சிறந்த விளையாட்டு நட்சத்திரங்கள் 220 பேரை கௌரவிப்பதற்கும், பாராட்டுவதற்கும் நட்சத்திர இரவு 2021 ஐ ஏற்பாடு செய்த SLIIT

Share with your friend

2019, 2020ஆம் ஆண்டுகளில் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் வெற்றிகளை ஈட்டிய 220 விளையாட்டு வீரர்களைக் கௌரவிப்பதற்கும், பாராட்டுவதற்கும் SLIIT இன் உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பிரிவு கவர்ச்சிகரமான வர்ண இரவு 2021 நிகழ்வை அண்மையில் நடத்தியது.

சுகாதாரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக இந்நிகழ்வு இரண்டு அமர்வுகளாக ஏற்பாடு செய்யப்பட்டன. முதலாவது அமர்வுக்கான பிரதம விருந்தினராக இலங்கை கொண்டாடிய கிரிக்கெட் வீரரும், ICC Hall of Fame இன் உறுப்பினருமான முத்தையா முரளிதரன் கலந்துகொண்டதுடன், இரண்டாவது அமர்வின் பிரதம விருந்தினராக இலங்கை ஒலிம்பியன்ஸ் தலைவர் சிரியான குலவன்ச கலந்துகொண்டார்.

2019, 2020ஆம் ஆண்டு காலப் பகுதியில் 12 விளையாட்டுப் பிரிவுகளில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய 220 வீர வீராங்கனைகளுக்கு இந்நிகழ்வில் SLIIT விருதுகளை வழங்கியது. 

பட்மின்டன் விளையாட்டில் தனது திறமையை வெளிப்படுத்திய புவனேக குணதிலகவுக்கு இந்த ஆண்டின் மிகச்சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது வழங்கப்பட்டது. இவர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் நான்காவது இடத்தையும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் 08 பேருக்குள் இடம்பிடித்திருந்தார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற Defence Open Badminton Championship, NCPBA திறந்த பட்மின்டன் போட்டி மற்றும் XLV தேசிய விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் இவர் ஆண்களுக்கான ஒற்றையர் மற்றும் இடர்டையர் பிரிவில் சம்பியன்ஸ் பட்டத்தை வென்றிருந்தார்.

இந்த வருடத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான பட்டத்தை கூடைப்பந்து, வலைப்பந்து மற்றும் தடக்களம் ஆகியவற்றில் சிறந்த பங்களிப்பை வழங்கிய தரிந்திஹி அலஸ் பெற்றுக்கொண்டார். இவர் SLIIT விளையாட்டு கவுன்ஸிலின் தலைவரும், SLIIT இன் கூடைப்பந்து அணியின் கப்டனுமாவார். இவருடைய காலப்பகுதியில், இவரின் தலைமைத்துவத்தின் கீழ் Futsal மற்றும் Tag Rugby ஆகிய புதிய விளையாட்டுக்கள் SLIIT இன் விளையாட்டு அரங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஏனைய பல்கலைக்கழகங்களுடனான போட்டிகளின் போது SLIIT அணிகள் வெற்றிகரமாக போட்டியிட்டதுடன், சுற்றுப் போட்டிகளில் சிறந்த இடங்களையும் பெற்றுக்கொண்டன.

உதைபந்தாட்டம் மற்றும் குரவளயட ஆகிய விளையாட்டுக்களில் சாதனைகளைப் பதிவுசெய்த ஒமல் அழககோன் SLIIT விளையாட்டின் இந்த வருடத்துக்கான சிறந்த சகலதுறை மாணவராகக் கௌரவிக்கப்பட்டார். அவரது சாதனைகளின் பட்டியலில் 2017 முதல் 2019 வரை SLIIT Futsal கேப்டன், SLIIT விளையாட்டு கவுன்சில் 2018 இன் துணைத் தலைவர் மற்றும் பல சுற்றுப் போட்டிகள், சம்பியன்ஷிப்களில் Futsal அணி வெல்வதற்கு ஆதரவளித்தமை என்பன உள்ளடங்குகின்றன.


Share with your friend