சவாலான இக்காலகட்டத்தில்  பெற்றோரதும் பிள்ளைகளதும் மன ஆரோக்கியத்திற்காக பெற்றோர் தமக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை (Inner Child)  சர்வதேச சிறுவர் தினத்தன்று வெளிப்படுத்த வேண்டும் என சொஃப்ட்லொஜிக் லைஃப் கோருகின்றது.

Share with your friend

பெற்றோர்கள் தமக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை வெளிப்படுத்தி, தங்களதும் பிள்ளைகளினதும் நேர்மறைத்தன்;மையை ஊக்குவிக்;கவும், மன ஆரோக்கியத்தை அதிகரித்துக்கொள்ளவும் இம்முறை சர்வதேச சிறுவர் தினத்தை பயன்படுத்த வேண்டும் இலங்கையின் முன்னணி சுகாதார காப்புறுதி  நிறுவனமான சொஃப்ட்லொஜிக் லைஃப் கேட்டுக்கொண்டுள்ளது. அனைத்து இலங்கையர்களிடமும் ஒரு சிறந்த வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளதும் 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட இலங்கையர்களுக்கு பாதுகாப்பை வழங்கும்  வர்த்தக நாமம் என்ற வகையிலும் சொஃப்ட்லொஜிக் லைஃப், இந்த தொற்றுநோய்க்கு மத்தியில் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றது.

கொவிட்-19 தொற்று நிலைமை எமது வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வேறு வழியின்றி வீட்டிற்குள் அடைபட்டு கிடக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. ‘Social Beings’ இல்லாவிடின் சமூக உயிரினம் என்ற வகையில் சமூகம் மற்றும் ஏனைய மனிதர்களுடன் உள்ளக தொடர்புகளை பேணுவது அவசியம். எமக்கு முன்னர் சந்தோஷத்தை வழங்கிய அந்த நாளாந்த தொடர்புகள் தற்போது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.  இதனால் லொக்டவுன் நிலைமையுடன் முன்னர் காணப்பட்ட சவால்களுக்கு மேலதிகமாக, எவருடனும் உரையாடாமல் இருப்பது, வெளியில் புலப்படாது இருத்தல் போன்றவற்;றால் பாரிய மன அழுத்தம் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஏற்பட்டுள்ளது.  

துக்கம், பயம், நிச்சயமற்ற தன்மை, தனிமைப்படல், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான தொடர்புகள் குறைதல் மற்றும் அதிக நேரத்தை தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் போன்றவற்றில் செலவழித்தல் ஊடாக  மன சோர்வு ஏற்படுகின்றது. இதுதவிர பெற்றோரும் சோர்வடைவதால் அது பெரியவர்கள் மற்றும் பிள்ளைகளின் மன ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் ஆழமாக பாதித்துள்ளது. இதன் காரணமாக பெற்றோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெற்றோர்களும் வீட்டிலிருந்தவாறே வியாபார நடவடிக்கைகள் மற்றும் அலுவலக பணிகளை முன்னெடுக்கின்றனர். பிள்ளைகளுக்கான ஒன்லைன் கல்வியானது பெற்றோருக்கு கவலை,  மன அழுத்தம், மனச்சோர்வு போன்றவற்;றையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் தங்களால் இயன்றளவு பிள்;ளைகளின் பிரச்சிகனைகளை தீர்க்க முயற்சி செய்தபோதிலும், இப்பிரச்சினைகளை தீர்ப்பது சற்று சிக்கலாகவே உள்ளது.   

இத்தகைய உளவியல் ரீதியான சமூக சவால்களை சமாளிப்பதற்காக குறிப்பிட்டதொரு நடைமுறை இல்லை என உளவியல் ஆலோசகர் அவந்தி ஜெயசிங்க கூறுகின்றார். பெற்றோர் தமக்குள் காணப்படும் குழந்தைத்தனத்தை தினமும் ஒரு தடவையாவது வெளிப்படுத்தினால், வீட்டிற்குள் முழுமையான நேர்மறையான மாற்றத்;தை ஏற்படுத்தும்; என்பது சுவிஸ் மனநல மருத்துவர் கார்ல் யுன்ங் என்பவரால் ஆராய்ச்சி செய்யப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தனது வாடிக்கையாளர்களுக்கு உதவ இந்த நடைமுறையை பயன்படுத்தினார்.

