தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, எதிர்காலத் தலைமுறையினரின் அறிவு விருத்தி மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், தனது A/L Kuppiya சேவையை மேலும் விரிவாக்கம் செய்துள்ளது.
வெற்றிகரமான வாழ்க்கைக்கு கல்வி சிறந்த அடித்தளம் என்பதை SLT-MOBITEL புரிந்து கொண்டுள்ளது. குறிப்பாக, க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தம்மைத் தயார்ப்படுத்தும் மாணவர்களுக்காக, A/L Kuppiya எனும் தனது முன்னணி டிஜிட்டல் பயிலல் கட்டமைப்பினூடாக மாணவர்களுக்கு தமது இலக்குகளை எய்துவதற்கான புதிய ஆற்றல்கள் மற்றும் உள்ளம்சங்களை SLT-MOBITEL வழங்குகின்றது.
SLT இன் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் டிஜிட்டல் தீர்வுகளின் பயன்பாட்டின் துரிதப்படுத்தல் மற்றும் டேட்டா பாவனை அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், A/L Kuppiya இல் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய அம்சங்களினூடாக பாரம்பரிய வகுப்பறை கல்விக்கு அப்பால் உதவிகளை பெற மாணவர்களுக்கு வலுவூட்டல் எனும் உறுதி மொழி காக்கப்படும், மேலும் ஆசிரியர்களின் ஆதரவுக்கு மேலதிகமான உதவிகள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படும்.” என்றார்.
மேம்படுத்தப்பட்ட அணுகல் மற்றும் புத்தாக்கமான உள்ளம்சங்களுடன் மாணவர்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் A/L Kuppiya இனால் தற்போது ‘Kuppiya VOD’ அல்லது Video-On Demand சேவை, ‘Kuppiya Live’ நேரலை கற்பித்தல் கட்டமைப்பு மற்றும் ‘Kuppiya Store’ எனும் மாணவர்களுக்கு க.பொ.த உயர்தர புத்தகங்கள் மற்றும் காகிதாதிகள் கொள்வனவுக்கான e-வணிக கட்டமைப்பு போன்றன வழங்கப்படுகின்றன. இதர புதிய பெறுமதி சேர்ப்புகளில், ‘Tuition Handiya’, ‘After A/L’s’ மற்றும் ‘A/L Squad eka’ ஆகியன அடங்கியுள்ளன.
மாணவர்களுக்கு சிறந்த டிஜிட்டல் பயிலல் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் இலக்குடன், இந்த app தற்போது நான்கு அப்ளிகேஷன் கட்டமைப்புகளான Desktop app மற்றும் மூன்று மொபைல் appகளாக Google Play Store, Apple App Store மற்றும் Huawei AppGallery ஆகியவற்றிலிருந்து டவுன்லோட் செய்து கொள்ள முடியும். www.alkuppiya.lk எனும் இணையத்தளத்துக்கு விஜயம் செய்து அல்லது சம்பந்தப்பட்ட மொபைல் அப்ளிகேஷன் ஸ்ரோர்களில் ’A/L Kuppiya’ என தேடி டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.
இந்த app இனூடாக உயர் தரம் பயிலும் மாணவர்களுக்கு சகல பாடங்கள் தொடர்பிலும் பரிபூரண பயிலல் அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும். A/L Kuppiya இன் ‘Kuppiya VOD’ இனூடாக மாணவர்களுக்கு உயர் தரத்துக்கான சிறந்த தரம் வாய்ந்த வீடியோ பயிலல் அமர்வுகள் முன்னெடுக்கப்பட்டு, சுய கற்றல்ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்ளும் வசதிகள் வழங்கப்படுகின்றன. 21 பிரதான பாடங்கள் இதனூடாக வழங்கப்படுவதுடன், 1500க்கும் அதிகமான வீடியோக்கள் 60 க்கும் அதிகமான ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டுள்ளன.
’Kuppiya VOD’ இன் பாடங்களை கொள்வனவு செய்வதற்கு இரு வழிமுறைகள் காணப்படுகின்றன. 3 நாட்களுக்கு வரையறைகளற்ற பார்வையிடல் காலத்துடன் தனித்தனி வீடியோக்கள் அல்லது மாதாந்தம் கட்டணத்துக்கு ஒரு குறித்த ஆசிரியரின் சகல பாடங்களையும் ஒரு மாத காலத்துக்கு பார்வையிடுவது.
தெரிவு செய்யப்பட்ட ஆசிரியரிடமிருந்து பாட அறிவைப் பெற்றுக் கொள்வதற்காக வகுப்புகளுக்கு மாதாந்த கட்டணம் செலுத்துவதைப் போன்று, இந்த சந்தாவை மாதாந்தம் புதுப்பித்துக் கொள்ள முடியும் என்பதுடன், எந்தவேளையிலும் இடைநிறுத்திக் கொள்ள முடியும்.
