சுவிஸ்-வடிவமைப்பில் பயிலல் பாடவிதானத்துக்காக SHMA மற்றும் VTA இலங்கை புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

Share with your friend

இலங்கையில் பரந்தளவு வியாபார ஈடுபாடுகளைக் கொண்ட, முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும், பவர் என அழைக்கப்படும் ஏ.பவர் அன்ட் கம்பனி பிரைவட் லிமிடெட்டின், சுவிஸ் ஹொஸ்பிட்டாலிட்டி அன்ட் மனேஜ்மன்ட் அகடமியின் (SHMA),  அண்மையில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையுடன் (VTA) புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தது. நாடு முழுவதிலும் காணப்படும் பயிலல் நிலையங்களில், நிலைபேறான வளர்ச்சிக்கான திறன்கள் (SSG) திட்டத்தை முன்னெடுப்பதற்காக கல்வி அமைச்சுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை அமைந்துள்ளது. 

2019 ஆம் ஆண்டு முதல் VTA உடன் முன்னெடுக்கப்பட்டிருந்த கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இந்தப் பங்காண்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது. திட்டமிடல் கட்டம் ஏற்கவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இன் ஏற்கனவே காணப்படும் VTA இன் பயிலல் நிலையங்களை மதிப்பீடு செய்வது மற்றும் தெரிவு செய்யும் செயன்முறையை SHMA தற்போது மேற்கொண்ட வண்ணமுள்ளதுடன், கட்டடங்களின் உட்கட்டமைப்பு மற்றும் சென்றடைவை மேம்படுத்துவது, கற்றல் திறன்களை மேம்படுத்துவதையும், தற்போதைய கற்றல் பொருளடக்கங்கள், பாடவிதானங்கள் மற்றும் கற்பித்தல் முறைகளை சர்வதேச நியமங்களுக்கு தரமுயத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.

2025 ஆம் ஆண்டு வரை முதற்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், மொத்தமாக 2,240 மாணவர்கள் பயிற்றுவிக்கப்படவுள்ளதுடன், VTA பயிலல் நிலையங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் பயிற்றுவிப்பாளரை பயிற்றுவிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை பின்தொடர்வார்கள். இதனூடாக, கற்பித்தல் திறன்கள் மேம்படுத்தப்படுவதுடன், புதிய மற்றும் பிரயோக வழிமுறைகளை பின்பற்றி, மாணவர்களுக்கு புதிய கல்வி அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் பணிகள் முன்னெடுப்பதற்கு வழிகோலப்படும். தொழில்நுட்ப திறன்களை மேம்பத்துவதற்கு அப்பால் சென்று, பிரத்தியேக விருத்தி மற்றும் மொழிப் பயிற்சி ஆகியவற்றை உள்வாங்குவதிலும் கவனம் செலுத்தப்படும்.

பொது-தனியார் நிதியளிப்பு பங்காண்மையின் அடிப்படையிலான, முழு SSG திட்டத்தின் நோக்கம், நாட்டின் பயிலல் நியமங்களை வலிமைப்படுத்தி, சர்வதேச தொழிற்துறைக்கு நிகரானதாக மாற்றியமைப்பதாக அமைந்திருப்பதுடன், அதனூடாக, 9 மாதங்களில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளக்கூடியவர்களாக தயார்ப்படுத்தி, பயிலல் என்பது, பிரயோக வழிமுறையைக் கொண்டதாக அமைந்திருப்பதுடன், திறன்களில் காணப்படும் இடைவெளியை குறைப்பது அல்லது நிவர்த்தி செய்வதாக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக, சர்வதேச ரீதியில் ஒன்றிணைந்த தகைமை வழங்கப்படுவதுடன், இலங்கையின் திறன்களில்லாத மற்றும் பகுதியளவு திறன் படைத்த இளம் வயதினருக்கும், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளுக்காக செல்ல எதிர்பார்ப்பவர்களுக்கும் சிறந்த தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கான திறன்கள் வழங்கப்படுகின்றன.  ‘Plug & Play’ அடிப்படையில் இந்தக் கற்கைநெறி வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பயிலுநர் மற்றும் பயிலல் நிலையங்களுக்கு பிரயோகமான மற்றும் சாத்தியக்கூறான பயிலல் மாதிரிகள் மற்றும் வழிமுறைகளை வழங்குவதாக அமைந்துள்ளது.

