இலங்கையின் மிகப் பழைய மற்றும் முதன்மையான சீன உணவக வலையமைப்பான சைனீஸ் டிராகன் கபே தமது டுபாய் கிளையின் முதலாவது ஆண்டு பூர்த்தியை அண்மையில் கொண்டாடியுள்ளது. இந்த மைல்கல்லானது, சீன சுவையுடன் கூடிய உணவுகளை உலகம் முழுவதும் பிரபல்யப்படுத்துவதற்கு அவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. 1942 ஆம் ஆண்டு தொடக்கம் எமது நாட்டு வாசனைத் திரவியங்களை கொண்டு தயாரிக்கும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவுகளை நுகர்வோருக்கு வழங்கி வரும் சைனீஸ் டிராகன் கபே உணவகத்தின் டுபாய் கிளை கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. டுபாயின் அல் கராமா பகுதியில் இந்த உணவகம் அமைந்துள்ளது. இலங்கையைச் சேரந்த சீன உணவகமொன்று இலங்கைக்கு வெளியே சர்வதேச ரீதியாக தமது தொழில்முயற்சியை விரிவுபடுத்திய முதலாவது சந்தர்ப்பமும் இதுவாகும். “எமது டுபாய் கிளையின் முதலாவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடுவதில் நாம் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். பல்வேறு நாடுகளிலிருந்து வரும் பல்வேறு கலாசார அடையாளங்களை கொண்ட நுகர்வோர் இலங்கை மற்றும் சீன சுவைகளின் கலவையான எமது உணவுகளை உண்டு மகிழ்கிறார்கள். டுபாய் நாட்டில் எமக்கு கிடைத்த அங்கீகாரமானது, உலகெங்கிலும் சைனீஸ் டிராகன் கபே உணவகத்துக்குள்ள வரவேற்பையே பிரதிபலிக்கிறது.” என அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு உதேஷி தெரிவித்தார்.



சைனீஸ் டிராகன் கபே உணவகத்தின் நுகர்வோர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற உணவாக Hot Butter Cuttlefish உணவை குறிப்பிடலாம். 82 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பண்டைய சமையற்குறிப்பிலான இந்த உணவின் தனித்துவமான சுவையை ஒருவராலும் எளிதில் மறந்து விட முடியாது. இது பாரம்பரிய மரபையும் சுவையையும் இணைப்பதற்கு சைனீஸ் டிராகன் கபே உணவகத்திடமுள்ள ஆற்றலுக்கு சிறந்ததொரு உதாரணமாகும். நாசிகுரான், கடல் உணவு பிரைட் ரைஸ், டொம் யம் குன் போன்ற உணவுகளுக்கும் பெரும் கிராக்கி உண்டு. சைனீஸ் டிராகன் கபே மிகக் குறுகிய காலத்திலேயே டுபாய் மக்களிடையேயும் இலங்கையர்கள் மத்தியிலும் பெருமளவில் பிரபல்யமடைந்த உணவகமாக மாறியுள்ளது. சைனீஸ் டிராகன் கபே Noon Foods, Talabat, Careem, Deliveroo போன்ற பிரபலமான விநியோக நிறுவனங்களுடனும் கைக்கோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் தமக்கு தேவையான உணவுகளை வீட்டுக்கே தருவித்துக்கொள்வதற்கு நுகர்வோருக்கு வாய்ப்பு உண்டு. வருங்காலத்தில் மேலும் பல நாடுகளில் தமது உணவக வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.