கொழும்பின் தனித்துவமான எதிர்கால பணியிட வசதியை வழங்கும் வகையில் தலைநகரின் இதயப் பகுதியில் காணப்படும் Havelock City இல் அமைக்கப்பட்டுள்ள Mireka Tower இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்ரமசிங்க அவர்களினால் வைபவரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது.
50 மாடிகளுடன் 600,000 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட தரம் ஏ முன்னணி பணியிட வசதியை வழங்கும் Mireka Tower ஆனது, நகரத்தின் காட்சியைத் தரக்கூடிய தூண்களின் இடையூறு அற்றதாகக் காணப்படுவதுடன், கொழும்பின் வானுயர்ந்த கட்டடங்களில் வணிக கட்டட வளாகத்துக்கான மற்றுமொரு அடையாளமாக அமைகிறது.
சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள Mireka Tower ஆனது, 18 ஏக்கர் கலப்பு அபிவிருத்தித் திட்டமான முன்னணி Havelock City திட்டத்தின் முக்கிய புள்ளியாகவும் விளங்குகிறது. ‘நகரத்துக்குள் நகரம்’ என்ற பாரிய அளவிலான இத்திட்டம் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட Shing Kwan Group நிறுவனத்தின் நிறுவுனரும், நிறுவுனத் தலைவரும், Overseas Realty (Ceylon) PLC நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான மறைந்த எஸ்.பி.டாவோ அவர்களின் புதுமைக்கருத்தின் உருவாக்கமாகும். Havelock City கலப்பு அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் அவர் இலங்கையின் தலைநகரில் மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் நகரமயமாக்கலின் ஊடாக நகரத்தின் தனித்துவத்தை புகுத்த முயன்றுள்ளார்.
2016ஆம் ஆண்டு தாவோ இறுதியாக இலங்கைக்கு வந்திருந்தபோது, அதாவது அவருடைய நூறுவருட கொண்டாட்டமாகவும் அமைந்த அந்த வருடத்தில், Mireka Tower இற்கான அடிக்கல்நாட்டுவிழா மற்றும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்தே 50 மாடிகளைக் கொண்ட இந்தக் கோபுரம் 2020 இல் உருவானது.
நகரத்தின் கட்டுமானக் கலையில் தனது இருப்பையும் சேர்த்துக் கொண்டுள்ள Mireka Tower, அன்பான வாடிக்கையாளர்களை உத்தியோகபூர்வமாக வரவேற்பதற்கு Havelock City இல் வானுயர்ந்து நிற்கிறது.
“நெகிழ்ச்சியான பௌதீக இடவசதி மற்றும் சேவை சார்ந்த வழிகாட்டல்களுடன் உயர்ந்த தரத்தில் பணியிட வசதியை வழங்கக் கூடிய வகையில் Mireka Tower உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டதையிட்டு நாம் இன்று பெருமையடைகிறோம். சிறந்த வடிவமைப்பு, சிறந்த கட்டுமானத் தரம் மற்றும் சிறந்த வசதி, சேவை என்பனவற்றை ஒன்றிணைத்து சிறந்த அனுபவம் மற்றும் படிப்பினையை வழங்கக் கூடிய வகையில் பணியிட வசதியை வழங்குவதில் Overseas Realty கொண்டிருக்கும் பல தசாப்த அர்ப்பணிப்பை இந்தக் கோபுரத் திறப்பு விழா பறைசாற்றுகிறது. பணியிட வசதியை வழங்குவதற்கு முன்னர் ஆர்வம் உருவாக்கப்பட்டிருப்பதுடன், ஊக்கமளிக்கக் கூடிய மற்றும் நவீன பணியிடங்களைத் தேடும் நிறுவனங்களை உள்ளடக்கியதாக எமது வாடிக்கையாளர்கள் அமைவார்கள் என நாம் நம்புகின்றோம்” என Overseas Realty (Ceylon) PLC நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ப்ரவிர் சமரசிங்ஹ தெரிவித்தார்.
அலுவலகக் கட்டடங்களுக்கான எதிர்காலத்துக்கு புதிய மதிப்பீட்டை ஏற்படுத்தியிருக்கும் Mireka Tower ஆனது, வணிக செயற்பாடுகளை சுமுகமாக முன்னெடுத்துச் செல்லக் கூடிய வகையில் நவீன அதிசொகுசு வசதிகளைக் கொண்டமைந்துள்ளது. இந்தக் கோபுரத்தின் தளங்கள் ஒவ்வொன்றும் இட முகாமைத்துவம் மற்றும் இலகுவான இடவடிவமைப்புக்களுக்கு ஏற்ற வகையில் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுள்ளன. தரம், செயற்பாடு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றைக் காண்பிக்கும் வகையில் LEED GOLD சான்றளிக்கப்பட்ட கட்டடம் என்ற ரீதியில் Mireka ஆனது, கணினிமயமாக்கப்பட்ட வாகனத் தரிப்பிடம், மின்தூக்கி மற்றும் கட்டட முகாமைத்துவ முறைமை போன்ற ஸ்மார்ட் உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டமைந்துள்ளது. இதற்கு மேலதிகமாக 100 வீத மின்சார மாற்றீடு, பெருநிறுவன அலுவலகங்களின் தேவைக்கு ஏற்ற வகையில் டேட்டா, தொலைத்தொடர்பு மற்றும் ஒலிகளைக் கடத்தக்கூடிய end-to-end fibre optic வசதிகளையும் இந்தக் கோபுரம் கொண்டுள்ளது.
அத்துடன், உடற்பயிற்சிக் கூடம், பயிற்சி மற்றும் கூட்ட அறைகள் போன்று பெருநிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளும் இங்கு காணப்படுகின்றன. 800 வாகனங்களைத் தரிக்கக் கூடிய இதற்காக ஒதுக்கப்பட்ட இரண்டு தளங்கள் காணப்படுகின்றன.
இந்தக் கோபுரத்துடன் Havelock City Shopping Mall இணைந்திருப்பதால் மருந்தகங்கள், வங்கி, தொலைத்தொடர்புசேவை போன்ற வசதிகளையும் மிகவும் சௌகரியமான முறையில் பெற்றுக்கொள்ள முடியும்.
கட்டடத்தின் உயர்நிலைகளை சரிபார்கும் நிலையில் வாடிக்கையாளராக HSBC Electronic Data Processing Lanka (Pvt) Ltd (HSBC EDPL) ஐ Mireka Tower விரைவில் வரவேற்கவுள்ளது. HSBC EDPL நிறுவனமானது எட்டாவது மாடியைத் தனது அலுவலகமாக மாற்றிக்கொள்ளவுள்ளது.
Havelock City (Pvt) Ltd நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள Mireka Tower, கொழும்பின் அடையாளமாக விளங்கும் கொழும்பு வர்த்தக மையத்தின் (World Trade Center Colombo) உரிமையாளரும், முகாமையாளரும் அதனை அமைத்தவருமான Overseas Realty (Ceylon) PLC நிறுவனத்தின் முழுமையான உறுப்பு நிறுவனமாகும். உள்நாட்டின் பணியிடங்களுக்கான வசதிகள் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதால் இந்தக் கோபுரத்தின் நிறைவானது Overseas Realty நிறுவனத்தின் விரிவான திறன் மற்றும் நிபுணத்துவத்தை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.