க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பாகும் ‘குருதலாவ’ கல்வி நிகழ்ச்சிக்கு பிரதான அனுசரணை வழங்கும் SLIIT

Share with your friend

இலங்கையின் முன்னணி அரசற்ற பட்டம் வழங்கும் உயர் கல்வி நிறுவனமான SLIIT, தேசிய ரூபவாஹினித் தொலைக்காட்சியுடன் இணைந்து குறித்த தொலைக்காட்சி  ஊடாக இவ்வருடம் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தயாராகிவரும் மாணவர்களுக்கு கல்விச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக ஒளிபரப்பப்படும் ‘குருதலாவ’ கல்வி நிகழ்ச்சிக்கு பிரதான அனுசரணை வழங்கியுள்ளது. 

இந்நாட்டின் பாடசாலை மாணவ மாணவியர்களின் அறிவு, அணுகுமுறை மற்றும் திறன்களைப் விருத்தி செய்வதற்கு நேரடியான மற்றும் மறைமுகான கல்வி நிகழ்ச்சிகள் பல தேசிய தொலைக்காட்சி ஊடாக முன்னர் இருந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிவரும் மாணவ மாணவியருக்கு ‘குருதலவா’ கல்வி நிகழ்ச்சி தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சி ஊடாக மீட்டல் வகுப்புக்களாக முன்னெடுக்கப்படுகின்றன. தற்பொழுது நிலவும் கொவிட் தொற்றுநோய் சூழல் காரணமாக கல்வித் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் நாட்டில் மிகவும் அனுபவம் மிக்க, பிரபல்யமான ஆசிரியர்கள் குழுவால் முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்ச்சியின் ஊடாக உயர்தரத்தின் கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் கலை ஆகிய பாடங்கள் உள்ளடக்கப்படுகின்றன. 

தற்போது பாடசாலை மாணவர்கள் எதிர்கொண்டுள்ள இந்த சவால் மிக்க சூழலில் பாடம் தொடர்பான அறிவு மாத்திரமன்றி ஆய்வு நடவடிக்கைகளை மனத்திடத்துடன் வெற்றிகரமாக முகங்கொடுக்க SLIIT அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதுடன், தேசிய தொலைக்காட்சி அலைவரிசையினால் முன்வைக்கப்பட்டுள்ள ‘குரு தலாவ’ கல்வி நிகழ்ச்சி இதற்குப் பெருமளவில் உதவி வருகிறது.

இந்த நிகழ்ச்சி கடந்த செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி முதல் நேரடியாக ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அமைச்சின் செயலாளர், ரூபவாஹினிக் கூட்டுத் தாபனத்தின் தலைவர் ரெஜினோல்ட் குரே, தேசிய தொலைக்காட்சியின் கல்விப் பிரிவின் பணிப்பாளர் எரின் விஜயகோன், SLIIT நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரி, உபவேந்தர் பேராசிரியர் லலித் கமகே உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கொவிட் தெற்றுநோய் சூழலுடன் இதுபோன்ற கல்வி நிகழ்ச்சிகளுக்கான தேவை மேலும் மேலும் அதிகரித்திருப்பதுடன், SLIIT நிறுவனம் தேசத்தின் குழந்தைகளைப் பலப்படுத்தும் நோக்கில் ஒன்லைன் முறையின் ஊடாக ‘சிப் சவிய’ கல்வி நிகழ்ச்சியின் ஊடாக பௌதீக விஞ்ஞானம், ICT போன்ற பாடங்களைக் கற்பிப்பதுடன், மாநாடுகள், செயலர்வுகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும், ஒன்லைன் கல்வி நிகழ்ச்சியின் ஊடாக இணையத் தொடர்பு வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாது இலங்கையிலுள்ள ஏனைய மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தேசிய தொலைக்காட்சி அலைவரிசையின் ஊடாக ஒளிபரப்பப்படும் குரு தலாவ கல்வி நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்க SLIIT முன்வந்துள்ளது. 

நாடு முழுவதிலும் உள்ள மாணவ மாணவியரின் அறிவை வளர்க்க வேண்டும் என்பது SLIIT  இன் பிரதான நோக்கம் என்பதுடன், 1999ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட SLIIT நிறுவனம் இதுவரை 12,000ற்கும் அதிகமானவர்களுக்கு அறிவைக் கொடுத்துள்ளது. இலங்கையில் உள்ள முன்னணி ஆசிரியர் குழுவுடன் மாணவர்களுக்குக் கல்வியை வழங்க SLIIT நடவடிக்கை எடுத்திருப்பதுடன், ஆயிரக்கணக்கான மாணவ மாணவியரின் முன்னேற்றத்துக்கான தேசிய தொலைக்காட்சி அலைவரிசையுடன் கல்வி நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து கொண்டிருப்பது இந்நாட்டு மாணவர்களுக்குக் கிடைத்த பாக்கியமாகும்.

