கொழும்பு துறைமுக நகரம் இலங்கையின் தேசிய நூலகத்திற்கு சிறுவர் நூல்களை நன்கொடையாக வழங்கி தனது ஆண்டு நிறைவு விழா மற்றும் சிறுவர் தினத்தை கொண்டாடியுள்ளது

Share with your friend

இலங்கையில் சமூகங்களை மேம்படுத்துவதற்கும் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் தனது பல்வேறு முயற்சிகளின் தொடர்ச்சியாக, கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரேயொரு முதலீட்டாளரும் பிரதான அபிவிருத்தியாளருமான CHEC Port City Colombo (CPCC), ஊக்கமளிக்கும் மற்றும் அறிவூட்டும் ““City Rising from the Ocean” என்ற சிறுவர் கதை நூலின் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்ட 2,500 பிரதிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கையில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக, கடலில் இருந்து பெறப்பட்ட நிலத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற முதன்முதல் திட்டமிடல் நகரமான கொழும்பு துறைமுக நகரத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஈடுபாட்டைத் தோற்றுவிக்கும் வகையில் எதிர்காலத் தலைமுறைகளை ஊக்குவிக்கும் நோக்குடன், 2021 ஆம் ஆண்டின் ஆங்கில மொழியில் முதலில் வெளியிடப்பட்ட நூலின் 2,000 பிரதிகள் அப்போது இலங்கையின் தேசிய நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தது. நூல் நன்கொடையுடன் சேர்ந்து, இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் தேசிய நூலகத்தில் சீன நூல் பகுதியை புனரமைப்புச் செய்யும் பணியையும் CPCC முன்னெடுத்துள்ளது.

இந்த ஆண்டு மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளின் நன்கொடையானது, இளம் சிந்தனையாளர்களிடையே வாசிப்பை ஊக்குவித்தல் மற்றும் கற்றல் ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலம் சமூகங்களுக்குள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த CPCC மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. தற்செயலாக, இலங்கையில் சிறுவர் தினத்தை கொண்டாடும் அதே வேளையில், கொழும்பு துறைமுக நகரத்தின் 8 ஆவது ஆண்டு நிறைவாகவும் இச்சந்தர்ப்பம் அமைந்துள்ளது. “City Rising from the Ocean” நூலின் 2,500 மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகள் அடங்கிய தொகுதியை தேசிய நூலகத்தின் பணிப்பாளர் நாயகமான திரு. டபிள்யூ. சுனில் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக CPCC ஐப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் CPCC இல் CIFC அபிவிருத்திக்கான உதவி நிறைவேற்றுப் பணிப்பாளரான திரு. ஷாலக விஜேயரத்ன அவர்களின் தலைமையில் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினரால் கையளித்து வைக்கப்பட்டது. உத்தியோகபூர்வ கையளிப்பு நிகழ்வில், தேசிய நூலகத்தின் பணிப்பாளரான பதமா பண்டாரநாயக்க, விரிவாக்க சேவைகளுக்கான உதவிப் பணிப்பாளரான இரோமி விஜேசுந்தர, நூலியல் கட்டுப்பாட்டுப் பிரிவின் உதவிப் பணிப்பாளரான அனோமா விஜேசிங்க மற்றும் நூலக ஆராய்ச்சி பிரிவின் உதவிப் பணிப்பாளரான திரு மைத்ரி ஜயசுந்தர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த திரு. விஜேயரத்ன, “கொழும்பு துறைமுக நகரம் வெறுமனே ஒரு இடம் என்று மட்டும் கூறி விட முடியாது. இது ஒரு வேறுபட்ட யோசனையின் நம்பிக்கையூட்டும் உணர்வு. ஒன்றுமில்லாமல் எதையும் தொடங்கி சாதிக்கலாம் என்ற எண்ணப்பாட்டின் அடையாளம், புத்திசாலித்தனம் மற்றும் அர்ப்பணிப்பின் மூலம், நீங்கள் அற்புதமான ஒன்றை உருவாக்க முடியும் என்பதன் வெளிப்பாடு. இதுவே நமது அடுத்த தலைமுறையினரிடம் நாம் புகுத்த விரும்பும் சிந்தனை மற்றும் விழுமியமாகும். ஆகவே இந்த நன்கொடையை தேசிய நூலகத்திற்கு வழங்குவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் அதே நேரத்தில், சர்வதேச சிறுவர் தினத்தைக் குறிக்கவும் இந்த வாய்ப்பை பயன்படுத்துகிறோம். இளம் சிந்தனையாளர்களை ஊக்குவிப்பதன் மூலமும், வளர்ப்பதன் மூலமும், வலுவூட்டுவதன் மூலமும், இலங்கை மக்களும், சர்வதேச பிரஜைகளும் ஒன்றிணைந்து தளைத்தோங்கக்கூடிய பிரகாசமான மற்றும் வளமான இலங்கையின் எதிர்காலத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று குறிப்பிட்டார்.  