‘ குழந்தை பருவத்தை கடந்தே நாம் அனைவரும் வந்துள்ளோம். எம் அனைவருக்குள்ளும் இருந்த   குழந்தை பருவமானது தூய்மையானது. நண்பர்களுடன் சிறுவயதில் விளையாடிய பல்லாங்குழி ஆட்டம் அல்லது தென்னை இலைகளால்  கிரீடம் செய்து விளையாடிய எமது குழந்தைப் பருவம் எம்மை விட்டு மறைந்துவிடவில்லை. இத்தகைய விளையாட்டுக்கள் எம்மை பொறுப்பு வாய்ந்த பெரியவர்களால் மாற்றுவதற்கும்  மற்றவர்களுடனான நமது உறவுகளுக்கும், அன்பு, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு பற்றிய முடிவை எடுக்கும் இடத்திற்கும் கொண்டு செல்வதற்கு நமக்குள் இருந்த அந்த குழந்தைத்தனம் அடித்தளமாக இருந்தது. பெற்றோர்கள் தங்களுக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை தினமும் 10 நிமிடங்களாவது வெளிப்படுத்தி, தாங்கள் சிறுவயதில் செய்ய விரும்பியதை செய்ய வேண்டும்.    இவ்வாறு செய்வதனால் லொக்டவுன் காரணமாக ஏற்பட்டுள்ள மன அழுத்தத்திலிருந்து விடுபட அது உதவும்.  மேலும் மகிழ்ச்சியான பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் உளவியல் சமூகத் தேவைகளுக்கு முக்கிய பங்காற்றுகின்றனர். அத்துடன் தமது பிள்ளைகளின் உணர்வுகளை அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் முடியும்’ என  உளவியல் ஆலோசகர் அவந்தி ஜெயசிங்க தெரிவிக்கின்றார். 

இதுதவிர பெற்றோர், தங்களை பிள்ளைகளை கொவிட் -19  வைரஸிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பையும் தம்வசம் கொண்டுள்ளனர். அவர்கள் தமது குழந்தைப் பருவத்திலிருந்தே விளையாடும் நினைவுகளை ஆழமாக ஆராய்ந்து, மகிழ்ச்சியான, கற்பனை உலகத்தை தமது வரையறைக்குள் உருவாக்க வேண்டும். ‘கூட்டாஞ்சோறு’ சமைத்தல், துணி அல்லது கயிறு ஊஞ்சல் கட்டுதல், தலையணை சண்டை நடத்துதல் போன்றவற்றை செய்யலாம். 

 ‘ குழந்தைகளின் சமூக, உணர்ச்சி, அறிவாற்றல் மற்றும் உடல் திறன்களை வளர்ப்பதற்கு விளையாட்டு அவசியமானது. விளையாட்டில் உரிய நேரம் செலவழிக்கும் பிள்ளையானது, மனதளவில் நன்கு சமநிலையான பெரியவர்களாக மாறும். இதுதவிர இது சமூக திறன்களை வளர்க்கிறது, குழந்தையை சிறப்பாக துண்டி அதன் செயற்பாடுகளை அதிகரித்து, புத்திசாலித்தனத்தை ஏற்படுத்துகின்றது. அத்துடன் மன அழுத்தத்தை குறைக்கின்றது. வயது வந்தவர்களுக்கான வளர்;சிக்கான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுக்கின்றது.  இப்போது பெற்றோர்களுக்கு தமது குழந்தைப் பருவத்தின் பொன்னான காலங்களை மீள உருவாக்க முடியும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். அதுதவிர முழு குடும்பத்தின் நல்வாழ்வை மேம்படுத்தவும், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் பெற்றோர், பிள்ளை பிணைப்பை வலுப்படுத்தவும் முடியும்’ என அவர் குறிப்பிட்டார்.  

‘உங்களுக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை வெளிப்படுத்துவது, உங்கள் கற்பனையை ஏற்றுக்கொள்வதிலிருந்து ஆரம்பிக்கின்றது. இது நம் மூளைக்கான சிந்தனையை அதிகரிக்கின்றது. ஒவ்வொரு நாளும் நம் ஆன்மாவிற்கு புத்துயிர் ஊட்டுகின்றது. இவ்வாரம் இலங்கையில் சிறுவர் தினம் கொண்டாடப்படும்போது, அனைத்து இலங்கையர்களும் தமக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை வெளிப்படுத்துமாறு கோருகின்றோம். அப்பாவித்தனம், விளையாட்டுத்திறன், அதிசயம், உணர்திறன், பிரமிப்பு, உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளின் இலவச வெளிப்பாடு, ஆர்வம் மற்றும் படைப்பாற்றல் ஆகியன  தங்கள் குழந்தைகளுடன் வலுவான உறவை வளர்ப்பதோடு, தொற்றுநோய்களின் போது வாழ்க்கையில் சிறந்த ஆரோக்கிய வெளிப்பாடுகளையும் வளர்த்துக் கொள்ள முடியும்’ என சொஃப்ட்லொஜிக் லைஃப், சந்தைப்படுத்தல் தலைவர் கவி ராஜபக்ஸ கூறினார்.  எனவே, இந்த சிறுவர் தினத்தில், சொஃப்ட்லொஜிக் லைஃப் அனைத்து பெற்றோர்களிடமும் தமது குழந்தைத்தனத்தை ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாது வெளிப்படுத்துமாறும், அதன்மூலம் செயற்திறன் கொண்ட மற்றும் நேர்மறையான சூழலை வீட்டுக்குள் ஏற்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கின்றது.


Share with your friend