சமூக ஒருங்கிணைப்பையும் நல்லிணக்கத்தையும் முன்னெடுத்துச் செல்லும் இலங்கை இளைஞர்கள்

Share with your friend

Global Communities இன் ஊடாக சர்வதேசஅபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனத்தின் (USAID)  நிதியுதவியுடன் சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டமைப்பு (IYAP) மூலம் நடைமுறைப்படுத்தப்படும் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க (SCORE) இளைஞர் செயற்பாடானது (SYA) இலங்கையின் இளைஞர்களை வெற்றிகரமாக வலுவூட்டுவதோடு பச்சாதாபம், அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரி என்பவற்றைக் கொண்ட அடுத்த தலைமுறையின் தலைவர்களை உருவாக்க உதவுகின்றது.

பயிற்சியாளர்களின் பயிற்சி : SYA (SCORE குழு, IYAP பணியாளர்கள் மற்றும் 14 மாவட்டங்களில் இருந்து பயிற்சி வழிநடத்துபவர்கள்)

SYA என்பது 18 முதல் 29 வயதிற்குட்பட்ட இளம் பராயத்தினரை இலக்காகக் கொண்டு அவர்களின் குடியுரிமை விழிப்புணர்வு, தலைமைத்துவத் திறன்கள், சமூக மேம்பாடுகளில் பங்கேற்றல் மற்றும் தீர்மானமெடுக்கும் செயன்முறைகள் என்பவற்றை மேம்படுத்துவதற்கான 12 மாதகாலத்   திட்டமாகும். SYA இன் இலக்கானது இளைஞர்கள் மூலமாகச் சமூக ஒருங்கிணைப்பையும் நல்லிணக்கத்தையும் முன்னேற்றுவதற்கான இலங்கையரின் முயற்சிகளை வலுப்படுத்துவதாகும்.. இளைஞர்களின் குடிமை ஈடுபாடு, இளைஞர் அமைப்பு, தலைமைத்துவம், மற்றும் வெளிப்புற அழுத்தங்களுக்கான நெகிழ்வுத்தன்மை  ஆகியவற்றை ஊக்குவிக்கும் தலையீடுகளையும் செயற்பாடுகளையும் கவனமாகக் கையாள்வதன் மூலமும், சமூக ஒருங்கிணைப்பையும்  நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கான திறன்களையும் ஆற்றல்களையும் அவர்களுக்கு வழங்குவதன் மூலமும் இது மேற்கொள்ளப்படுகின்றது.

SYA என்பது 3-கட்டங்களைக் கொண்ட ஒரு திட்டமாகும், இதில் 14 மாவட்டங்களில் இருந்து 280 பயிலுநர்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 பயிலுநர்கள் என்ற வீதத்தில் பயிற்சிக்கு முந்தைய துவக்க முகாமில் அவர்கள் பயிற்சி பெறுவார்கள். அதன்பிறகு, ஹோஸ்ட் நிறுவனங்களில் 4-மாத இன்டர்ன்ஷிப்பைப் பின்தொடர்வதற்கும், குறிப்பிட்ட கருப்பொருள்களின் கீழ் கேப்ஸ்டோன் செயற்பாடுகளைச் செய்வதற்கும் அவர்கள் வாய்ப்புகளைப் பெறுவர். 14 மாவட்டங்களும் அம்பாறை, அநுராதபுரம், மட்டக்களப்பு, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கண்டி, கிளிநொச்சி, மாத்தறை, மொனராகலை, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகும்.SYA பங்கேற்பாளர்களின் சுறுசுறுப்பான ஈடுபாட்டிற்கு மேலதிகமாக, திட்டமானது இரண்டு முக்கிய பணிகளைக் கொண்டுள்ளது. அதாவது இளைஞர் ஆலோசனை குழு மூலம் இளைஞர்களுக்கு வழிகாட்டுவதுடன்  ஆலோசனைகளையும் வழங்கும். அத்துடன் பல பயிற்சிப்பாசறைகள், மன்றங்கள் மற்றும் கொள்கை உரையாடல்கள் என்பவற்றையும் நடாத்தும்.

சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டமைப்பின் (IYAP) நிறுவுநரும் நிர்வாக இயக்குநருமான திருக்குமார் பிரேமகுமார் கூறுகையில், “SYA இதுவரை அடைந்திருக்கின்ற வெற்றியானது அணியில் உள்ள இளம் ஆற்றல்மிக்கவர்களாலும் பயிலுநர்களாலும்தான். அவர்கள் உரிமையையும் பொறுப்பையும் எடுத்துக்கொள்வதை நாம் பார்த்தோம், கற்றுக் கொள்வதற்கும் அவர்களின் சமூகத்திற்கு ஆதரவளிப்பதற்கும் அவர்கள் ஆர்வம் காட்டுவது ஈர்க்கக்கூடியதாக இருக்கின்றது. இத்திட்டமானது உள்ளூர் மாவட்ட அளவிலான அமைப்புகளிற்கும்/நிறுவனங்களிற்கும் அரசு அமைப்புகளுக்கும் இளைஞர்களின் ஆற்றலையும், அவர்கள் நிறுவனத்திற்கும் சமூகத்திற்கும் சொத்தாக இருப்பதை உணர்ந்து கொள்வதற்கான புதிய சூழலையும் உருவாக்கியுள்ளது. இளைஞர்களை அங்கீகரிப்போம் – அவர்கள் கேட்கப்பட வேண்டும் மற்றும் அவர்களின் உண்மையான ஆற்றலையும் அவர்கள் எவ்வாறு சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியும் என்பதையும் காண்பிப்பதற்கு வாய்ப்பை வழங்க வேண்டும்.”

பயிற்சிக்கு முந்தைய துவக்க முகாம்களின் போது ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 20 இளைஞர்கள் குறிப்பிட்ட கருப்பொருள் பகுதிகளின் கீழ் பயிற்சி பெற்றனர். கேப்ஸ்டோன் செயற்பாடு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு திட்டத்தை உள்ளடக்கியது. இது சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் நீதி போன்ற பல்வேறு கருப்பொருள் பகுதிகளின் கீழ் பயிற்சி மற்றும் இன்டர்ன்ஷிப்பை முடித்தவுடன் மாவட்ட இளைஞர் பங்கேற்பாளர்களால் வழிநடத்தப்படும்.

SYA ஆலோசனைக் குழுவில் 15 முதல் 20 செல்வாக்கு மிக்க அரச, சிவில் சமூக, இளைஞர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் உள்ளனர், இது SYA திட்டத்தை வழிநடத்த தன்னார்வ ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக அவர்கள் பணியாற்றுவதற்கும் இளைஞர்களின் பயிற்சிப்பணிகளுக்கு  ஆலோசனை வழங்குவதற்கும் ஆதரவளிக்கவும் அனுமதிக்கின்றது. இறுதிக் கட்டத்தில் இளைஞர் திறன் பயிற்சிகள்,குடிமை ஈடுபாடு மற்றும் தலைமைத்துவ வாய்ப்புகள் என்பற்றிற்கான  தடைகளை நிவர்த்தி செய்வதற்காக மன்றங்கள், பயிற்சிப்பாசறைகள், நிகழ்வுகள், பிரச்சாரங்கள் என்பவற்றை ஏற்பாடு செய்வதும் மற்றும்/அல்லது அரசு நிறுவனங்கள், CSO, இளைஞர் சங்கங்கள், ஆர்வலர்கள், வர்த்தக சபைகள், மகளிர் குழுக்கள் மற்றும் சமூக, மத மற்றும் வணிகத் தலைவர்கள் ஆகியோரிடையே உரையாடல்களை ஏற்பாடு செய்வதும் அடங்கும்.

2013 இல் ஸ்தாபிக்கப்பட்டுக் கொழும்பைத் தளமாகக் கொண்ட சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டமைப்பு (IYAP) என்பது இளைஞர்கள் தலைமையிலான/அடிப்படையிலான அமைப்பாகும், இது இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்துவதையும் அவர்களின் சமூகங்களுக்கும் நாட்டிற்கும் செய்யும் பங்களிப்பையும் நம்புகிறது. IYAP இன் நோக்கமானது இளைஞர் அமைப்பையும்  அவர்களின் சமூக நிலையையும்  வலுவூட்டுவதும் இளைஞர்களையும் நாட்டையும் பாதிக்கின்ற பொருத்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் அவர்கள் தலைமைப்  பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதையும் உறுதி செய்வதுமாகும்.


Share with your friend