சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்காக ChildFund நிறுவனம்; இளைஞர்கள் சிறுவர் பாதுகாப்பு ஆலோசகர்களாவதற்கு அவசியமான வசதிகளை வழங்கும்

Share with your friend

ChildFund SriLanka நிறுவனம் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான இளைஞர் கூட்டணியிற்கான தலைமைத்துவப் பயிற்சி முகாம் ஒன்றினை அண்மையில் தம்புள்ளையில் நடாத்தியது. சுயாதீன இளைஞர் கூட்டணியான  AYEAC 2018ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதுடன், இது முதற்கட்டமாக ChildFund Sri Lanka நிறுவனத்தின் செயற்பாடுகள் காணப்படும் 10 மாவட்டங்களில் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. AYEVAC அமைப்பிலுள்ள 15-29 வரையான வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு நிறுவனத்தின் ஆதரவு வழங்கப்படுகிறது. சிறுவர்களின் பாதுகாப்பானது தேசிய ரீதியல் முக்கியத்துவம் வாயந்த பிரதான விடயம் என்பதை இவ்வமைப்பின் மூலம் அரசாங்கத்திற்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. கடந்ந ஆறு மாதங்களில் வெற்றிகரமாக மேற்கொண்ட இளைஞர் அணிதிரட்டல்களின் விளைவாக இதுவரை அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 750 இற்கும் அதிகமான இளைஞர் அங்கத்தவர்கள் இவ்வமைப்பில் ஒன்றிணைங்துள்ளனர்.

‘சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான இளைஞர் கூட்டணி’ (AYEVAC) ஆனது சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிப் பரிந்துபேசும் சிறுவர் மற்றும் இளைஞர் அமைப்பாக ChildFund Sri Lanka நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டது. சிறுவர்களுக்கு எதிரான உடல், உள, பாலியல் ரீதியான மற்றும் ஆன்லைன் மூலமான வன்முறைகளைத் தடுப்பது மற்றும் இவற்றிற்கு பதிலிறுப்பு வழங்குவதை இது உள்ளடக்கியுள்ளது. அனைத்து சிறுவர்களினதும் உரிமையைப் பாதுகாத்தல் என்ற ChildFund நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு இது மேலும் வலுச்சேர்க்கின்றது.  AYEVAC இற்கு ஆதரவு வழங்குவதன் ஊடாக ChildFund நிறுவனம் இலங்கை சிறார்களின் சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்பவற்றிற்காக முன்நிற்பதுடன், எதிர்கால தலைமுறையினரை மாற்றுவுதற்குமான பிரதிநிதிகளையும் உருவாக்குகின்றது.  

இளைஞர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தில் இந்த பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து குறித்த அனுபவத்தைப் பெற்று குழந்தைகளுக்காக குரல்கொடுப்பதற்காக வலுவான நிலையில் இருப்பதால் குழந்தைகளுக்காக வாதிடுவதற்கு இளைஞர்களுக்கு அதிக நம்பிக்கை கிடைக்கும் என ChildFund நிறுவனம் நம்புகின்றது. இந்த இளைஞர் இயக்கத்தின் குரலானது சிறுவர் பாதுகாப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அரசாங்கத்துக்கும், பங்குதாரர்களுக்கும் பரிந்துரைக்கும். எனவே அனைத்துக் கொள்கைகளும், நடைமுறைகளும் உகந்ததாக இருக்க வேண்டும்.

நாட்டின் 25 மாவட்டங்களிலிருந்தும் இன் 100ற்கும் அதிகமான இளம் தலைவர்களை ஒன்றாக சந்திப்பதற்கு ChildFund Sri Lanka நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முகாம் வசதிகளை உருவாக்கிக் கொடுத்தது. இளம் உறுப்பினர்களின் ஒருசில பெற்றோர், ChildFund Sri Lanka நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் பங்காளர்களும் இந்தத் தனித்துவமான நிகழ்வில் பங்கேற்றனர். தலைமைத்துவப் பண்புகள், சிறுவர் தொடர்பான விடயங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி எவ்வாறு பரிந்து பேசுவது என்பதைக் கற்றல், சிறுவர் பாதுகாப்பு விடயத்தில் தமது குரல்களை எவ்வாறு வழங்குவது என்பது பற்றி இந்த முகாமில் கவனம் செலுத்தப்பட்டது. AYEVAC உறுப்பினர்கள் மத்தியில் குழுவாக இயங்கும் முறையைக் கட்டியெழுப்புவது, AYEVAC இன் தற்போதைய தலைமைத்துவக் கட்டமைப்பை மீளாய்வு செய்து அவற்றை மெருகூட்டுவது, கண்காணிப்பு மற்றும் தலைமைத்துவப் பதவிகளுக்கு உறுப்பினர்களைத் தெரிவுசெய்வது போன்றவை குறித்தும் இந்த முகாமில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த இயக்கத்தின் நோக்கத்தை மேலும் மெருகூட்டி வலுப்படுத்த 2022 ஜுலை முதல் 2024 ஜுன் வரையான காலப் பகுதிக்கு திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு இங்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அறிவூட்டல், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், சமூகத்தை எவ்வாறு பாதிக்கிறது, அவர்களின் கருத்தை எவ்வாறு கூறுவது, AYEVAC தலைமைப் பதவிகளை மறுபரிசீலனை செய்தல், அமைப்பின் எதிர்கால இலக்குகள் மற்றும் தேர்தல் குறித்து திட்டமிடுதல் மற்றும் விவாதித்தல் ஆகியவையும் இந்த முகாமில் முன்னெடுக்கப்பட்டன. 

சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான சட்டங்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் முன்நிற்கவும் மற்றும் AYEVAC உறுப்பினர்கள் எவ்வாறு சமூகங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது ஏவ்வாறு என்பது பற்றியும் பிரதேச பொலிஸ் அதிகாரிகள்கள் மூலமாக AYEVAC இளைஞர்களுக்கு அறிவூட்டப்பட்டது. 

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சிறுவர்களைப் பாதுகாக்கக் கூடிய வெற்றிகரமான கொள்கைகள் தொடர்பில் குரல் கொடுப்பதற்காக இலங்கை முழுவதிலும் இளைஞர்களை ஒன்று திரட்ட ChildFund Sri Lanka நிறுவனமானது 2019ஆம் ஆண்டு முதல் AYEVAC உடன் இணைந்து செயற்பட்டு வருகிறது. 

சிறுவர் பாதுகாப்பு மற்றும் அதற்காக பரிந்துபேசுவது ChildFund Sri Lanka இன் முக்கிய செயற்பாடுகளில் ஒன்றாகும். AYEVAC கூட்டணியை ஆதரித்து தலையீடுகளை மேற்கொள்வதன் மூலம்  ChildFund Sri Lanka நிறுவனம் இவ்வமைப்பை வலுப்படுத்துவதுடன், குழந்தைப் பாதுகாப்பைக் கையாள்வதில் சமூகங்களை வலுப்படுத்தக்கூடிய திறனை வளர்ப்பதையும் உறுதி செய்கிறது.

AYEVAC உடனான ChildFund Sri Lanka இன் ஒருங்கிணைப்புத் தொடர்பில் ChildFund நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் திரு. நாளக சிறிவர்தன தெரிவிக்கையில், “இந் நாட்டில் உள்ள இளைஞர்களின் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்து, அவர்கள் இந்நாட்டின் பொறுப்பு வாய்ந்த பிரஜைகளாக மாறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது எமது நோக்கமாகும். சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்புத் தொடர்பில் அவர்களின் திறன்களை அதிகரித்தல், மாற்றத்துக்கான முகவர்களாக அவர்களை ஒன்றுதிரட்டல், அவர்களை வெளிக்கொணர்தல் மற்றும் அதற்கான வாய்ப்புக்கள், அவசியமான வசதிகளை வழங்கல் என்பன எமது செயற்பாடாகும். AYEVAC கூட்டயியிற்கு இந்த இடத்தை வழங்குவதுடன், நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கியமான பிரசாரத்திற்கு ChildFund நிறுவனம் பங்களிக்கிறது. ChildFund நிறுவனமானது ஒரு தொகுதி இளம் தலைவர்களை உருவாக்குவது மாத்திரமன்றி சிறுவர் தொடர்பான பாரிய  பிரச்சினைகளையும் அணுகுகிறது” என்றார்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதில் தங்களின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையில், இளைஞர்கள் கூட்டணி குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு பிரச்சாரத்தின் மூலம் 100,000 கையெழுத்துக்களை ஒன்றிணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொனராகலையைச் சேர்ந்த தேசிய செயற்பாட்டாளர் வருன ஹஷான் தெரிவிக்கையில், “நாடு முழுவதிலும் இவ்வமைப்பைச் சேர்ந்த தலைவர்களைச் சந்தித்து எமக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. இதுவரை நாம் ஆன்லைன் ஊடாகவே சந்தித்துள்ளபோதும், இந்த பயிற்சிமுகாமின் ஊடாக முதற் தடவையாக அனைவரையும் நேரடியாகச் சந்திக்க முடிந்துள்ளது. தலைமைத்துவப் பண்புகளை விருத்தி செய்வதற்கு இந்த முகாம் உதவியது. சமூகத்தின் மத்தியில் காணப்படும் சிறுவர் பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் சிறுவர் உரிமைகள் பற்றி கற்றுக் கொண்டதுடன், சிறுவர்கள் சார்பாக எமது குரல்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றியும் அறிந்துகொண்டோம். இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு ChildFund எடுத்த முயற்சிகளை நாம் பாராட்டுகின்றோம். சமூகத்தின் முதுகெலும்பாக இளைஞர்கள் இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், ChildFund எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நடாத்தும் என நம்புகின்றோம்” என்றார்.

ChildFund Sri Lanka இன் ஆதரவுடன் இணைந்து இளைஞர்கள் தாமாகவே குழந்தைப் பாதுகாப்புத் தொடர்பில் பரிந்து பேசுபவர்களாக மாறுவதற்கும், மற்றும் அவர்கள் மூலமாகவே எதிர்காலத்தில் மாற்றமொன்றை ஏற்படுத்தக்கூடிய பிரதிநிதிகள், எதிர்காலத்தலைவர்களை மேம்படுத்துதலை AYEVAC நோக்காகக் கொண்டுள்ளது. 


Share with your friend