மாணவர்களுக்கு எத்தனை வீடியோக்களையும் கொள்வனவு செய்ய முடியும் அல்லது ஆசிரியர்களின் பாடங்களை பார்வையிட முடியும். மேலும், சம்பந்தப்பட்ட வாசிப்பு குறிப்புகள் மற்றும் அவசியமான கையேடுகள் போன்றன வழங்கப்படுவதால், மாணவர்களுக்கு இலகுவாக அவற்றை பார்வையிட முடியும்.
‘Kuppiya Live’ சேவை என்பது நேரடி ஒன்லைன் கற்பித்தல் வசதியை ஆசிரியர்களுக்கு வழங்குகின்றது. புதிய பாட விடயங்களை கற்பிப்பதற்கு விசேட வகுப்புகளை ஏற்பாடு செய்வது மற்றும் சம்பந்தப்பட்ட மாணவர்களுடன் துரிதமாக தொடர்பாடல்களை பேணுவது போன்றவற்றுக்கு இது உதவுகின்றது. மேலும், மாணவர்களுக்கு வகுப்பறைக்கு நிகரான பயிலல் அனுபவமொன்றை இது ஏற்படுத்துகின்றது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகளை ஏற்படுத்தி பாடங்கள் தொடர்பான விடயங்களை ’Kuppiya Live’ ஊடாக தெளிவுபடுத்திக் கொள்ள முடியும். வகுப்பு அட்டவணைகள் தொடர்பான தகவல்கள் இந்தக் கட்டமைப்பில் காணப்படுவதுடன், வகுப்புகளில் பங்கேற்க முடியாத எந்தவொரு மாணவருக்கும், பின்னர் பதிவு செய்யப்பட்ட வீடியோவை பார்வையிட முடியும்.
ஒப்பற்ற ’A/L Kuppiya‘ app அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பல ஒன்லைன் மற்றும் ஓஃவ்லைன் கொடுப்பனவு முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றினூடாக வாடிக்கையாளர்களின் கொள்வனவு அனுபவம் மேம்படுத்தப்பட்டுள்ளது. பருவ கால மற்றும் விசேட சலுகைகள் போன்றனவும் app இனூடாக வழங்கப்படும்.
மாணவர்களுக்கு பயிலல் அம்சங்களுக்கான அணுகலை கொண்டிருப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய ‘Kuppiya Store’ இனூடாக பெறுமதி வாய்ந்த மற்றும் அரிதான புத்தகங்கள் மற்றும் இதர கற்றல் உபகரணங்களை ஒன்லைனில் கொள்வனவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் பொருட்கள் அவர்களின் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும்.
A/L Kuppiya ஊடாக மாணவர்களுக்கு மேலதிக கல்வி உதவியை பெற்றுக் கொள்வதை SLT-MOBITEL உறுதி செய்வதுடன், ஆசிரியர்களுடன் மாணவர்களை தொடர்புபடுத்தி உதவிகளையும் வழங்குகின்றது. ‘Tuition Handiya’ எனும் அம்சத்தினூடாக, மாணவர்களுக்கு ஆசிரியர்களை தேடி தெரிவு செய்து கொள்ள முடியும் என்பதுடன், ஆசிரியர்களுக்கு இலவச சிறுவிளம்பரங்களினூடாக தமது கற்பித்தல் தொடர்பான விளம்பரங்களை பதிவு செய்ய முடியும்.
கட்டமைப்பில் புதிய புத்தாக்கமான உள்ளம்சமாக ‘After A/L’s’ என்பது அமைந்துள்ளது. இதனூடாக முன்னணி கல்வியகங்களில் காணப்படும் பட்டப் படிப்புகள் மற்றும் அவற்றினால் வழங்கப்படும் கற்கைகள் தொடர்பான விவரமான விளக்கங்கள் மற்றும் தகவல்கள் போன்றன அடங்கியுள்ளன. மேலும் ‘A/L Squad eka’ என்பது இலவச மாணவர் சமூக கட்டமைப்பாக அமைந்திருப்பதுடன், சக மாணவர்களுடன் தமது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். மாணவர்களுக்கு community posts, comment மற்றும் polls முன்னெடுப்பது போன்ற அம்சங்களும் அடங்கியுள்ளன.
புதிய A/L Kuppiya சேவைகள் தொடர்பான மேலதிக தகவல்களை www.alkuppiya.lk எனும் இணையத்தளத்துக்கு விஜயம் செய்து பார்வையிட முடியும்.