நாட்டின் 16 மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தமான 22 நிலையங்களுக்கான, களவிஜயங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், SSG திட்டத்தை ஆரம்பிப்பதற்கு மிகவும் பொருத்தமான நிலையத்தை தெரிவு செய்யும் வகையில் இந்த விஜயங்கள் அமைந்துள்ளன. 2023 ஜுலை மாதமளவில், ஆறு நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டு, 240 மாணவர்களுக்கு இன்றைய விருந்தோம்பல் முகாமைத்துவ உலகில் பணியாற்றுவதற்கு அவசியமான திறன்கள் ஒன்பது மாத காலப்பகுதியில் வழங்கப்படும் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும்.

திறன் கட்டியெழுப்பல் திட்டமானது, சுவிஸ் தொழிற்பயிற்சி திறன்கள் விருத்தி (VSD) பாடவிதானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் நிறுவப்பட்டுள்ளது. திறன்கள் இடைவெளியை நிவர்த்தி செய்யும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திருப்பதுடன், தரமான கல்வி நியமங்களை உள்வாங்கி, பெண்கள் பங்கேற்பை ஊக்குவித்து, இலங்கையை விருந்தோம்பலுக்கான திறன்கள் படைத்தவர்களைக் கொண்ட பகுதியாக திகழச் செய்வது மாத்திரமன்றி, சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகவும் திகழச் செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்தச் செயற்பாடுகள் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் என்பதில் சந்தேகங்களில்லை.

சுவிஸ் ஹோட்டல் மனேஜ்மன்ட் அகடமி, VET (Vocational Education Training) ஐ EHL நிபுணத்துவ டிப்ளோமா கற்கையை, முன்னணி விருந்தோம்பல் கல்வியகத்திடமிருந்து 1893 ஆம் ஆண்டு முதல் வழங்குவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளதுடன், இதுவரையில் 25000 க்கும் அதிகமான பழைய மாணவர்களை உலகளாவிய ரீதியிலிருந்து தயார்ப்படுத்தியுள்ளது. École hôtelière de Lausanne இன் 120க்கும் அதிகமான இனத்தவர்களை கொண்டுள்ளது. SHMA இனால் உலகத் தரம் வாய்ந்த கல்வி அதன் VET இனால் வழங்கப்படுவதுடன், EHL நிபுணத்துவ டிப்ளோமா கற்கை, உணவு மற்றும் பானங்கள் மற்றும் ஹோட்டல் செயற்பாடுகள் போன்ற பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.

SSG விருந்தோம்பல் சான்றிதழினூடாக, VET க்கு EHL நிபுணத்துவ டிப்ளோமா கற்கைகளுக்கு உள்வாங்குவதற்கான அடித்தளம் ஏற்படுத்தப்படுகின்றது. SHMA மற்றும் உலகின் முதல்தர ஹோட்டல் முகாமைத்துவ பாடசாலையான École hôtelière de Lausanne EHL இனால் வழங்கப்படுகின்றது. அண்மையில் நெஸ்லே லங்கா பிஎல்சியுடன் SHMA கைகோர்த்து, துறையைச் சேர்ந்த இளம் மற்றும் வளர்ந்து வருவோருக்கு திறன்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது. கூட்டாண்மை நிறுவனங்களை இலக்காகக் கொண்டு குறுங்கால கற்கைகளையும் SHMA முன்னெடுக்கின்றது. பிரிவுத் தலைவர்கள், முகாமையாளர்கள் மற்றும் முன் அலுவலக ஊழியர்களுக்கும், வரவேற்பு பகுதியில் பணியாற்றுவோருக்குமான ‘Corporate Etiquette Excellence’ இதில் அடங்குகின்றது.


Share with your friend