இந்த “குரு தலாவ“ நிகழ்ச்சி தொடர்பான பிரசார நிகழ்வில் கருத்துத் தெரிவித்த SLIIT இன் பொறியியல் பீடத்தின் பீடாதிபதி சமன் திலகசிறி குறிப்பிடுகையில், ”சுவாரஸ்யமான வழியில் விரிவுரைகளை நடத்தி மாணவர்களை ஈர்ப்பது தற்பொழுது காணப்படும் தொலைதூரக் கல்வியில் சவாலாக இருக்கின்றபோதும், இது தொடர்பில் SLIIT ஊடாக கடந்த வருடங்களில் ஆசிரியர்களுக்குத் தெளிவுபடுத்தி அவர்களுக்கு செயலமர்வுகள் நடத்தப்பட்டன. இதன் ஊடாக இந்த சவாலை வெற்றிகொள்ள SLIIT இனால் அறிமுகப்படுத்தப்பட்ட Eduscope மென்பொருள் மூலம் பாடநெறிகள் மற்றும் விரிவுரைகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு மாணவர்கள் அதனைப் பின்னர் பார்வையிட முடிவதுடன், விரிவுரைகளின்போது மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கும் வாய்பை ஏற்படுத்துவதற்கும் SLIIT நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார். 

தேசிய தொலைக்காட்சியின் நுகசெவன நிகழ்ச்சியின் ஊடாக SLIIT இன் பிரதி உபவேந்தர் பேராசிரியர் நிமல் ராஜபக்ஷ நேரடியாக இணைந்து, இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகும் மாணவ மாணவியர் தேசிய தொலைக்காட்சி அலைவரிசையில் ‘குருதலாவ’ கல்வி நிகழ்ச்சிக்கு SLIIT வழங்கும் அனுசரணை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “இந்நாட்டிலுள்ள மாணவர்களின் கல்விக்கு தடை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இந்தத் தடையை நீக்குவதற்கு நிறுவனம் என்ற ரீதியில் பாரியளவில் ஒத்துழைப்பு வழங்கும் பொறுப்பு எமக்கு உள்ளது. தொற்றுநோய்க்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் கல்வி அமைச்சுடன் இணைந்து இணையம் ஊடாகக் கல்வி கற்பிக்கும் முறை தொடர்பில் ஆசிரியர்களை எமது நிறுவனத்துக்கு அழைத்துப் பயிற்சிகளை வழங்கினோம். நாம் கல்வி கற்பிக்க வேண்டிய முறை தொழில்நுட்பத்துடன் பார்க்கும்போது வேறுபடலாம். இற்றைக்கு ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னர் கரும்பலகையில் வெண் கட்டியைக் கொண்டு எழுதல் ‘Talk and Chalk’  என்ற முறையிலேயே கல்வி முறை காணப்பட்டது. தற்பொழுது நிலைமை முற்றாக மாறி மாணவர்களை மையாகக் கொண்ட கற்றல் முறையாக மாற்றமடைந்துள்ளது. இதில் தொழில்நுட்பம், இணையம், தொலைக்காட்சி போன்றவை மாணவர்களை மையாகக் கொண்ட கல்விக்கு பெரும் உதவியளிக்கின்றன. இந்தத் தொற்றுநோய்க்கு மத்தியில் எமது பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் ஒரு வாரத்துக்குள் இணையத்தின் ஊடாக மாணவர்களின் வீடுகளுக்கு கல்வியைக் கொண்டு செல்ல முடிந்தது. இந்தக் காலப் பகுதியில் எமது நிறுவனம் பரீட்சைகளை நடத்தி 2000 மாணவர்களை சமூகத்துக்கு வெளியிட்டுள்ளது. ‘குரு  தலாவ’ போன்ற ஒரு திட்டம் மாணவர்கள் தேர்வுக்கு எளிதாக பதிலளிக்க உதவுகிறது. இந்தத் திட்டம், தேர்வுகளுக்கு முன்பாக பயிற்சி அளிப்பதன் மூலம்  பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பெரும் உதவியாக உள்ளது. ஒரு நாடாக நாம் எதிர்காலத்தில் அறிவு சார்ந்த பொருளாதாரத்தை எதிர்பார்க்கிறோம். அதற்கு நாம் மிக உயர்ந்த கல்வியைப் பெற வேண்டும். இதற்காக, நாட்டின் கல்வி முறையை மேலும் மேம்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அந்த நிலையை அடைய தொழில்நுட்பம் அவசியம். ” என்றார்.

‘குருதலாவ’ நேரடி ஒளிபரப்புக் குறித்து SLIIT நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரி, உபவேந்தர் பேராசிரியர் லலித் கமகே கருத்துத் தெரிவிக்கையில், “அறிவை வளர்ப்பதன் ஊடாக வாழ்க்கையை வெற்றியடையச் செய்ய முடியும் என்பது SLIIT நிறுவனத்தின் நோக்கமாகும். மாணவர்களுக்கு பாடத்திட்டத்துக்கு அப்பால் சென்ற அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்க SLIIT தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது. உயர் கல்வி நிறுவனம் என்ற ரீதியில் இத்திட்டத்தில் இணைந்து கொள்ள விடுக்கப்பட்ட அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம். நாங்கள் கல்வி  அமைச்சு மற்றும் பாடசாலைகளுடன் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம்.  இந்தத் திட்டங்கள் மூலம், மாணவர்களுக்கு பாடப்பிரிவு மட்டுமின்றி, சிறந்த பிரஜைகளாக வாழ்வதற்கான முக்கிய பிரச்சினைகள், ஒரு பல்கலைக்கழகத்தில் எப்படிப் படிப்பது, அதை எப்படி ஒரு தொழில்முறை நிபுணராக எதிர்கொள்வது போன்றவற்றையும் கற்றுத் தருகிறோம். நாங்கள் முன்பே ‘குரு கெதர’ கல்வித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் பிள்ளைகளின் கல்விக்கு இதுபோன்ற பங்களிப்பைச் செய்வதற்கான வாய்ப்பை நான் ஒரு பெரிய கௌரவமாகக் கருதுகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.


Share with your friend