப்பட்டதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்பதில் பயனர்கள் உறுதியாக இருக்க முடியும். அம்சத்தின் ஊடாக தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு இடையிலான உரையாடல்களின் தனித்துவத்தை பேணக்கூடிய பாதுகாப்பான குறுஞ்செய்தி செயலியாக இருப்பதற்கு Viber அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதற்கு சிறந்த உதாரணமாகும். 

“தனிநபர்களுக்கு அல்லது குழுவுக்கு தனிப்பட்ட குறுஞ்செய்திகளை அனுப்பும்போது அவற்றுக்கான முழுமையான கட்டுப்பாட்டையும் Viber பயன்படுத்துனர்களுக்கு வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்” என Rakuten Viber இன் உற்பத்திகளுக்கான பிரதித் தலைவர் நடவ் மெல்னிக் தெரிவித்தார். “இரகசியம் பேணப்பட வேண்டும் என்பது எமது நீண்டகால அக்கறையாகும். இறுதியான மறைகுறியாக்கத்தினைக் கடைப்பிடிப்பதன் ஊடாக இது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய மெருகூட்டலின் ஊடாக எமது பயனர்கள் மற்றும் இதனைப் பயன்படுத்திக் கதைப்பவர்களின் இரகசியத்துக்கு நாம் மேலும் அர்ப்பணிப்பாக உள்ளோம்” என்றார்.

Rakuten Viber பற்றி : 

Rakuten Viber நாங்கள் மக்களை இணைக்கிறோம். அவர்கள் யார், அல்லது அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது முக்கியமல்ல. எங்கள் உலகளாவிய பயனர் தளம் ஒருவருக்கொருவர் அரட்டைகள், வீடியோ அழைப்புகள், குழு செய்தி அனுப்புதல் மற்றும் அவர்களுக்கு பிடித்த வர்த்தகநாமங்கள் மற்றும் பிரபலங்களுடன் புதுப்பிப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற பல அம்சங்களுக்கான அணுகலைக் கொண்டுள்ளது. எங்கள் பயனர்களின் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ள பாதுகாப்பான மற்றும் இலவச சூழல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். Rakuten Viber, Rakuten Inc இன் ஒரு பகுதியாகும். ஈ-வர்த்தகம் மற்றும் நிதிச் சேவையில் உலகின் முன்னணியாளராகும். இது FC Barcelona வின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு சனல் என்பதுடன் Golden State Warriors அதிகாரப்பூர்வ உடனடி செய்தி மற்றும் அழைப்பு பயன்பாட்டுப் பங்காளராகும்.


Share with your friend