செலான் வங்கி தொடர்ந்து 14ஆவது ஆண்டாக Kedalla Art of Living 2025இன் Title Partnerஆக கைகோர்த்துள்ளது

Share with your friend

செலான் வங்கி பிஎல்சி மீண்டும் ஒருமுறை Kedalla Art of Living கண்காட்சியுடன் 2025ஆம் ஆண்டிற்கான Title Partnerஆக தொடர்ந்து 14ஆவது ஆண்டாக இணைந்துள்ளது. இலங்கையில் வாழ்க்கை முறை சார்ந்த மிகப்பெரிய, முதற்தர  கண்காட்சியான இது, 2025 நவம்பர் 14 முதல் 16 வரை BMICHஇல் ஒரே கூரையின் கீழ் பல்வேறு வாழ்க்கை முறை மற்றும் வீடமைப்புத் தீர்வுகளை காட்சிப்படுத்தவுள்ளது.

Title Partnerஆன செலான் வங்கி, வாழ்க்கை முறை மற்றும் வீடமைப்புத் தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட பரந்த வங்கிச் சேவைகளை வழங்கும். செலான் காட்சிக்கூடத்தில் வீடமைப்பு மற்றும் தனிநபர் கடன்கள், செலான் சூரிய மின்சக்தி கடன்கள், லீசிங் வசதிகள், கடனட்டைகள், நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகள், சொத்து மற்றும் பொறுப்பு சேவைகள் மற்றும் டிஜிட்டல் வங்கி சேவைகள் உள்ளிட்ட வங்கியின் பரந்துபட்ட சேவைகள் தொடர்பான தகவல்களை பார்வையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

கண்காட்சியின் போது, ​​செலான் வங்கியின் அர்ப்பணிப்புள்ள வீடமைப்புக் கடன் நிபுணர்கள் கடன் விண்ணப்பம் முதல் ஒப்புதல் வரை ஒவ்வொரு படிமுறையிலும் வாடிக்கையாளர்களுக்கு போட்டிமிக்க வட்டி வீதங்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட நிதி ஆலோசனைகளை வழங்கி, வழிகாட்டத் தயாராக உள்ளனர். ஆவணப்படுத்தல் செயல்முறை தொடங்கிய வேளையிலிருந்து தடையற்ற மற்றும் வெளிப்படையான அனுபவத்தை உறுதி செய்யும் பொருட்டு இந் நிபுணர்கள், செயல்முறையின் முன்னேற்றம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து தெரியப்படுத்துவார்கள்.

கடந்த வருட வெற்றியைத் தொடர்ந்து செலானின் சூரிய மின்சக்தி கடன்கள் இக் கண்காட்சியில் முக்கிய இடத்தைப் பிடிக்கும். இத் திட்டத்தின் கீழ், வங்கி தற்போது சுமார் 20 வணிக பங்காளர்களை கொண்டுள்ளதுடன் இலங்கை வீடுகள் நிலைபேறான ஆற்றல் தீர்வுகளை பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காக அதன் வலையமைப்பை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.

“Kedalla Art of Living உடனான எங்கள் நீண்டகால இணைவை தொடர்ந்து 14ஆவது ஆண்டாக தொடர்வதில் நாங்கள் பெருமையடைகிறோம். இந் நிகழ்வு, தங்கள் கனவு இல்லங்களை நனவாக்க, மேம்படுத்த அல்லது அதில் முதலீடு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுடன் நெருங்கி உரையாட ஒரு சிறந்த தளத்தை எங்களுக்கு வழங்குகிறது. வீடமைப்பு மற்றும் தனிநபர் கடன்கள் முதல் சூரிய மின்சக்தி கடன்கள் மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் வரை எங்களின் பரந்த அளவிலான நிதித் தீர்வுகள் ஊடாக தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் தங்கள் வாழ்க்கை முறை அபிலாஷைகளை நம்பிக்கையுடன் நிறைவேற்ற செலான் வங்கி தொடர்ந்து ஊக்கம் அளிக்கிறது.” என செலான் வங்கியின் தனிநபர் வங்கியியல் பிரதி பொது முகாமையாளர் யூஜின் செனவிரத்ன தெரிவித்தார்.  

Asia Exhibition and Conventions (Pvt) Ltdஆல் தொடர்ச்சியாக 19வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள The Kedalla Art of Living 2025 கண்காட்சியில் பல்வேறு வகையான வாழ்க்கை முறை பொருட்கள் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய 200இற்கும் மேற்பட்ட வர்த்தக காட்சிக்கூடங்கள் இடம்பெறும். இதில் வீட்டு அலங்காரம், real estate, தளபாடங்கள், வீட்டு உபகரணங்கள், டைல்கள், விளக்குகள், சமையலறைப் பொருட்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் உள்ளடங்குவதோடு இது வீட்டு உரிமையாளர்களுக்கும் எதிர்காலத்தில் வீடொன்றை சொந்தமாக்க எண்ணுபவர்களுக்கும் ஏற்ற இடமாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

செலான் வங்கியின் நிதித் தீர்வுகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, Kedalla Art of Living 2025இல் உள்ள செலான் காட்சிக் கூடத்தை பார்வையிடவும் அல்லது 011 200 88 88 என்ற விசேட இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.


Share with your friend