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பல்வேறு பொது மற்றும் தனியார் இடங்களில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து வருவதால், கொழும்பு துறைமுக நகரம் படிப்படியாக பொதுமக்களுக்காக திறக்க ஆரம்பித்துள்ளது. உண்மையில், உத்தியோகபூர்வமாக திறத்து வைக்கப்பட்டதன் பிறகு, 700,000 மக்கள் ஜனவரி முதல் பெப்ரவரி வரையிலான இரண்டு மாதங்களில் கொழும்பு துறைமுக நகரத்தின் கடற்கரை நடைபாதையைப் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 53 ஏக்கர் பசுமை நிறைந்த இடங்கள், 2 கிமீ கடற்கரை மற்றும் மத்திய பூங்காவிற்கு 14 ஏக்கர் நிலம், நடைபாதைகள், நீர்வழிகள் மற்றும் பூங்கா இணைப்புப் பாதைகள் என மொத்தம் 91 ஹெக்டேயர் நிலம் கொழும்பு துறைமுக நகரத்திற்குள் பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரம் என்பது இலங்கையில் இதுவரையில் இடம்பெற்ற மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீட்டு அபிவிருத்தித் திட்டமாகும். இது இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒரு முக்கிய கூட்டுறவாகும். 2019 இல் கடலிலிருந்து நிலத்தை மீளப்பெறுதல் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புப் பணிகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைச் சட்டம் 2021 மே முதல் அமுலுக்கு வரும் வகையில் இயற்றப்பட்டது, கொழும்பு துறைமுக நகரமானது தெற்காசியாவின் செழிப்பான பிராந்தியத்தில் நிதியியல் மற்றும் நவீன சேவைகளுக்கான விசேட பொருளாதார வலயமாக மாறவுள்ளது. கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரே முதலீட்டாளரும், முதன்மை அபிவிருத்தியாளருமான, CPCC ஆனது கொழும்பு துறைமுக நகரத்தின் நிலத்தை கடலில் இருந்து மீளப்பெறுதல் மற்றும் உள்கட்டமைப்பில் 1.4 பில்லியன் டொலர் தொகையை முதலீடு செய்துள்ளது. ஆதன சொத்துகள் மேம்பாட்டிற்காக கொழும்பு துறைமுக நகரத்திற்குள் 15 பில்லியன் டொலர் தொகை வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமான காலப்பகுதியில் 8,000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை கொழும்பு துறைமுக நகரம் வழங்கியுள்ளதுடன், எதிர்காலத்தில் 83,000 தரமான வேலைவாய்ப்புக்களையும் உருவாக்கவுள்ளது. அத்துடன் ஒட்டுமொத்தத்தில் 273,000 பேருக்கு இடமளிக்கவுள்ளது. இது செயல்பட ஆரம்பித்ததும் ஆண்டுக்கு 13.7 பில்லியன் டொலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உருவாக்கும்.


Share with your friend